தொட்ட தொந்தரே! சுலப பரிஹாரா !

என்ன வனி தலைப்பை கண்டபடி போட்டதா தோணுதா? இல்ல, கன்னடத்துல போட்டிருக்கேன். ;) பெரிய பிரெச்சனை சுலப தீர்வுன்னு சொல்லிருக்கேன் (தப்பா இருந்தா யாரும் அடிக்கப்புடாது, தமிழ் தான் இங்க பிழை இல்லாம எழுதணும், கன்னடம் இல்ல). என்ன வனி பெரிய பிரெச்சனை? என்னத்த சொல்ல. எனக்கு வந்து வாய்க்குது எல்லாம் :( என் சோகக்கதையை கேளு அறுசுவையே. இந்த குட்டி குட்டி கரப்பான் என்னை பாடா படுத்துச்சு. கடைசியில் எந்த் பிரெச்சனையும் இல்லாம அடிச்ச பாடி ஸ்ப்ரேக்கே ஓடிப்போச்சுங்க!! நம்பவே முடியல தானே? என்னாலயும் தான்! அம்மா வீட்டில் பெரிய கூட்டமே இருந்தாங்க, இம்முறை போனா கண்ணில் படவே இல்லை. அம்மா இரவு நிம்மதியா தூங்குறாங்க! என்ன விஷயம் என்று கேட்டா “நீ போனமுறை ஒரு ஷெல்ஃப்ல அடிச்சிருந்த, அங்க பூச்சியே காணோம் அப்பறம், அதனால் நாங்க எல்லா இடத்திலும் சாமான் ஒதுக்கிட்டு அடிச்சு விட்டுட்டோம். போயே போச்சு.”னு பாராட்டினார். எல்லா புகழும் அருளுக்கே. அதுக்காக கிச்சன் கில்லாடி போஸ்ட்டில் அருளுக்கு நான் விருது கூட கொடுத்திருக்கேனாக்கும். இப்போ ஒரு முறை எல்லாரும் ஜோரா கை தட்டுங்க நம்ம அருளுக்கு. :)

இப்படித்தான் அடுத்த அவதாரமா நம்ம வீட்டுக்குள்ள பல்லி வந்தது. ஒன்னு வெக்கேட் பண்ணா அடுத்தவங்க கட்டாயம் குடி வரணும் போல! டார்ச்சர் புடிச்சது... அது கூட நான் பல நாள் கிச்சனில் தனியா பேசி பைத்தியம்னு பேரு வாங்கப்பார்த்தேன். அதுவும் கரக்ட்டா நான் இருக்கும் போது இங்கையும் அங்கையும் கண்ணு முன்னாடி அழகு காட்டும். போன முறை 10 நாள் நான் வீட்டை பூட்டிட்டு போனேனா ஊருக்கு, வந்து பார்த்தா அதை காணோம். எனக்கு ஒரே கவலையா போச்சு. ஒரு வேளை நம்ம மேல அன்பான ஏதும் ஜீவன் பல்லியா மாறி இங்கையே சுத்துச்சோ? நாம இல்லன்னு போயிடுச்சோன்னு. இதுக்கு தான் நான் ஈ படமெல்லாம் பார்க்கப்புடாதுன்னு சொல்றது. திட்டாதீங்க, எனக்கு கேட்குது. இருந்தாலும் கவலை, இல்லாம போனாலும் கவலையா? இது சரியான கேள்வி தான். ஆனா பதில் லேது. கூடவே இன்னைக்கு கடையில் ஒரு ஹெர்பல் ஸ்ப்ரே பார்த்தேன், அதையும் வாங்கி வந்தேன் பல்லி, ஈ, கொசு, கரப்பான் எல்லாருக்கும் ஒரே மருந்தாம். ட்ரை பண்ணிட்டு பலனிருந்தா சொல்றேன்.

அதுவும் தான் போயிருச்சே... இனி என்ன பிரெச்சனை உனக்கு? நல்லா கேட்டீங்க. நேற்றுக்கு முன் நாளில் இருந்து வீட்டுக்குள்ள ஒரு எலி வந்து போகுதுங்க!! அம்மே!!! நான் என்ன பண்ண? அது எலியா குரங்கா? எனக்கு ஒரே டவுட்டு. பின்ன? வீட்டில் செய்யாத உணவெல்லாம் கொண்டு வந்து போட்டுட்டு போகுது. முதல் நாள் வடை கொண்டு வந்து சோஃபால உட்கார்ந்து சாப்பிட்டு போயிருக்கு (அது என்ன டீ கட பென்ச்சா??). நேற்று தான் எல்லாம் டெட்டால் வெச்சு சுத்தம் பண்ணேன். இன்னைக்கு ஹாலில் ப்ரெட் கொண்டு வந்து போட்டிருக்கு. முடியல... என்னால முடியல. இன்னைக்கு முழுக்க டெட்டால் வாஷ். :(

இமா சொன்ன எலி மேட் வாங்கி வந்துட்டேன். எலி மருந்து வாங்கி வந்துட்டேன். வீட்டை சுற்றி போட்டு வெச்சிருக்கேன். எந்த வழியா வருதுன்னு தோணுச்சோ அந்த வழி எல்லாம் அடைச்சு வெச்சிருக்கேன். இப்போ இதை ஒழிக்க இன்னும் எதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க. நான் பிள்ளையார்கிட்ட சொல்லி வெச்சிருக்கேன்... உன் வாகனம் அத்தும்மீறி என் வீட்டில் பார்க் பண்ணுது, ஒன்னும் நல்லா இல்ல சொல்லிப்புட்டேன்னு.

