குடைமிளகாய் வறுவல்

தேதி: August 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

குடைமிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - சிறிது
எண்ணெய்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடங்கள் வறுக்கவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டுக் கிளறிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
மிளகாய் நன்கு வதங்கியதும் பொடித்த பொடியைச் சேர்த்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு ஒன்றாகச் சேரும்படி கிளறவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கிவிடவும்.
சுவையான குடைமிளகாய் வறுவல் தயார். மோர் குழம்பு மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இந்த குடைமிளகாய் வறுவல் செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

வறுத்து பொடி செய்து சேர்ப்பதால மிகவும் வாசனையாக இருக்கும்.

இதே முறையில் குடைமிளகாய்க்கு பதிலாக கத்திரிக்காயைச் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு இந்த‌ குடை மிளகாய் மசாலா. கண்டிப்பா ட்ரை பண்றேன். ரொம்ப‌ நல்லா இருக்கு. வித்யாசமான‌ முயற்சி.

எல்லாம் சில‌ காலம்.....

வித்தியாசமான‌ குறிப்புங்க‌, நல்லா இருக்கு.

very very taste dish.thank u