தேதி: August 4, 2014
கிளிஞ்சல்கள் - 3
பர்ஃப்யூம் பாட்டில் மூடி
விருப்பமான நிற பேர்ல் பேப்பரிக் பெயிண்ட்
மெட்டாலிக் பெயிண்ட் (காப்பர் கலர்)
ஃபெவிக்கால்
க்லிட்டர்ஸ் - நீலம், பச்சை மற்றும் கோல்டு நிறங்கள்
தெர்மோகோல் பால்ஸ்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

மூன்று கிளிஞ்சல்களின் மீது பேர்ல் பேப்பரிக் பெயிண்டையும், பர்ஃப்யூம் பாட்டில் மூடியின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மெட்டாலிக் பெயிண்டையும் அடித்துக் காயவிடவும்.

படத்தில் காட்டியுள்ளவாறு மூடியின் உட்புறத்தைச் சுற்றிலும் தெர்மோகோல் பால்ஸை சொருகிவிடவும்.

அதன் வெளிப்புறத்தில் க்லிட்டர்ஸால் விருப்பமான டிசைனை வரைந்துக் காயவிடவும்.

மூன்று கிளிஞ்சல்களையும் சேர்த்து ஃபெவிக்கால் தடவி ஒட்டிவிட்டு, அதன் மேல் டிசைன் செய்துள்ள பர்ஃப்யூம் பாட்டில் மூடியை ஒட்டி காயவிடவும்.

காய்ந்ததும் மெழுகுவர்த்தியின் அடியில் சூடுகாட்டி லேசாக உருகியதும், பர்ஃப்யூம் பாட்டில் மூடியின் உள்ளே வைத்து ஒட்டவும். மிகச் சுலபமாக செய்யகூடிய கேண்டில் ஸ்டாண்ட் ரெடி.

Comments
வாவ்!
அழகோ அழகு. செய்து காட்டியவருக்கு என் பாராட்டுகள்.
- இமா க்றிஸ்
டீம்
ஐடியா சூப்பர்.. ரொம்ப அழகு
மக்களே
சிம்பிள் & நைஸ்... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கேண்டில் ஸ்டாண்ட்
சூப்பட் ஐடியா... நல்லா இருக்கு...
கலை