ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

தேதி: August 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கப்
ரவா - ஒரு கப்
துருவிய சீஸ் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிது
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சில்லி தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
பால் - 2 கப்
மைதா - 2 தேக்கரண்டி
ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்


 

ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கார்ன் கலவையை எடுத்து உருட்டி (ரோல் போல) மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுக்கவும்.
பிறகு ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்ஸைத் தயார் செய்து, மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து, ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டியெடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ரோல்ஸைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
டேஸ்டி ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூப்பர். இப்பவே சாப்டணும் போல‌ இருக்கு. வித்யாசமா இருக்கு. கலக்குறீங்க‌ நித்தி.

எல்லாம் சில‌ காலம்.....

அன்பு நித்யா,

வித்தியாசமான கட்லெட். நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துககள்

உங்களுக்கு மட்டும் இந்த உருட்டுற வேலை எப்படி இம்புட்டு சுலபமா வருதோ!! கலக்கல்ங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.

கருத்து கூரிய தோழிகள் அனைவருக்கும் நன்றி