Pregnant aga Tips iruka?

Hi,

Ennaku marriage agi 1 year aguthu. Nanga baby ku try panrom. But result illa. Ennum hospital poi major check up panni parkala. Konjam bayamagavum iruku yedum problem irukuma nu. Kindly share ur advice.

Imma amma ninga solrathu ok but deliveryku hospital irukkum pothukuda he took leave and stayed his native hospital we stayed 5 days first day only he came.hospitalku fevernu thaniya poyi injection pottu mayakam vanthu 1 hour hospital irunthu auto pidithu vittuku vantha apo kuda onum Kekala.atha yellam ninaikkum pothu kasta irukku.
Life run pannave kastama irukku ippade tha men yellam iruppagala.

Sorry mobile type nala mistake varuthu.

உங்க பிரச்சினை உங்களுக்குத் தான் தெரியும். நாங்க பிரச்சினையின் பெரும்பகுதி தெரியாமல் எதையாவது சொல்லி வைக்கிறோம். கவலைப் படாதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகும்.

//ippade tha men yellam iruppagala.// ;))))) இல்ல. ;) (ஒரு சந்தேகம் - உங்க அப்பாவைப் பற்றி அம்மா இப்படிக் குறை சொன்னதா உங்களுக்கு நினைவு இருக்கா?) எல்லாப் பொண்ணுங்களும் உங்களை மாதிரி இருக்கிறதும் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமா இருக்கோம். :-)

ஈஸியா எடுத்துக்கப் பாருங்க. பிரச்சினை பெருசாத் தெரியுறதும் சின்னதா தெரியுறதும் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நீங்க‌ உங்க‌ கணவரிடம் ஒரு 1 மணி நேரம் மனம் விட்டு பேசுங்க‌ எல்லாம் சரி ஆகிவிடும்,

எல்லாம் நன்மைக்கே

Oknga imma Amma,sutha thank u

சத்யா கவலைபடாதீங்க பா. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். தனியா குழந்தையை கவனிக்கிறீங்க. இந்த டைம்ல யாராவது ஆறுதலா பேசினாலே போதும்னு இருக்கும் அதுவும் அது கணவரா இருந்தா எந்த கஷ்டமும் தெரியாது. உங்களோட முழு பிரச்சனையும் தெரியaது. இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருங்க. ஒரு சிலர் திருமணம் ஆன முதலே புரிதல் இருkகும். சிலர்க்கு அது கொடுத்துவைக்காது. நாளாகும்.நானும் ரெண்டாவது ரகம்தான். நம்ம அருசுவைல நானும் புலம்பிருக்கேன். என்னன்னவோ யோசிச்சிருக்கேன். கடைசியா நான் பண்ணது எதிர்பார்ப்புகளை குறைச்சதுதான். நிஜமாகவே இப்போ நான் சந்தோசமா இருக்கேன். ஸோ வெய்ட் பண்ணுங்க கண்டிப்பாக உங்க அன்பு அவங்களுக்கு புரியும். எல்லாம் மாறும்
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

சத்யா இதுக்கெல்லாம் எதையாவது யோசிக்க கூடாது....எல்லாமே ஒருநாள் கடந்து போகும்.கல்யாணம் ஆன புதிதில் சிலர் தன்னுடைய அம்மாவிடம் தான் யோசனை கேட்கிறார்கள்.இன்னும் ஒருவருடத்தில் மாறி விடும்.

என்னுடைய கணவரும் இப்படித்தான் இருந்தாங்க.ஊரிலிருந்து கிளம்பும்போது அம்மாவை விட்டுட்டு வரதுக்கே அழுவாங்க கல்யாணம் ஆன புதிதில்.அவுங்க அம்மா மேல் பாசம்னு இருப்பேன்.எல்லாவற்றையும் அம்மாவிடம் தான் சொல்வாங்க.எங்க வீட்டில் பங்ஷன்னாக்கூட அம்மாவிடம் பர்மிஷன் கேட்டு தான் கிளம்புவாங்க.

நாங்களும்,அப்பா வீடும் சென்னை தான், மாமியார் ஊரிலிருக்காங்க இதுக்கே பர்மிஷன்.நாளடைவில் நானும் அதே மாதிரி பழகிவிட்டேன்.

இப்ப மாமியாரின் குணமறிந்ததும் எதுவுமே சொல்வதில்லை.பிரசவ நேரத்தில் ஏகப்பட்ட பிரச்சனை பண்ணாங்க மாமியார்.அதெல்லாம் நினைத்தால் சரிவராதுப்பா.

நீயும் அவுங்களுக்கெத்த மாதிரி மாறி பாரு உனக்கெத்ச மாதிரி கூடிய விரைவில் மாறும்...நம்மளையும் விட அதிகம் கஷ்டப்படுரவங்க இருக்காங்க கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்.

பிஞ்சு முகத்தை பார்த்தாவே வேதனையெல்லாம் பறந்தோடிவிடும்.உனக்காகவும் ,பாப்பாக்காகவும் தானே கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாங்க,அவுங்க படும் வேதனை நமக்கு தெரியாது,சொல்லவும் மாட்டாங்க...

உன் குடும்பம் உன் வாழ்க்கைடா,எஞ் ஜய் பண்ணி வாழ கத்துக்க...என் மாமியார், என் கணவன் என் குடும்பம்னு நினைத்துப் பார்.கோபமே வராது.

உனக்கு பதில் சொல்வதற்கு என் விரல்களெல்லாம் படபபடவென டைப்படித்துவிட்டது.தவறென்றால் மன்னிக்கவும்....

அன்பு தோழி. தேவி

Epdirukinga?,romba month aachu pesiye...

அன்பு தோழி. தேவி

நான் நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீங்க? பசங்க எப்படி இருக்காங்க? தேவி கிட்ட இருந்து பாசிட்டிவான பதிவுகளை பார்க்கிறபோது ரொம்ப சந்தோசமாக இருக்குது.
உண்மைதான் பா நம்ம விட கஷ்டபடுறவங்கள பார்த்தாவது கடவுள் நம்மை இந்த அளவுக்காவது வச்சுருக்காங்கனு மனதை சமாதனம் பண்ணிக்கதான் வேணும்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அக்கா எல்லோரும் நலம்.ஆமாக்கா ப்ரச்சனை பண்றவங்க சந்தோஷமாக இருப்பாங்க நாமதான் அதைப்பற்றி கவலைபடுவோம்..அந்தமாதிரி தான் எல்லாமே..வீட்டில் எல்லாரும் நலமாக்கா.

இப்ப எதிர்காலத்தை பற்றி திங்கிங்...ஆனால் நிகழ்காலமே கஷ்டமஆக இருக்கு.என் படிப்பு எப்படி குழந்தைகளை வளர்ப்பது?சேமிப்பு இதெல்லாம் நினைக்கும் போது ப்ரச்சனை ஞஆபகமே வருவதில்லை....

நம்ம மனசு எதில் சந்தோஜப்படுமோ அதில் போயிட்டோம்னா ப்ரச்சனை தெரியாது...

அன்பு தோழி. தேவி

Oknga devi,mercysister thanks you nanum change aga unwanted think panratha mathika try panra.ippatha yetho mind free ana mathiri irukku.

மேலும் சில பதிவுகள்