slow learner

அனைவருக்கும் வணக்கம்
என் குழந்தை ஸ்லொ லேர்னாரா இருப்பாளோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கு. ஹோம் வொர்க் செய்ய ரொம்ப அடம் பிடிக்கிறாள் ஆனால் ஸ்கூல் செல்ல அடம் பிடிப்பது இல்லை. அவள் நன்றாக படிக்கவைப்பது எப்படி என்று கூறுங்கள்.படிப்பில் ஆர்வம் வரவைப்பதற்கு ஆலோசனை தாருங்கள்.

பதில் கூறுங்கள் வயது 3 தான் ஆகிறது. இருந்தாலும் இபோழுதே மாற்றாவிட்டால் என்ன ஆகும் என்று பயமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் யாரிடமும் பேச மறுக்கிறாள்.guest வீடிற்கு வந்தால் அமைதியாகி எனக்கு பின்னால் பதுங்கி கொள்கிறாள். அவளது பயத்தை போக்கவும் வழி சொல்லுங்கள். பயந்த சுபாவத்துடன் இருக்கிறாள் மாற்றுவதற்க்கும் வழி சொல்லுங்கள்
.

please help me

//வயது 3 தான் ஆகிறது//

பிரச்சனை அவரிடத்தில் இல்லை என்பது மட்டும் தெரிகின்றது.

அட்மின் சொன்னதையேதான் நானும் சொல்ல வந்தேன். எதை வைத்து இப்போதே 'ஸ்லோ லர்னர்' என்று முடிவு கட்டினீர்கள்! குழந்தைப் பராயம் என்பது... போனால் வராது. ஹோம் ஒர்க்... மூன்று வயதில்!! படிப்பு வருவதற்குப் பதில் உங்கள் மேல் பயமோ சலிப்போ வந்துவிடக் கூடாது. அவசியம் என்றால் விளையாட்டாக நீங்களும் சேர்ந்தே செய்யுங்க. மற்றவர்களின் குழந்தைகளோடு உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.

//இபோழுதே மாற்றாவிட்டால்// நீங்க மூன்று வயதில் செய்யாத எதையும் உங்கள் பிள்ளையிடம் எதிர்பார்க்க வேண்டாம். //யாரிடமும் பேச மறுக்கிறாள்.guest வீடிற்கு வந்தால் அமைதியாகி எனக்கு பின்னால் பதுங்கி கொள்கிறாள். // ஈஸியா விட்டுருங்க. எல்லாம் தன்னால் மாறும். குழந்தைங்க அது.

‍- இமா க்றிஸ்

என் மகனுக்கு 4 1/2 வயது. மகளுக்கு 6. இருவருமே அங்கிலம் அந்த அளவுக்கு (அவர்களோடு படிக்கும் பிள்ளைகள் அளவுக்கு) பேச வராது. இருவரில் பெரிவளுக்கு இன்னுமே எழுத்து சின்னவன் அளவுக்கு வராது. இந்த வயதில் அவர்கள் ஹோம் வொர்க் பார்த்தா நானே பயந்து தான் போறேன். குழந்தை கை வலிக்குதுன்னு சொல்லும் போது பாவமா இருக்கும். அவர்கள் வயதில் எனக்கு பேனா பிடிக்க தெரியுமோ என்னவோ?? எப்படி யோசிச்சாலும் பென்சில் கையில் கிடைத்ததே 1வது போன பிறகு தான்னு நியாபகம். அதுவரை பலகையும், குச்சியும் தான்.

முதலில் நீங்க செய்த தப்பை நானும் செய்தேன் தான்... அந்த அனுபவத்தில் தான் இந்த அட்வைஸ். என் மகனுக்கும் மகளுக்கும் கொடுக்காத அடி இல்லை. என்னை கண்டாலே பத்தடி தள்ளி நிப்பாங்க. அம்மா வந்தபோது இப்படி சொல்லிக்கொடுத்து அவர்கள் மனதில் எதையாவது பதிய வைக்க முடியுமா என்றார். நியாயம் தான். அதன் பின் ஒரு 80 வயதை கடந்த முதியவர், பள்ளி நடத்துபவர் என்னிடம் பேசினார். தப்பு என் மேல் என்பதை புரியவைத்தார். அவர்களை எப்படி ஹோம் வொர்க் எஞ்சாய் பண்ணி எழுத வைக்கிறதுன்னு கத்துகிட்டேன்.

என்றாவது பிள்ளைகள் முடியலன்னா விட்டுடுங்க, பிஞ்சு குழந்தைகள்... என்று அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்ல தெரியாத வயது. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. கூடவே நீங்க சொன்ன பயம்... என் பிள்ளைகளிடமும் உண்டு. அது அவங்க சுபாவம். அதை மாற்ற முதல்ல நாம அவங்களை மிரட்டவோ, அடிக்கவோ, பயம் காட்டவோ கூடாது. அது தான் தைரியத்தை அவங்ககிட்ட வளர்க்கும். முதல்ல நம்மகிட்ட பயமில்லாம பேச பழகணும் பிள்ளைங்க. அப்போ தான் பழகும் மற்றவரிடமும் ஒஉ தைரியம் வரும். இப்போ உங்க தப்பு என்ன எங்கன்னு யோசிச்சு பாருங்க.. 1 வாரம் பிள்ளையை மிரட்டாம அவரை அவர் போக்கில் விட்டுப்பாருங்க. நிச்சயம் மாற்றம் இருக்கும்.

பின்னால் ஒண்டுவது... என் பிள்ளையும் செய்தது தான். நான் ஒன்னுமே சொன்னதில்லை... ஆனா இப்போ அவனா போய் எல்லாரிடமும் பேசுறான், நான் தான் பிடிச்சு இழுக்க வேண்டி இருக்கு ;) வயது, பருவம்... வளரும் பிள்ளைகள் மாறிக்கொண்டே தான் வருவாங்க, மாற்ற முடியாததுன்னு இந்த வயசுல எதுவும் இல்லைங்க. புரியும் வயது வரும் போது மாற்றம் வரும், காத்திருங்க. உங்க பிள்ளை ரொம்ப சின்னவர், நீங்க புரிஞ்சுக்கங்க அவங்களை முதல்ல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அட்மின்,இமா,வனி. அனைவருக்கும் நன்றி எனக்கு தெளிவு கிடைத்தது. அவளை வேறு யாருடனும் எனது குடும்பத்தினர் ஒப்பிட்டு கூறினால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது அதனால் தான் இவ்வாறு ஆலோசனை கேட்டேன். மீண்டு ஒருமுறை நன்றி....

நானும் அதே காரணத்தால் தான் கோபப்பட்டேன் பிள்ளைகளிடம். ஆனால் நம் உறவுகளில் பலர் செய்யாத நல்ல நல்ல விஷயங்கள் நம்ம பிள்ளைகளிடம் இருக்கும்... நாம் தான் அதை கவனிப்பதில்லை. கவனிச்சு பாருங்க, உங்க குழந்தை உங்களுக்கு ஸ்பெஷலா தெரிவா. கற்றுக்கொடுங்க.. மெதுவா கத்துக்கட்டும்... வயசு இருக்கு இன்னும். நான் புத்தி வந்து ஒழுங்க படிக்க துவங்கினதே கல்லூரி போய் தாங்க. எந்த வகையிலும் க்றைந்து போகவில்லையே இன்று. உறவுகளில் எல்லோரும் என் முன்னால் என்னை எவ்வளவோ கேலி பணிருக்காங்க சிறு வயதில். அதை எல்லாம் நெகடிவா எடுத்திருந்தா இன்னைக்கு நான் அவங்க முன் உயர்ந்து நிக்க முடிஞ்சிருக்காது. என் பெற்றோரும் அதை காதில் வாங்கி, எங்களை கண்டிக்க துவங்கி இருந்தாலும் வேறு விதமாகத்தான் போயிருக்கும். கவலை இல்லாம மகிழ்ச்சியா உங்க பிள்ளையிடம் சின்ன சின்ன விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கங்க... உங்களோடு ஒரு ஒட்டுதல் வந்துட்டா, உங்க பேச்சை கேட்பா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொன்னதைப் படித்தேன். என் பங்குக்கு நானும் சொல்லாட்டா எப்படி! :-)

இமா சின்னதுல பயங்கர ஸ்லோ. எக்ஸாம் பேப்பர்ல எல்லாக் கேள்வியும் எழுதி முடிச்சதா சரித்திரமே இல்லை. ஸ்கூல்ல பெஸ்ட் ரிசல்ட், டிஸ்ட்ரிக்ட்ல மூன்றாவது வந்தேன். கெமிஸ்ட்ரி, மாத்ஸ்லாம் இடிபாடு. மனனம் செய்றது வரவே வராது. நான் என்னதான் பாடுபட்டாலும் என் மூளை எவ்வளவு எடுக்குமோ அவ்வளவுதான் எடுத்துது. ரெண்டு ஆப்ஷன் இருந்தா இப்பவும் சிரமம்தான். அதுனால எல்லாம் குறைஞ்சு போகல. இமா நல்லாவேதான் இருக்கிறேன். எனக்கு எது பிடிச்சுதோ, எதை ரசிச்சேனோ, எது தெரிஞ்சுதோ அதுதான் இன்னமும் கூட வருது.

நானும் சின்னதுல யார் கூடவும் பேச மாட்டேன். இங்க வந்தும் கூட ஸ்கூல்ல ஸ்டாஃப் நடுவே அமைதியா உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பேன்னு Noisy என்று கிண்டல் பண்ணாங்க. இப்ப நிறையப் பேசுறேன். அந்தப் பேர் மட்டும் நிலையா தங்கிருச்சு. ;)

படிக்கும் காலத்துல அநியாயத்துக்கு குட்டியா இருந்தேன். என் ஏஜ் க்ரூப் கூட எப்பவுமே கம்பீட் பண்ண முடியல. ஸ்போட்ஸ்ல ஒரே ஒரு தடவை பங்கேற்று முதலாவதா வந்தேன். ;) ஸ்லோ சைக்கிளிங். :-)

இப்ப கூட ஸ்லோ லர்னர்தான். அது அதன் பாட்டுல இருக்கு. நான் என் பாடு. வேலைகள் செய்றது மட்டும் முன்பிருந்ததற்கு எதிர்மாறாக ஸ்பீ..டா ஆகிருக்கேன். மத்தவங்களைப் பார்த்து ஏங்கிட்டு இருந்தா இருக்கிறதும் போயிருக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா,வனி என் பயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்கள் மிக்க நன்றி.

வனி சிஸ், இமாம்மா எவ்..வளவு அழகாய் அறிவுரை குடுத்து இருக்கீங்க!! எல்லா பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டியது. தோழி மஞ்சு, உங்கள் கேள்வி சிறு குழந்தை வைத்துள்ள எல்லோருக்கும் பயன்படும்ன்னு நினைக்கிறேன். நன்றி கேள்விக்கும், அருமையான அறிவுரைக்கும்.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்