diamonds

வைரம் பற்றி தெரிந்த தோழிகள் பதில் கூறுங்கள்,அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்,வைரத்தில் என்ன என்ன வகைகள் உள்ளன, 1ctஎன்றால் என்ன? அதன் விலை என்ன,எப்படி நம்புவது,தயவு செய்து தோழிகள் பதில் கூறவும் ..

பதிவிடும் முன் தேடி இருந்தா நிறைய தகவல் கிடைச்சிருக்கும், ஒரு தனி இழை ஏற்கனவே பேசின விஷயத்துக்கு வேஸ்ட் தானே துர்கா... :) சரி பரவாயில்லை, கீழே இருக்க லின்க் பாருங்க...

http://www.arusuvai.com/tamil/node/21498

ம்ஹூம்.. எல்லாரும் நான் பதில் சொல்லலன்னே சொல்றாங்கைய்யா... நான் திரும்ப காபி பேஸ் பண்ணிடுறேன்... அதுவே ஏற்கனவே காபி பேஸ்ட் பண்ணது தான் போல... இப்போ இன்னொருக்கா ரிப்பீட்டு...

இப்போது சில நாட்கள் முன் வைரம் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன்:

1. வைரம் வாங்கும் முன் அதன் "Certificate" உள்ளதா என்று விசாரியுங்கள். இது தான் வைரத்தின் தரம், எடை(carat - இது வைரத்தின் எடையை சொல்வது. karat - தங்கத்தின் தரத்தை சொல்வது. ), கட், கலர் எல்லா தகவலையும் சரியாக கொடுக்கும்.

2. Certificate என்பது வைரத்தின் 4 அம்சங்களை கொண்டு அதை மதிப்பீடு செய்து கொடுப்பது. (Cut, Color, Clarity, Carat)

3. ஒரு நல்ல வைரம் என்பது நிறமே இல்லாத நல்ல கட்'ம், க்ளாரிட்டியும் கொண்டது.

4. இவற்றை பல அனுபவம் உள்ளவர்கள் கண்டரிந்து அந்த வைரத்தை மதிப்பிட்டு certificate கொடுப்பார்கள்.

5. நம்ம ஊரில் GIA (Gemological Institute of America)certificate உள்ள வைரங்கள் கிடைக்கின்றன. அதுவே உலகில் முதல் தரம் வாய்ந்த வைரம் என்றும் சொல்கிறார்கள்.

6. பொதுவாக வைரத்தில் ஒரு carat என்பது 200 மில்லி. இது வைரத்தின் அளவை குறிக்கும். இதை வைத்தே வைரத்தின் விலை.

7. certificate'ல் இருக்கும் தரம் பற்றிய தகவல் வைத்து எந்த கடையில் எந்த தரம் உள்ள வைரம் என்ன விலை என்று நீங்க ஒப்பிடூ பார்த்து வாங்கலாம்.

8. தனிஷ்க் போன்ற கடைகளில் சொல்வது "Precious Stone என்றால் 18 karat தங்கத்தில் தான் பதிப்போம்". ஏன் என்றால் அதில் பதித்தால் கல் விழாது என்றும், தங்கத்துக்கு நல்ல finishing, கல்லுக்கு நல்ல பளபளப்பும் கிடைக்கும் என்றும் அவர்கள் சொல்வார்கள். இது நான் ஒசூரில் இருக்கும் தனிஷ்க் நகை செய்யும் இடத்தில் ஒருவர் சொல்லி கேட்டது.

9. நம்ம ஊரில் வைரம் போட தோஷம் உண்டு என்பார்கள். அதனால் இத்தனை Carat'கு மேல் உள்ள வைரங்கள் போட கூடாது என்றும் சொல்வார்கள். அது அவர் அவர் ஜாதகத்தை பொருத்ததுன்னு சொல்றாங்க. நான் அதை பார்த்ததும் இல்லை, அந்த அளவு பெரிய வைரங்கள் வாங்கியதும் இல்லை.

// - 1 வருடம் முன் அறுசுவையில் தோழி ஒருவருக்காக நான் கொடுத்த பதிவு. உங்களுக்கு பயன்படும்னு நினைக்கிறேன்.:) // - அப்படின்னு நான் 2012ல காபி பேஸ்ட் பண்ணது. மீண்டும் 2014ல ஒரு காபி பேஸ்ட் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றீ வனிதா ...நான் தேடாமல் புதிய இழை தொடங்கியதற்கு..மன்னிக்கவும்...வைரம் விலை பற்றி கூறுங்கள்.. 1ct vvs1 விலை என்ன என்று தெரிந்தால் கூறுங்களேன்...

ஹிஹிஹீ... என்னா நம்பிக்கை உங்களுக்கு :P நான் இதுவரை வைரம் வாங்கியதே இல்லைங்க. எனக்கு நிஜமாவே விலை தெரியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்