தேதி: August 11, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
செல்ஃப் ரெய்சிங் மாவு /மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - அரை கப்
முட்டை - ஒன்று
தேங்காய் துருவல் - அரை கப்
தேங்காய் பால் - 2 (அ) 3 தேக்கரண்டி
மார்ஜரின் (Margarine) - 100 கிராம்
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

மார்ஜரினுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

முட்டையைத் தனியாக அடித்து, மார்ஜரின், சர்க்கரை கலவையுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

க்ரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும்.

அதனுடன் தேங்காய் பால் சேர்த்து, சிறிது சிறிதாக மாவையும் சேர்த்துப் பிசையவும்.

பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பிசையவும்.

மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

பிறகு மாவை சப்பாத்தியை விட சற்று தடிமனாக தேய்க்கவும். விரும்பிய வடிவ குக்கி கட்டரால் வெட்டியெடுத்து, ட்ரேயில் அடுக்கி மைக்ரோவேவில் வைத்து மீடியம் ஹையில் 3 அல்லது 4 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

சுவையான கோக்கனட் குக்கீஸ் ரெடி.

விரும்பினால் குக்கீஸின் மீது சிறிது சர்க்கரைத் தூவி, நடுவில் திராட்சை அல்லது நட்ஸ் வைத்து பேக் செய்யலாம்.
அவரவர் பயன்படுத்தும் மைக்ரோவேவைப் பொறுத்து நேரம் மாறுபடும். நேரம் அதிகமாகிப் போனால் தீய்ந்துவிடும் வாய்ப்புள்ளது. முதலில் 3 நிமிடங்கள் வைத்து பார்த்துவிட்டு, தேவையெனில் மீண்டும் வைத்தெடுக்கவும்.
Comments
நித்யா
கலக்கல் குக்கிஸ்.
Be simple be sample
நித்யா
குக்கீஸ் சூப்பர்.
கேக்ஸ் & குக்கீஸ் செய்யனும்னா அவன்ல செய்தா தான் நல்லா வரும்னு சொல்றாங்க, நீங்க எல்லாமே மைக்ரோவேவ்லயே செய்யறீங்களா?
நீங்க அப்படி என்ன ஸ்பெஸல் மைக்ரோவேவ் வெச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
nithi
வனிதா விட்டத நீங்க கன்டினியூ பண்றீங்களா?
அது எப்டி? நீங்க செய்ற அப்போலாம் கேக் குக்கீஸ் நல்லா சாஃப்டா வருது. எனக்கு மட்டும் துணி சோப் மாறி வருது?
என்ன செய்றீங்க? எதாவது இங்க சொல்லாம தனியா ரகசியமா எதாவது சேக்கறீங்களா?
எல்லாம் சில காலம்.....
நன்றி
குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.
ரேவதி நன்றி.
அனு நன்றி.நானும் முதலில் அப்படிதான் நினைத்து செய்யாமல் இருந்தேன்.90 சதவிதம் நல்லா வந்தது. நான் சோல்ஸ்டர் மைக்ரோவேவ் வைத்துள்ளேன் மா.
பாலனாயகி மைக்ரோவேவில் செய்வது பற்றி தோழிகள் வனிதா கிட்ட கேட்டு இருந்தாங்க.அதான் நான் எனக்கு தெரிந்ததை செய்து காட்டியுள்ளேன்.ரகசியம் ஏதும் இல்லை பா.