கிட்ஸ் கேரமல் பனானா

தேதி: August 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க


 

தேவையான பொருட்களை சரியான அளவில் எடுத்து வைக்கவும். மிகவும் பழுக்காத வாழைப்பழங்களாக பார்த்து எடுத்துக் கொள்ளவும்.
மைதாவுடன் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாழைப்பழங்களை விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும். எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய பழத் துண்டுகளை மாவுக் கரைசலில் தோய்த்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் மாவில் தோய்த்தெடுத்த பழத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கேரமல் தயார் செய்து கொள்ளவும்.
பொரித்தெடுத்த பழத் துண்டுகளை கேரமல்லில் போட்டெடுத்து, குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) போட்டு உடனேயே எடுக்கவும்.
ஸ்வீட்டான கிட்ஸ் கேரமல் பனானா தயார். இதன் மீது வறுத்த எள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கறீங்க ரேணுகா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தைகளை சாப்பிடவைக்கறதுதான் ரொம்ப‌ கஷ்டமான‌ விஷயம், அவர்களை எப்படி கவர்பன்னரதுன்னு நிறைய‌ ஐடியாஸ் வெச்சுருக்கீங்க‌....கலக்குங்க‌

அன்பு ரேணுகா,

பழத்துடன் சர்க்கரையும் சேர்த்து, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி செய்திருக்கீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி