சோளத் தோகை மலர்கள்

தேதி: August 11, 2014

5
Average: 5 (3 votes)

 

சோளத் தோகை (Corn Husk)
ஸ்டாமின்ஸ் - தேவைக்கேற்ப
பச்சை / விரும்பிய கலர் டேப்
சற்று தடிமனான கம்பி - தேவைக்கேற்ப
ஸ்டாக்கிங் கம்பி - தேவைக்கேற்ப
ஃபுட் கலர் - பச்சை (இலைக்கு) மற்றும் விரும்பிய நிறத்தில் (பூக்களுக்கு)
இஸ்திரிப்பெட்டி
பழைய நியூஸ் பேப்பர்
வெள்ளை பேப்பர்
க்ராஃப்ட் க்ளூ
பென்சில்
கத்தரிக்கோல்
குறடு
நூல்

 

சோளத் தோகையைப் பிரித்தெடுத்து தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி விரும்பிய நிற ஃபுட் கலரை விட்டு, அதில் சோளத் தோகைகளைப் போட்டு அடுப்பில் வைக்கவும்.
தோசையில் நிறம் நன்றாக மாறுவதற்கு தண்ணீர்ர் கொதிக்கத் துவங்கி 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகலாம். இதே போல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பச்சை ஃபுட் கலர் கலந்து, அதில் சோளத் தோகைகளைப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
பிறகு அவற்றை தண்ணீரிலிருந்து எடுத்து நியூஸ் பேப்பரின் மேல் பரவலாக வைத்து 10 - 12 மணி நேரம் வரை நிழலிலேயே காயவிடவும்.
காய்ந்த பிறகு தோகைகள் சுருண்டு இருக்கும். அவற்றை இஸ்திரிப்பெட்டியால் (சுருக்கம் இல்லாமல்) தேய்க்கவும்.
வெள்ளைப் பேப்பரில் பென்சிலால் விருப்பமான இதழ் வடிவத்தை வரைந்து, அதை நறுக்கி எடுக்கவும். வெட்டிய வடிவத்தை மாதிரியாக வைத்து தோகைகளை வெட்டிக் கொள்ளவும்.
அரும்பு செய்வதற்கு தோகையை சிறு துண்டாக வெட்டி பென்சிலின் முனையில் வைத்து கோன் வடிவில் சுருட்டி வைக்கவும்.
ஒரு கம்பியின் முனையை சிறு வளைவாக வளைத்துக் கொள்ளவும்.
வளைத்த கம்பியை சுருட்டி வைத்துள்ள அரும்பின் நடுவில் விட்டுப் பிடித்து, கம்பி வளைவிற்குக் கீழே நூலைச் சுற்றி கட்டி அரும்பைத் தயார் செய்து வைக்கவும். (இவ்வாறு கம்பியை வளைத்துவிட்டுச் செய்வதால் அரும்பு உருவிக் கொண்டு வராமலிருக்கும்).
இதே போல விரும்பிய இலை வடிவம் வரைந்து வெட்டியெடுத்து, பச்சை நிறத் தோகையில் இலைகள் வெட்டி எடுக்கவும். இப்போது மலரின் இதழ்கள், அரும்புகள் மற்றும் இலைகள் தயார்.
ஸ்டாமின்ஸை கம்பியால் ஒரு சுற்று சுற்றி முடுக்கிக் கொள்ளவும்.
பிறகு அதைச் சுற்றிலும் ஒவ்வொரு இதழாக வைத்து நூலைச் சுற்றிக் கட்டவும். (பூ கட்டுவது போல் கட்டிக் கொண்டே வரவும்).
ஒரு சுற்று முடிந்ததும் அடுத்து இரண்டு இதழ்களின் நடுவில் ஒரு இதழ் வருவது போல் வைத்து நூல் சுற்றிக் கட்டவும்.
மலர் தயார். இதழ்களை வெளிப்பக்கமாக வளைந்து வருவதற்கு அதிகமாகச் சிரமப்படத் தேவையில்லை. தோகையை இஸ்திரிப்பெட்டி வைத்து தேய்த்து எடுத்தாலும், சற்று வளைந்து தான் இருக்கும். அதனால் வெட்டியெடுத்த பிறகு சற்று வளைவாகவே தான் இருக்கும். இதழை வைத்துக் கட்டும் போது வளைவான பகுதி வெளிப்பக்கம் இருக்குமாறு வைத்துக் கட்டவும். (அவ்வாறு வளைவாக இல்லையென்றாலும் நூலால் கட்டிய பிறகும் கூட வளைத்துவிடலாம்).
வழக்கமாக பூக்கள் செய்யும் போது பூவின் காம்பு பகுதியில் டேப் சுற்றுவது போல, லேசாக க்ராஃப்ட் க்ளூ தடவிக் கொண்டு டேப்பை சுற்றவும். விரும்பிய இடங்களில் இலை மற்றும் அரும்புகள் வைத்துச் சுற்றவும். (அரும்பின் பக்கத்தில் வரும் பூக்களை ஸ்டாக்கிங் கம்பி கொண்டு செய்யவும்).
முதலில் தடிமனான கம்பியில் செய்த பூவுடன் தயார் செய்த அனைத்தையும் இணைத்து டேப் சுற்றிக் கொண்டே வரவும். இணைப்பது உங்கள் விருப்பமே. (அரும்பு மற்றும் இலை எங்கெங்கு இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து, உங்கள் விருப்பத்திற்கேற்ப இணைக்கலாம்).
அழகான சோளத் தோகை மலர்கள் (Corn Husk Flowers) தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் வனி. கொள்ளை அழகு. கலக்குது.
என்னால் டிசெம்பரில் தான் செய்து பார்க்க இயலும். அப்போதுதான் இங்கு சீசன். ;(

‍- இமா க்றிஸ்

ஆகா.. ஆகா.. கலருடன் தோகை மலர்கள் கொள்ளை அழகு. கலக்குறீங்க போங்க.

உன்னை போல் பிறரை நேசி.

அழகு : ) எப்போ இந்த‌ குறிப்பு வரும்னு பார்த்துக்கிட்டே இருந்தேன். சோள‌ தோகைக்காக‌ வெய்ட்டிங். கிடைத்ததும் செய்துப்பார்த்து விட்டு எப்படி செய்தேன் நு சொல்றேன்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

உண்மையான‌ மலர்கள் போல் மிகமிக‌ அழகா இருக்கு வனி.Superb.

எதை கையில் தொட்டாலும் உயிர் வந்திடுது. நமக்கெலாம்... என்னத்த சொல்றது. நீங்கெல்லாம் விடிய விடிய விழித்திருப்பதில் அர்த்தம் இருக்கு. வாழ்க வனி வளர்க அறுசுவை. நான் இப்படி கமண்ட் போடுவதோடு நிறுத்திக்கிறேன்ன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

என்னால் பதிவு போடாமல் இருக்க முடியலை........வனி கட்சியில் எனக்கு சீட் உண்டு தானே?

கிராப்ட் எப்பொழுதும் போல் அசத்தல்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாவ். சூப்பர். வெரி நைஸ். எப்போ வரும்னு
இதை, இதைத் தான் எதிர்பார்த்தேன். கட்டாயம் செய்து பார்ப்பேன் வனி. ஒரு ஐடியா,
கரும்புத் தோகையில் கூட‌ செய்யலாமோ ?

ரொம்ப‌ ரொம்ப‌ அழகா இருக்கு வனி. கூடிய‌ விரைவில் ட்ரை பண்றேன். முன்னாடி சொன்னதை எல்லாம் செய்துட்டியான்னு கேட்காதீங்க‌. விரைவில் எல்லாமே செய்யப்படும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டீம்... அழகாக குறிப்பை எடிட் பண்ண உங்ககிட்ட தான் கத்துக்கணும். சூப்பர். தேன்க்ஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மலர்கள் மிகவும் அருமையாக இருக்கு.

இங்கே இப்பலாம் எப்பவும் சீசன் போல இமா... அமெரிகன் கார்ன் அதிகமா எப்பவும் இருக்க மாதிரி தெரியுது. கிடைக்கும் போது செய்து பாருங்க :) நன்றி இமா.... ஊக்கப்படுத்தி ஒரு குறிப்பா கொடுக்க வெச்சதே நீங்களும் தோழிகளும் தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அறுசுவைக்கு அனுப்புவது என்றால் சும்மா வரலாமோ... வண்ணமயமாகத்தான் இருக்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை டெடி அனுப்பச் சொல்லி வனி நோ சொல்வேனோ? மாட்டனே. குட்டி டீச்சரம்மாவாச்சே. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :) படத்தை அட்மின்கு அனுப்பினால் எனக்கு கிடைக்கும். இல்லையானால் இதே ஐடியில் முகபுத்தகத்தில் இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா!! உங்க பதிவு பல இடங்களில் இன்ப அதிர்ச்சி கொடுக்குதே :) நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//எதை கையில் தொட்டாலும் உயிர் வந்திடுது// - எதாச்சும் சிலையை தொட்டு சோதிச்சுடுவோமா?? ;) விடிய விடிய முழிச்சிருக்கது வேற கதை... தூக்கம் வராத பிரெச்சனை. ஆனாலும் நான் விழித்திருக்கும் போதெல்லாம் உங்ககிட்டயே சிக்குறேன் பாருங்க. அங்க நிக்கறீங்க நீங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிவு போடாம இருந்திருந்தா தான் பிச்சு பிடிங்கியிருப்பேன் ;) நீங்க எப்பவும் நம்ம கட்சி தான். நான் உங்க க்ராஃப்ட்களுக்காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன். மறந்துடாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நீங்க எல்லாரும் தந்த ஊக்கத்தால் தானே இவர் இங்க வந்தார். கரும்புத்தோகைன்னா??? கரும்பு மேல இருக்குமே அதுவா? முடியும்னு தான் நினைக்கிறேன்... சீசன் வரட்டும் ட்ரை பண்ணுவோம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா... எவ்வளவு நாளுக்கு அப்பறம் என் குறிப்பில் உங்க பதிவு வருது. மொபைலுக்கும் மொபைல் ஆப்ஸ்க்கும் கோவில் கட்டணும் ;) தேன்க்யூ கவிசிவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செம சூப்பரா இருக்கு.. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்க க்ராஃப்ட் வந்துருக்கு.. வழக்கம் போல் அசத்தலா இருக்கு..

கலை

ஆமாம் நேரமே இல்லாமல் இருந்தேன் கலை... இனி கட்டாயம் இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும்... :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா