சிறு தானியங்கள்

சிறு தானியங்கள் பாக்கெட்டில் வாங்கும் போது அதில் கார்போஹைரேட் அதிகமாக உள்ளது.
அது உடம்புக்கு நல்லதா? மாவு சத்து உள்ளதால்தானே அரிசி குறைக்க சொல்கிறார்கள்.
விளக்கம் கூறுங்கள்.

//சிறு தானியங்கள்// எதைச் சொல்றீங்க என்று புரியல. //பாக்கெட்டில் வாங்கும் போது// என்று இல்லை. தானியங்கள் என்றாலே கார்போஹைரேட்தான்.

//உடம்புக்கு நல்லதா?// காபோவைதரேற்று உடலுக்கு நிச்சயம் அவசியம். அளவோடு எடுப்பது அதை விட அவசியம். //மாவு சத்து உள்ளதால்தானே அரிசி குறைக்க சொல்கிறார்கள்.// ஆமாம். நீங்கள் என்ன தானியங்கள் வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு ஏற்றபடி பதில் சொல்கிறேன்.

தவிடு, நார்ச்சத்து அதிகம் சேர்ந்துள்ள விதமாக தானியங்களை அரிசிக்குப் பிரதியாக சாப்பிடும் போது ஒப்பீட்டளவில் வழமையாக நீங்கள் உள்ளெடுக்கும் மாச்சத்தை விட குறைவான அளவு மாச்சத்தே உள்ளே போகும். மீதிக்குப் பிரதியீடாக நார்ச்சத்து உள்ளே போகும் என்பது மட்டும்தான் நன்மை. அதை விட பெரிதாக மாற்றங்களோ நன்மைகளோ எதுவும் இல்லை.

அரிசி உட்பட எந்தத் தானியமானாலும் சமைத்த பின்னால் அரைக் கோப்பை (150 ml) அல்லது அதைவிடக் குறைவாக உண்ண முடிந்தால் நல்லது. நாங்கள் சாப்பிடும் மீதி உணவுகள் வழியாகவும் எங்களை அறியாமல் நிறைய மாப்பொருள் உள்ளெடுக்கிறோம். கிழங்கு சமைத்தால் அதில் இன்னும் அதிகம். சாதத்துடன் கூட உண்ணப் போகும் மீதி உணவுகளையும் சாப்பிடப் போகும் டெசர்ட், கேக், பால், தேநீரில் சர்க்கரை இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் சாதத்தின் அளவைக் கணக்குப் பார்க்க வேண்டும். :-)

‍- இமா க்றிஸ்

கேழ்வரகு மற்றும் பாசிபயிறை முளைகட்டுவது எப்படி...

Ramya

இங்கு தேடிப் பார்க்காமல் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். :-) குறிப்பாகச் சட்டென்று கண்ணில் பட்டது இது - http://www.arusuvai.com/tamil/node/30003 வேறு முறைகளும் இருக்கின்றன. மன்றத்தில் பேசி இருக்கிறோம். நீங்கள் தேடிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்