உதவுங்க ப்ளீஸ்... அது வீட்டுக்குள்ள வராம இருக்கணும், வந்து ஏற்கனவே வீட்டில் தங்க இடம் பிடிச்சிருந்தா அதை கண்டு பிடிக்கணும். :(

ஒரே வழி... டீக்கடை பெஞ்சுல என்னல்லாம் இருக்கோ அதுல்லாம் வைச்சு பெஞ்சு கிட்ட பொறி வைக்கிறதுதான் வனி.

‍- இமா க்றிஸ்

உயிரோட பிடிச்சு கொண்டு போய் விட்டா திரும்ப வருமா? இது அந்த முகம் நீட்டா இருக்குமே அந்த எலின்னு சொல்றாங்க... அது விடாம வருமாமே!! பயம் காட்டுறாங்க... விடாது கருப்பு மாதிரி :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மூஞ்சூறு பெஞ்சு மேல ஏறாதே! இது வேற எலியா இருக்கும்னு தோணுது.

இங்க நீல நிற ப்ளாக் ஒண்ணு விக்கிறாங்க. வேலை செய்யுது. ஆனா கொஞ்சம் ஸ்லோ.

பச்சை நிறத்துல பாலட் கிடைக்குது. இதுவும் ஸ்லோதான். ஆனால் 100% எஃபெக்டிவ். எப்போ எங்க சாகுதுன்னுதான் தெரியாது. கெட்டுப்போய் வாடை வராம பிரச்சினை இல்லாம நிரந்தரமா தூங்கிருவாங்க.

இது மூன்றையும் தவிர வேற எதுவும் தோணல வனி.

‍- இமா க்றிஸ்

அச்சோ வனி .எனக்கும் சேம் பிராப்ளம். எனக்கும் இன்னும் தீர்வு கிடைக்கல ,தினம் வந்து வாழைபழம் சாப்பிட்டு போகுது. எலிபொறீ தவிர எல்லா இடத்துக்கும் வந்துபோகுது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Be simple be sample

//சேம் பிராப்ளம். எனக்கும் இன்னும் தீர்வு கிடைக்கல// ம்... பொறியில வாழை'ப்'பழம் வைச்சுப் பார்க்கலாம். வந்தாலும் வரும். :-)

‍- இமா க்றிஸ்

வெச்சனே வாழை'ப்'பழத்தை சாப்பிடவே இல்ல. வெளிய இருக்கற வாழைப்பழம்தான் வேணுமான் செல்லத்துக்கு.

Be simple be sample

நான் ஒரு க்ரீன் மருந்தை தான் வாங்கி வந்து போட்டிருக்கேன் இன்னைக்கு. மார்டின் ராட் கில்லர். பார்ப்போம் என்ன பண்றார்ன்னு. அது ஏறாதோ?? மூங்கில் சோஃபா மேல ஏறாதா? ஆப்போ இது குட்டி எலியோ? அய்யோ... எதுவா வேணா இருக்கட்டும், இட் மஸ்ட் பி கில்ட். 3:) என் வீட்டில் என் அனுமதியின்றி அத்துமீறி வந்ததுக்கு. அதுவும் டர்ட்டி எலி... என் பிள்ளைகள் நடமாடும் இடத்தில்... விடமட்டேன் அதை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹைய்யா! வனி ஹேப்பி வனி ஹேப்பி ;) எப்பவுமே நம்ம கூட வேற யாராவது க்ளாஸில் ஃபெயில் அயிருந்தா ஒரு திருப்தி வரும் பாருங்க, கம்பெனிக்கு ஆளுன்னு அந்த திருப்தி. ;)

நீங்க வெளியவும் பழம் வெச்சு உள்ளையும் வெச்ச்ருப்பீங்க... அதான் அது உங்களுக்கு பெப்பரப்பன்னு காட்டிப்போயிருக்கும். உள்ள மட்டும் வெச்சு, வெளிய இருக்குறது அதுக்கு முன்னாடி நீங்க முழுங்கிடுங்க :) மாட்டுவார் நிச்சயம். ஆனா வர வர எலிக்கு எல்லாம் மனுஷனை விட புத்தி ஜாஸ்தியா இருக்கு. எதுக்கும் நாம இதுக்கு ஒரு திட்டம் போட்டு ஒரு ஆப்பரேஷன் ப்ளான் பண்ணுவோம்.

