
'பொன்னியின் செல்வன்' கல்கியின் விலைமதிப்பில்லா பொக்கிஷம்.
திருவிழாக் கோலமாய் இருக்கும் வீரநாராயண ஏரியின் கரையோரத்தில் ஆடிபெருக்குத் தினத்தில் பயணிக்கும் வந்தியதேவனோடு நம் பயணமும் தொடங்குகிறது. நாவல் படிக்கும் எண்ணம் மறைந்து நாமும் வந்தியதேவனோடு ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் காணத் தொடங்குவோம். நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் நாயகனே.
பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் இவர்களின் அறிமுக வர்ணனையில் நம் கற்பனையில் வீரமாய் வந்து போவர். ஆழ்வார்க்கடியான் - இவரின் ஆரம்பமே அசத்தலாய் இருக்கும். சிறந்த ஒற்றன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்தவர் .
நந்தினி ஒரு புரியாத புதிராகவே இத்தொடர் முழுவதும் வருகிறார் .
குந்தவை, அழகும் அறிவும் கலந்த நம் வந்தியதேவனின் காதலி.
ராஜராஜ சோழன் நம் கதையின் உண்மை நாயகன்; நம் மனதைக் கொள்ளை கொள்ளும் நாயகன்.
அநிருத்த பிரம்மராயர், சேந்தன் அமுதன் எனும் உத்தமசோழன், பூங்குழலி, ஊமைராணி, சுந்தரசோழர், செம்பியன் மாதேவி, குடந்தை சோதிடர், ரவிதாசன் என மறக்க முடியாதவர்கள் பலர்.
ஆதித்தசோழன் இளமையில் வீரர், ஆனால் இவர் மரணம் புரியாத புதிராகவே காட்டப்படுகிறது.
ஆதித்த சோழனின் தூதுவனாய் செல்லும் வந்தியதேவன் பின் குந்தவையின் காதலனாய், ராஜராஜசோழனின் உற்ற தோழனாய், சோழப் பேரரசின் உண்மைக் குடிமகனாய் பல வேடங்கள்.
கல்கி இப் புதினத்தில் சோழர்களின் வீரம், காதல், பண்பாடு, அரசியல், பெருமை அனைத்தையும் சொல்லும் விதம் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றாது. குழப்பங்களுக்கும் பஞ்சம் இல்லை.
படிக்கப் படிக்க காட்சிகள் கண்களில் கற்பனையாய் ஒளிரும்.
கற்பனையில் மூழ்கி வெளி வரத் தோணாது.
பெரும்பாலும் எனக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் நேரம் இரவுதான், இன்னும் கொஞ்சம் நீளாதா எனத் தோணும் முடிக்க மனம் இல்லாமல் .
ஒரு போர்க்களக் காட்சி.
சோழர் குலம் மீண்டும் தழைக்கக் காரணமான விஜயாலய சோழர் வயதான பின் இரு கால்களும் செயல் இழந்து இருந்தவர். பழுவேட்டரையர்களின் தோள்களில் அமர்ந்து இருந்து கைகளிலும் வாள்களை சுழற்றி எதிரிகளை ஓட ஓட விரட்டும் காட்சியை அவர் அங்கே விவரிக்கும் போது நானும் போர்களம் சென்றுவிட்டேன்.
சொல்லிக்கொண்டு போனால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
நீங்க படிச்சிருக்கிங்களா, உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் என்ன? சொல்லுங்க.
அப்படி என்ன இந்தப் புத்தகத்துல இருக்குன்னு படிக்காதிங்க. ஒண்ணும் இருக்காது. ஆனால் படித்து முடித்ததும் உங்க கருத்து வேறா இருக்கும்.
Comments
ரேவா
'பொன்னியின் செல்வன்' கல்கியின் அற்புதப் படைப்பு.
படிக்கும் போது நாவல் படிக்கிற நினைப்பே வராது.
நாமும் அவங்களோடவே பயணிக்கிற மாதிரி காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.
கதையைப் படித்து முடிக்கும் வரை நானும் சோழனாட்டிலேயே இருந்தேன் என்றால் அது மிகையாகாது.
ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று வந்தியத் தேவனோடு கதை துவங்குகின்றது.
எனக்கு பிடித்த கதாபாத்திரமும் வந்தியத்தேவனே.
வந்தியத்தேவனுடைய வீரம், அறிவு, தோற்றம் எல்லாமே படிக்க படிக்க திகட்டாது.
இது போல சிவகாமியின் சபதம் பற்றியும் எழுதுங்க ரேவா.
ரேவ்ஸ்...
//நீங்க படிச்சிருக்கிங்களா// ஆம், முதல்ல படிச்சது... நாற்பது வருஷம் முன்னால. ஏதோ கின்னஸ் ரெக்கார்ட் ப்ரேக் பண்ற மாதிரி நாலைஞ்சு நாள் சாப்பிடாம தூங்காம, இரவுல அரிக்கேன் லாந்தர் வைச்சு... அத்தனை அத்தியாயமும் படிச்சு முடிச்சது நினைவுக்கு வருது. :-)
//பிடித்த கதாபாத்திரம்// அப்போ கதை என்றாலே பைத்தியம். எல்லாப் பாத்திரங்களையுமே ஒரு பிரமிப்போடுதான் பார்த்தேன். ஓவியங்களிலும் ஈடுபாடு அதிகம். எழுத்தையும் ஓவியங்களையும் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
ஃபேஸ்புக்ல என்னைக் கண்டால் ஒரு ஹாய் சொல்லுங்க. பேசணும்.
- இமா க்றிஸ்
ரேவ்ஸ்
இவங்க எல்லாம் யாரு?? ம்ம்... நல்லா இருக்கும்னு பலர் சொல்றீங்க, எனக்குத்தான் இதை எல்லாம் படிச்ச அனுபவமே இல்லை. இமா சொன்ன மாதிரி பரிட்சைக்கு கூட அப்படி படிக்க மாட்டேன், கதைன்னா சாப்பிடாம படிப்பேன் சில நேரம். சில காலம் சில குறிப்பிட்ட ஆசிரியர்களின் ஆங்கில நாவல்கள். ரமணிசந்திரன் காய்ச்சல் இப்ப அப்படித்தான் கொஞ்ச நாள் இருந்தது. அதனால் இவர் நான் புக் பக்கம் போனாலே டென்ஷானாகுறார் ;) தொடரா படிக்கவும் பொறுமை இல்லை, மொத்தத்தையும் வெச்சு வெச்சு படிக்கவும் பொறுமை இருப்பதில்லை.
//எழுத்தையும் ஓவியங்களையும் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பேன்.// - இதை நானும் சில நாவல்களில் பண்ணிருக்கேன். ;) சில வார இதழ்களை அந்த ஓவியங்களுக்காகவே பார்த்திருக்கிறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவதி
ரேவதி புத்தகம் படிப்பது மட்டுமல்லாமல், நல்லா ரசித்தும் எழுதியிருக்கீங்க.
நான் ஒரு புத்தகபிரியை, அதிலும் கல்கியின் தீவிர ரசிகை, ஒன்றிரண்டு தவிர அனைத்து நாவல்களும் படித்திருக்கிறேன். புத்தகவடிவில் மட்டுமல்லாது, PDF format லயும் எங்க போனாலும் என்னுடன் இருப்பவை இந்த புத்தகங்கள்.
பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்திருக்கிறேன்னு எனக்கேத்தெரியாது!
//அப்படி என்ன இந்த புத்தகத்துல இருக்குன்னு படிக்காதிங்க . ஒன்னும் இருக்காது . ஆனால் படித்து முடித்ததும் உங்க கருத்து வேறா இருக்கும் // இந்த புத்தகத்தில் சொல்லப்படாத விஷயம்னு, எதுவுமே இருக்கிறதா என்க்குத் தோணாது.
நீங்க பொன்னியின் செல்வனை இவ்வளவு ரசித்திருப்பதால், உங்களுக்கு இன்னும் சில புத்தகங்களும் பிடிக்கும் என நம்புகிறேன்.
எனக்குப் பிடித்த புத்தகங்கள் நிறைய இருக்கு, அவற்றில் சில
1. லக்ஷ்மியின் பெண்மனம்.
2. இந்துமதியின் நெருப்புமலர்.
3. கிருஷ்ணமனியின் வேர்கள்.
4. இந்திராசவுந்திரராஜனின் கோட்டைப்புரத்து வீடு, ஐந்து வழி மூன்று வாசல்.
5. கல்கியின் அனைத்து புத்தகங்களும்.
6. பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம்.
விட்டா,நான் இன்னும் சொல்லிக்கொண்டே போவேன் ரேவதி, உங்களுக்கு போரடிக்கும் வரைக்கும். முடிஞ்சா இந்த புத்தகங்களையும் படித்து பாருங்க நல்லாயிருக்கும், ஏற்கனவே படித்திருந்தா எனக்கும் கருத்து சொல்லுங்க.
நீங்க புத்தகத்தை பற்றி பதிவிட்டவுடனே எனக்கு கொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகமாயிடிச்சி மன்னிக்கவும்.
ரேவதி
ரேவதி பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்தவர் வந்தியத்தேவன் 10 முறை படித்தேன் புதுசா படிக்கிற மாதிரியே இருக்கும்.எந்த பாகத்த படித்தாலும் ஆழ்ந்து படிக்க தோணும்,நந்தினி கேரக்டர்தான் புரியாத புதிர்.
நிகி
ஹாய் நிகி. நிச்சயம் கற்பனை விட்டு வெளியே வரமுடியாது என்பது நிஜம். சிவகாமியின் சபதம் பற்றியும் எழுதறேன் . இனி அடிக்கடி புத்தகங்கள் இங்கு பதிவிடல் தொட்ரும். நன்றி
Be simple be sample
இமாம்மா
நிச்சயம் ஒவ்வொரு பாத்திரமும் பிரமிப்புதான் . நீங்க அரிக்கேன் விளக்குல படித்து முடிச்சிங்க . நான் இந்த புக் படிக்கும்போது நினைத்தேன் .படிக்கறதுக்கு தனி அறை வேணும் . என்ன பண்ணறது . நானும் மிகவேகமாக படித்து முடித்தேன் . ஏன்னா அது லைப்ரரி புக்ஸ். இப்ப சொந்தமா இருக்கு ,தோழியின் அன்பு பரிசு .
Be simple be sample
வனி
அவர்கள் எல்லாம் கதையின் நாயகர்கள் . நாம எப்ப வனி படிச்சுருக்கோம் . இப்படியெல்லாம் படிக்கறதுக்கு. நானும் கதை புக்ஸ் இல்லாமல் இருக்கறது இல்ல. நான் ராஜேஷ்குமார் ரசிகை வனி
Be simple be sample
அனு
எனக்கு புக்ஸ் பத்தி பேசினா நிச்சயம் போர் அடிக்கல .உங்களுக்கு தெரி.ந்த புக்ஸ் பத்திதராளமா சொல்லுங்க . இந்திரா சார் புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன் . நீங்க சொன்னதும் படிச்சுருக்கேன். மத்த புக்ஸ் படிக்க முயற்சி செய்வேன். நீங்க pdf la படிக்கறதால சொல்லறேன். இந்த புக்ஸ் தேடி பாருங்க .
ரவிகுலத்திலகன் .விஜயாலய சோழர் பத்தி அருமையான புத்தகம் .
வந்தியத்தேவன் எல்லாருக்கும் பிடித்தவர் அல்லவா
Be simple be sample
ரேவதி
எனக்கு இந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே ரொம்ப பிடிக்கும் (நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவருமே).
உண்மையில் அனைவருக்குமே வந்தியத்தேவன் கொஞ்சம் special தான்.
கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருக்கும் புத்தகங்களையும் படிக்கிறேன்.
இப்பொழுது காவிரிமைந்தன் (அனுஷா வெங்கடேஷ்) படித்துக்கொண்டிருக்கிறேன்.கல்கி அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளது.
ரேவதி
நானும் படித்து ரசித்து இருக்கிறேன். கல்லூரி நாட்களில் கையடக்க சிறிய புத்தகங்களை பையிலேயே வைத்து இருப்பேன். கொஞ்சம் நேரம் கூட வீணாக்காமல் படிப்பேன். "ஏதோ பரீட்சைக்குப் படிப்பதைப் போல படிக்கிறாயே!" என்று தோழிகள் கிண்டல் செய்வார்கள். கதாபாத்திரங்களையும் கதை சூழலையும் கற்பனை செய்து ரசிப்பேன். லைப்ரரியில் இருந்து பெரிய புத்தகங்களை எடுத்து சென்று இரவில் தூங்காமல் படித்து இருக்கிறேன். நடுவில் புத்தகத்தைக் கீழே வைக்கவே பிடிக்காது. வெகு நேரம் கண் விழித்ததற்காக அம்மாவிடம் திட்டு வாங்கியது எல்லாம் நினைவு வருகிறது. : )
அன்புடன்
தயூ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
ரேவதி,
நல்ல பதிவு..
எனக்கு பாலகுமாரனின் 'பந்தயப் புறா' மிகவும் பிடிக்கும்.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
amuthavalli
நான் அவ்வளவு முறை படித்தது இல்லைப்பா ,ஆனா படிச்சுனே இருக்கணும் .உங்களுக்கும் வந்தியத்தேவன் பிடிக்குமா . நந்தினி ஒரு குழப்பான புரியாத கேரக்டர்.
Be simple be sample
அனு
அனு நான். பெரும்பாலும் லைப்ரரில தான்பா படிக்கிறேன் . இந்த புத்தகமும் நிச்சயம் இருக்காண்னு பார்க்கிறேன் .
நந்திபுரத்துநாயகி அப்படின்னு ஒரு புக் . அது பொன்னியின் செல்வன் காலத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் கதை .இதே கதாபாத்திரங்கள் இதுவும் பாருங்க அனு .நிச்சயம். நல்லா இருக்கும் கதை . வந்தியதேவன் கைது ,ராஜேந்திரசோழரின் பிறப்பு இன்னும் விடை தெரியாத கேள்விகளுக்கு விடையாய் இருக்கும் .
Be simple be sample
டெடி
இதே உணர்வுதான் .இந்த நாவலை படிக்கும்போது எனக்கும். நானும் லைப்ரரிலதான் படித்தேன் .அடுத்த புக் உடனே கிடைக்காம நான் பட்ட அவஸ்தை இருக்கே அப்பா சொல்லமுடியாது போங்க .
Be simple be sample
ராஜி செந்தில்
ரொம்ப தானக்ஸ்பா .நானும் அந்த புக் கிடைக்குதான்னு பார்க்கிறேன்
Be simple be sample
ரேவதி
ஹாஸ்டல் லீவு மூன்று நாளில் பொன்னியின் செல்வன் 5 பாகம்(6 புக்கையும்) படிச்சாச்சு! :) அம்மா இன்னும் சொல்வாங்க.. இந்த ஆர்வம் படிப்புல காண்ப்பிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு..
வந்தியத்தேவன் - குந்தவை இலைமறைக் காதல், அருள்மொழிவர்மன் பெருந்தன்மை, மற்றும் நிதானம், புத்திசலித்தனம், நந்தினியின் சாகசம் இறுதி வரை நந்தினி நல்லவளா இல்லை கெட்டவளா என்ற கேள்வி, படிக்கும் போது என்னடா இந்த காலத்தில் என்ன பண்ரோம்.. அந்த கதை நடக்கும் காலக்கட்டத்திர்க்குப் போக மாட்டோம்மான்னு ஒரெ ஏக்கம்த்தான்..
சரியாச் சொன்னீங்க.. இந்த கதையில் என்ன இருக்குன்னுக் கேட்டா சொல்ல முடியாது.. அனுபவிக்கத்தான் முடியும்..அது ஒருக்காலம்ன்னு என்னை இப்படி கொசுவர்தி சுத்த வச்சுட்டீங்களே..
பிடிச்ச கதாப்பத்திரம் குந்தவை - அக்காவாக, தம்பிக்கு அம்மாவாக, அன்பு காதலியாக, புத்திசலித்தனம், பணிவு, அரசியலறிவு எல்லாம் உள்ள இளவரசி!
ரேவதி அக்காங்
பொன்னயின் செல்வன் நான் இன்னும் படிச்சதில்லீங்க; படிக்க ஆர்வம்தான் ஆனால் புத்தகத்தை நூலகத்தில் பார்த்தால்
முழுசாய் படிக்க எவ்வளவு நாளாகுமோன்னு ஒரு பயம்ங்க.
