குழந்தைக்கு பால் குடுக்கும் போது தலை சுத்தல்

எனக்கு இரட்டை குழந்தை 8 மாதம் ஆகிரது நார்மல் டெலிவெரி சத்து மாத்திரை எதுவும் சாப்பிடலை இட்டுப்பு ரொம்ப வலி இர்ருகு மாசம இருக்கும் பொதெ இந்த வலி இருந்துசி இப்பவும் வலி இருக்கு அதுக்கு என்ன பன்னலாம். 2 வாரமாக பால் குடுக்கும் போது தலை சுத்தல் இருக்கிரது ரொம்ப சோர்வ இருக்கேன் காலைல சிக்கிரம் எலுந்திருக்க முடியல இப்படிதன் இர்ருகும? அதுக்கு என்ன பன்னலாம்.

//இட்டுப்பு ரொம்ப வலி இர்ருகு மாசம இருக்கும் பொதெ இந்த வலி இருந்துசி// - அப்போ மருத்துவரிடம் சொன்னீங்களா? சொல்லி இருந்தா கேல்ஷியம் கொடுத்திருப்பாங்களே, வலி குறையும்.

//சத்து மாத்திரை எதுவும் சாப்பிடலை // - பிரசவத்தின் போதா? டெலிவெரிக்கு பின்னா? எப்ப மருந்து எடுத்துக்கல? பிள்ளை பெற்றா 6 மாதம் வரை விட்டமின் மாத்திரைகள் கொடுப்பதை எடுக்கணும். பால் கொடுக்கும் தாய்க்கு உணவு மட்டுமே போதாதுன்னு தான் கொடுப்பாங்க. ஒரு பிள்ளைக்கே அப்படி, இரண்டு பிள்ளைன்னா?? கொடுத்து நீங்க சாப்பிடலயா? இல்ல கொடுக்கவே இல்லயா?

//2 வாரமாக பால் குடுக்கும் போது தலை சுத்தல் இருக்கிரது ரொம்ப சோர்வ இருக்கேன் // - குழந்தைக்கு 8 மாதன் என்றீர்கள்... உங்களுக்கு பீரியட்ஸ் சரியா வர துவங்கிடுச்சா? இல்ல... கர்ப்பமா இருக்கீங்களா இல்லையான்னு உங்களுக்கு உறுதியா தெரியும் தானே? அந்த சந்தேகம் ஏதும் இல்லன்னா இது சத்து குறைபாடா தான் இருக்கனும். மருத்துவரை பார்த்து உடனடியே உங்களுக்கு தேவையான விடமின் மருந்துகளை கேட்டு சாப்பிடுங்க, சரியாகும்.

அப்படி சந்தேகம் இருந்தா உடனடியா டெஸ்ட் பண்ணிக்கங்க. பால் கொடுக்கும் போது சிலருக்கு பீரியட்ஸ் வராது, ஆனா குழந்தை நிற்க வாய்ப்பு உண்டு. அதனால் தான் அந்த சந்தேகத்தை கேட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்