கடவுளே நான் இதுவரை என் வீட்டில் எலின்னு ஒரு ஜிவனை பார்த்ததே இல்லையே!!! 2 நாளா என் நிம்மதியே காணாம போச்சு. எதை பார்த்தாலும் இதை எலி தொட்டிருக்குமா? மூக்கை வெச்சிருக்குமா? இதுல ஓடி இருக்குமான்னே யோசனை... கண்ணில் பட்டதை எல்லாம் துவைக்கிறேன், துடைக்கிறேன், கழுவுறேன். :( மீ வெரி பாவம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க‌ கதைய‌ படிச்சா சிரிப்புதான் வருது, சாரி க‌ன்ட்ரோல் பன்ன‌ முடியலை ..... :-)))
நீங்க‌ சொல்ற‌ எல்லா ஜீவன்க‌ளோடயும் பெங்களூரில் நான் போராடியிருக்கேன், கடைசீயா பூனைகூட‌ என்னை விட்டு வைக்கல‌. நான் டோர்ல‌ மாட்டி வைக்கிற பால் பையை பிச்சு தினமும் வாசப்படியில‌ பாலாபிஷேஹகமே நடத்தியிருக்கு.

பல்லியை விரட்ட‌ முடியாம‌ கடைசியில‌ அதோட‌ ஃபிரண்ட்ஷிப்தான் எனக்கு கிடைச்சுதுதான் மிச்சம், வேறவழி....

காக்ரோச் இருக்கெ அது எறும்பு சாக்குக்கே பயந்து வர்றதில்லை...

ஆனா இந்த‌ எலி இருக்கே, அது அதோட‌ enemy யை பார்த்து ஓடினதுதான் ஒரே ஓட்டம் இன்னும் வரல‌, என்னதான் பாலாபிஷேகம் பன்னினாலும் இந்த‌ விஷயத்தில‌ நான் அந்த‌ பூனைக்கு மிகப்பெரிய‌ கடன் பட்டிருக்கேன்.
ஆனா அந்த‌ பூனைய‌ நான் வளர்க்கலைங்க‌, பக்கத்தில‌ யாரொ வளத்தராங்க‌ அது இப்படி எல்லாருக்கும் social service செஞ்சுட்டிருக்கு....:)))

உங்களுக்கும் ஒரு social service பூனைதான் தேவைன்னு நினைக்கிறேன்.......:))))

பூனை கிடைக்கலன்னா கவலைப்படாதீங்க‌, எலியார் எந்த‌ வழியா வர்றாரோ அந்த‌ வழியை ஒரு detective வச்சாவது கண்டுபிடிச்சு rat mess (கொசுவலை மாதிரி இருக்குமே )அடிச்ச்சுடுங்க‌......

எனக்குஎலி எப்படி வந்திருக்கும்னு ஒரு ஐடியா இருக்கு... ஒரு இடத்தில் நெட்லான் லேசா ஒரு வயர் வர பிரிஞ்சு இருக்கும், அந்த பக்கம் ரூம் பயன்படுவதில்லை, அதனால் அது வழியா வந்திருக்கணூம். ஆனா எலி மேல ஏறாதுன்னு இமா சொன்னதில் இருந்து வீடு முழுக்க “துப்பறிகிறேன் நான்” என க்றிஸ் ஸ்டைலில் சுற்றிக்கொண்டிருக்கேன். ஒரு கார்பெண்டரையும் தேடிகிட்டிருக்கேன், கதவு கீழே உள்ள இடைவெளி எல்லாம் அடைக்க.

பூனை!! ஆ!! பூனை!! நான் வந்த புதிதில் தினம் என் வீட்டு உள்ள தான் வந்து இரவில் தூங்குவார். நான் காலையில் கதவை திறந்ததும் என்னைக்கண்டு தான் எழுந்து சோம்பல் முறிச்சுட்டு போவார். கடுப்பா இருக்கும் பார்த்தா... என்னா திமுரு உடம்புல உனக்குன்னு திட்டிக்கிட்டே தான் போவேன். இவரு ”நீ தான் சேவல் மாதிரி தினம் அதை எழுப்புற... உன் சுப்ரபாதத்தை கேட்டு தான் அது கண் விழிக்குது” என்பார். நான் தானே தினம் அது மூஞ்சுல முழிச்சதுக்கு ஃபீல் பண்ணணும்? இவர் அது என் மூஞ்சுல முழிச்சதுக்கு ஃபீல் பண்றார்.

இப்ப எல்லாம் வந்துட்டு போயிருவார் போல, காலையில் என் பைக் மேலே கால் தடம் பார்க்கிறேன், ஆனா ஆளை காணல. இவர் முன் பக்கம் இருக்கிறதால் இந்த எலி பின் பக்கம் தான் சுற்றிக்கொண்டிருக்கு. பிடிப்போம் பிடிப்போம்... பிடிச்சு அதை ஒரு ஃபோட்டோவும் போடுவோம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்