சரின்னு மின் புத்தகமாய் எடுத்து வைத்தது அப்படியே இருக்குங்க.
படிக்க முயற்சிக்கிறேன்.
நல்ல பகிர்வுங்க :-)
நட்புடன்
குணா
ரேவதி
நந்திபுரத்து நாயகியில் நந்தினியின் முழு விவரமும் இருக்குமென்று கேள்வி பட்டுள்ளேன்.சாண்டில்யனின் நாவல்கள் நன்றாக இருக்கும்,கடல் புறா,கன்னி மாடம்,ராஜ திலகம்,ஜல தீபம் இந்த புத்தகங்கள் சாண்டில்யன் படைப்புகள்.அகிலனின் சித்திரப் பாவை ரொம்ப நல்ல நாவல் லைப்ராரியில் கிடைத்தால் படித்துப் பாருங்கள் ரேவதி
vijikarthik
ஆமாப்பா ,எடுத்தா வைக்க தோணாது. இப்படித்தான் நானும் முடிச்சேன். எனக்கும் குந்தவை ரொம்ப பிடிக்கும்பா.பழைய நினைவுகள் எப்பவும் இனிமைதானே விஜி.
Be simple be sample
குணாங்
தம்பிங் பொறுமையா படிச்சு முடிங்க.என்ன அவசரம் ஆனா கண்டிப்பா படிச்சுமுடிங்க.
Be simple be sample
அமுதவள்ளி
நந்திபுரத்து நாயகி 5பாகம்ன்னு நினைக்கிறேன். நான் 3பாகம் முடிச்சுட்டேன் .அது வரைக்கும் நந்தினி பத்தி தெளிவான விளக்கம் இல்ல. ஒரு வேளை அடுத்த பாகத்தில் இருந்தாலும் இருக்கலாம். நானும் சாண்டில்யன் நாவல் படிச்சுருக்கேன். மலைவாசல் நாவலும் நல்லா இருக்கும். நானும் பார்க்கிறேன் நீங்க சொன்ன புக் கிடைக்குதான்னு .தான்க்ஸ் பா
Be simple be sample
பொன்னியின் செல்வன்
அன்பு ரேவதி,
பொன்னியின் செல்வனுக்கு இவ்வளவு இரசிகர்களா?
என் உள்ளம் பூரிக்கிறது. மனதில் உவகை பொங்குகிறது.
அடடா, சரித்திர நாவல் படிக்க ஆரம்பிச்சதும் அந்த நடையிலேயே எழுத ஆரம்பிச்சுட்டேன்:)
ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க. அருமை.
எத்தனை தடவை இந்த நாவலைப் படிச்சிருக்கேன் என்று கணக்கே இல்லை. இப்ப வாரா வாரம் தொடராகப் படிக்க ஆரம்பிக்கறப்ப இன்னும் ஒரு புதிய சுவையாகத் தெரிகிறது.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா
அன்பு சீதாம்மா. எல்லா தலைமுறையும் ரசிக்கும் ஒரு நாவல் பொன்னியின் செல்வன். அதனால்தான் தைரியமா இதற்கு பதிவு போட்டேன் .நன்றி.
Be simple be sample
பொன்னியின் செல்வன்
எனக்கு வானதி & மணிமேகலை பிடிக்கும். அவங்க ரெண்டு பேரோட பிடிவாதமான காதல் பிடிக்கும். ஆனா மணிமேகலை முடிவு தான் வருத்தமா இருந்தது. நான் படிச்சும் இருக்கேன் Audio கேட்டும் இருக்கேன்.
ரேவ்
ரேவ் பொன்னியின்செல்வன் பிரமிப்பு எனக்கும் உண்டு. குதிரைகளின் குளம்பொலியை கேட்பது போலவே தோன்றும் எனக்கு. அற்புதமான நாவல் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
Indira.g
எனக்கும் மணிமேகலை ரொம்ப பிடிக்கும். உன்னதமான உண்மை காதல்.
Be simple be sample
அருள்
நிச்சயம் பிரமிப்பான நாவல் எத்தனை வருடம், தலைமுறை கடந்தாலும் .
Be simple be sample