ஆங்ரி பர்ட் கிஃப்ட் ராப்

தேதி: August 14, 2014

Average: 4 (2 votes)

 

ஆங்ரி பர்ட் கார்ட்ஸ் (Angry Bird Play Cards) - ஒரு பாக்கெட்
சிவப்பு நிற கிஃப்ட் ராப்
மஞ்சள் நிற சில்க் த்ரெட் க்றிஸ்மஸ் பந்து (டெகரேஷன்)
ப்ளாஸ்டிக் முட்கரண்டிகள் - 2
ப்ரவுன் ஃபெல்ட் - சிறு துண்டு
பெரிய கண்கள் - 2
உலர்ந்த புல்லுப் பூ (Dry Bunny Tail Grass Flowers) - 2
கத்தரிக்கோல்
குறடு
க்ராஃப்ட் க்ளூ
ஹாட் க்ளூ கன்
செலோ டேப்

 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
பெட்டியின் மீது சிவப்பு நிறக் கடதாசியைச் சுற்றி ஒட்டிவிடவும். பெட்டியில் மாட்டுவதற்கென்று அட்டைத் துண்டு இருக்கும் பக்கம் மட்டும் திறந்தபடி இருக்கட்டும்.
திறந்து இருக்கும் பக்கம் கடதாசியை மடித்து ஒட்டினால் மீதியுள்ள கடதாசி படத்தில் உள்ளது போல் விரிந்து இருக்கும்.
விரிந்து இருக்கும் கடதாசித் துண்டுகளை மடித்து மேல் ஓரங்களில் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும். இன்னொரு துண்டுக் கடதாசியை அதன் மேலாக ஒட்டவும். இதற்கும் மேற் பக்கம் மட்டும் க்ளூ வைத்தால் போதும். இப்போது அட்டைப் பெட்டி முழுவதாக மறைந்துவிடும்.
சில்க் பந்தில் இருக்கும் கொக்கி வளையத்தை குறட்டினால் இழுத்து எடுத்துவிடவும். வளையத்தை எடுத்த அடையாளம் தெரியாமலிருக்க புல்லுப் பூ ஒன்றைச் சரித்து வைத்து ஒட்டவும். காம்பைப் பந்தைச் சுற்றி பாதி அளவு கொண்டு வந்து அடியில் ஒட்டவும். க்ளூ இறுகுவதற்குச் சில விநாடிகள் ஆகும். அதுவரை காம்பைச் சரியான இடத்தில் வைத்துப் பிடித்துக் கொள்ளவும். மீதியை நறுக்கிவிடவும். இன்னொரு பூவின் (இது முதலில் ஒட்டிய பூவைவிடச் சிறிதாக இருக்க வேண்டும்) காம்பு முழுவதையும் நறுக்கிவிட்டு முதலில் ஒட்டிய பூவின் முன்னால் வைத்து ஒட்டவும்.
கண்களை ஹாட் க்ளூ கொண்டு ஒட்டவும்.
ஃபெல்ட் துணியை இரண்டாக மடித்துப் பிடித்து சில்க் பந்திற்குப் பொருத்தமான அளவில் அலகுகள் வரும் விதமாக இரண்டு துண்டுகள் வெட்டவும். ஒன்று மற்றொன்றை விட சற்று நீளமாக இருக்க வேண்டும்.
ஹாட் க்ளூ வைத்து கீழ் அலகை (சிறிய துண்டு) ஒட்டவும். இறுகும் வரை பிடித்துக் கொள்ளவும்.
இதே போல பெரிய துண்டை மேல் அலகாக ஒட்டிவிடவும்.
பெட்டியின் கீழ் நீண்டிருக்கும் கடதாசியில் இறகு போல வெட்டிக் கொள்ளவும். இடையிடையே மட்டும் க்ளூ வைத்து ஒட்டிவிடவும்.
முட்கரண்டிகளின் காம்புகளை நறுக்கிவிட்டு கால்களாக ஒட்டவும்.
பெட்டியின் மேல் சில்க் பந்தில் தயார் செய்த தலையைச் சரியானபடி வைத்து ஒட்டி, ஒரு நிமிடம் அப்படியே பிடித்திருக்கவும். (உண்மையில் இந்த நிலையில் உள்ளே உள்ள பெட்டி தலைகீழாக இருக்கும். உள்ளே உடைந்து போகக் கூடிய பொருட்கள் எதுவும் இல்லையென்பதால் பிரச்சினை இல்லை).
கடதாசியில் ஒரு இலை வடிவம் வெட்டி நடுவில் ஒட்டிக் கொள்ளவும். இது வயிறு போல இருக்கும்; செலோ டேப் ஒட்டியது தெரியாமல் மறைத்தும் கொள்ளும்.
படத்தில் உள்ளது போல் ஒரே அளவில் இரண்டு துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இவற்றை முதலில் ஒட்டிய இலை வடிவத் துண்டின் இரண்டு பக்கமும் இறக்கை போல் வைத்து ஒட்டிவிடவும்.
பாரமில்லாத எந்தப் பொருளையும் இப்படிப் பொதி செய்யலாம். வீட்டில் கிடைக்கும் பொருட்களோடு உங்கள் கற்பனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்பளிப்பைக் கொடுக்கும் போது மறக்காமல் பறவையைப் பிரித்துப் பார்க்கச் சொல்லுங்கள். இல்லையெனில் பரிசைப் பெறுபவர் 'ஆங்ரி பர்ட்' ஆகிவிடும் சாத்தியம் இருக்கிறது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

காலுக்கு ஃபோர்க் விரல் மாதிரி ரொம்பவும் பொருத்தம். தலையும் அழகா இருக்கு. புல்லுப் பூ கொண்டை மாதிரி வந்திருக்கு. கோபப் பறவைக்கு கோபத்தை எப்படி வரவழைக்க‌???
பறவை அழகா இருக்கு.

ஃபில்ட்டர் கதை வேற. அது வாட்டர் ஃபில்ட்டர். ரீஃபில் போட நாள் வந்தாச்சு. வந்த ஆள் வேலை முடிக்கும் வரை கிச்சனைத் தாண்டி ரூமுக்கு போக முடியல. இந்தக் கார்ட் பெட்டி டேபிள் மேல இருந்து முறைச்சுது. இப்படி ராப் பண்ணிட்டேன். ;)
//கோபத்தை எப்படி வரவழைக்க‌?// ;) கண்ணுக்கு மேல கோபமா புருவம் வைக்க நினைச்சிருந்தேன். மறந்து போச்சு. ;(

‍- இமா க்றிஸ்

கியூட்டி... ஒரு கியூட்டி இன்னொரு கியூட்டி செய்திருக்கே! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்ப எல்லா குட்டி பசங்களுக்கும் (எனக்கும்) இந்த கோபப் பறவையை தான் ரொம்ப பிடிக்குது...

//கண்ணுக்கு மேல கோபமா புருவம் வைக்க நினைச்சிருந்தேன். மறந்து போச்சு. // ஆனாலும் எனக்கு அது கோபமா இருக்க மாதிரியே தான் தெரியுது... என் கண்ணுல மிஸ்டேக்கோ???

கலை