ஒரு மாத குழந்தைக்கு அலர்ஜி

என் ஒரு மாத குழந்தைக்கு முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு அது முகம் மற்றும் உடம்பில் பரவுகிறது இது பரவாமல் தடுக்க என்ன செய்வது? இதனால் என் குழந்தையின் நிறம் மாறிவிடுமா?பதில் ப்ளீஸ்.

//அலர்ஜி// என்று எப்படி நிச்சயமாகச் சொல்கிறீர்கள்! அப்படியானால் முதலில் என்ன காரணமோ அதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் காட்டவில்லையா? காட்டி அபிப்பிராயம் கேட்க வேண்டும் என்பது என் கருத்து. அது வரை நீங்கள் பயன்படுத்தும் பேபி க்ரீமையே பூசி விடுங்கள். வியர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அறையைக் காற்றோட்டமாக வைத்திருங்கள். துணி... சிந்தெடிக் இழைகள் இப்போதைக்கு வேண்டாம்.

//முகம் மற்றும் உடம்பில் பரவுகிறது// ம்... வாக்ஸ்சீன் எல்லாம் ஒழுங்காகக் கொடுத்தீர்களா?

//பரவாமல் தடுக்க// முதலில் இது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் நீங்கள். அதன் பின்னால் மீதி யோசிக்கலாம். பயமில்லாமல் ஒரு தடவை கொண்டு போய்க் காட்டிவிட்டு வாங்க.

//குழந்தையின் நிறம்// மாறாது. பயம் வேண்டாம். சின்னதாக புள்ளிகளாக அடையாளம் வந்தாலும் பிறகு சரியாகிவிடும்.

‍- இமா க்றிஸ்

Are you sure it is allergy. Bcoz I too have the same prob with my baby around 2months. Its kind of dots on her face. Our doctor said , don't face cream, and soap or wash. Just wash her face with warm water. Keep her face clean, if you feel more dryness, just apply little vaseline on your palms then apply on her face very gently.

Anbudan Kanchana Raja

காஞ்சனா சொல்வதும் சரிதான். குழந்தைக்கு சவர்க்காரம், க்ரீம் கூட பிரச்சினையாக இருக்கக் கூடும்.
நான் தடுப்பூசி பற்றிக் கேட்டது... மீஸில்ஸ் இல்லை என்று தெரிந்துகொள்வதற்காக.

‍- இமா க்றிஸ்

இமா மேம் & காஞ்சனா மேம் குழந்தையை வைத்து கொண்டு என்னால் உடனடியாக பதிவிடமுடியவில்லை தவறாக என்ன வேண்டாம். தங்கள் பதிவிற்க்கு மிக்கநன்றி.

//அலர்ஜி// என்று எப்படி நிச்சயமாகச் சொல்கிறீர்கள்

குழந்தையின் முகம் முழுதும் சிவப்பாக நிறைய சிறு புள்ளிகள் உள்ளது புள்ளிகள் உள்ள இடம் நிறம் மாறி dryயாக இருக்கிறது.

\\மருத்துவரிடம் காட்டவில்லையா?\\

குழந்தை நல மருத்துவரிடம்(child specialist) காண்பித்தோம்அவர் இது எதுவும் செய்யாது என்று கூறினார். பின் காஞ்சனா மேம் சொன்னதுபோல் சோப் எதுவும் போடமல் குளிக்கவையுங்கள் ஒரு மாதம் கழித்து வேறு ஒரு சோப் எழுதி தருகிறேன் என்று கூறினார்.அவரிடம் காண்பித்து 10 நாட்களாகிறது நான் சோப் எதுவும் போடாமல்தான் குளிக்கவைக்கிறேன். அப்பொழுது கன்னத்தில் மட்டும் இருந்தது இப்பொழுது முகம் முழுதும் பரவிவிட்டது.

\\அது வரை நீங்கள் பயன்படுத்தும் பேபி க்ரீமையே பூசி விடுங்கள்\\

நாங்கள் பேபி சோப் & பேபி பவுடரை தவிர வேறு க்ரீம் எதுவும் போடவில்லை

\\வாக்ஸ்சீன் எல்லாம் ஒழுங்காகக் கொடுத்தீர்களா?\\

வாக்ஸின் 1 மாதத்திற்குரிய அனைத்தும் போட்டுவிட்டோம்.

\\பயமில்லாமல் ஒரு தடவை கொண்டு போய்க் காட்டிவிட்டு வாங்க\\

அடுத்த வாரத்தில் ஸ்கின் டாக்டரிடம் போகலாம் என்றிருக்கிறேன்.

காஞ்சனா மேம் நிறம் மாறாதா பதில் ப்ளீஸ்.

Actually my baby had red n white dots in first 3months, then it reduced itself... I didn't put any baby cream. Just washed with soapy water. Dr said its called baby rash. No color changes on her skin. Just apply vaseline 2times a day, morning n before go to bed.. don't worry, baby will be alright...

Anbudan Kanchana Raja

எங்கள் குழந்தை பிறந்தபொழுது நார்மலாக‌ இருந்தான் ஆனால் ஆவரம்பூ, மஞ்சள் உபயோகித்த‌ பின்பு தான் அந்த‌ புள்ளிகள் வர‌ ஆரம்பித்தது அதனால்தான் பயமாக‌ உள்ளது.

Hai friend dont wry nenga unga babyku adikadi face la kiss panninalum ithumathiri dots varum or heat climatekuda reasona irukalam athu sekram sari agirum ok nenga romba bayapta skin dr ta ponga

OK don't worry, stop that turmeric n avarampoo for a while. After sometime, u can use it.

Anbudan Kanchana Raja

காஞ்சனா மேம் & சம்ருதா மேம் தங்கள் பதிவிற்க்கு நன்றி. என் குழந்தைக்கு தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்க‌ வைக்கிறேன். தற்பொழுது முகத்தில் உள்ள‌ புள்ளிகள் சிறிது ம‌றைந்து விட்டது. ஆனால் முகம் மட்டும் Dry ஆக‌ உள்ளது.

Athu poga poga sariyaidum. Newborn babies skin always will be very dry. After 3 months she will be very cute.. don't think too much about the dots, it will go away itself.

Anbudan Kanchana Raja

மேலும் சில பதிவுகள்