பொருத்தமான ரவிக்கை

புடவை வாங்கும் பொழுது ரவிக்கையையும் சேர்த்து தான் வாங்குவோம். சில புடவைகளில் ரவிக்கைதுணியைச் சேர்த்து வைத்துள்ளார்கள். விலையுவர்ந்த புடவையானாலும் சரி, விலை மலிவான புடவையானாலும் சரி அவற்றின் அழகை முழுமைப் படுத்துவது நாம் அணியும் ரவிக்கைத் தான்.ஆகவே இந்த முக்கியமான விசயத்தை இங்கு உங்களோடு பகிர்ந்துக் கொள்கின்றேன்.
ரெடிமேட் ரவிக்கை ஆனாலும், தைத்து அணிந்தாலும் நம் உடல் அமைப்பை பொறுத்து அவை கச்சிதமாக இருக்க வேண்டும்.
உயரமானவர்கள் கை நீளமான ரவிக்கை தவிர்த்து நீளம் குறைந்த அளவில் தேர்வு செய்யலாம். கழுத்து வட்டமான அல்லது சதுரமான வடிவமாக அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும். ஜரிகை ரவிக்கை போடும் பொழுது கையில் பாடர்களை வைக்காமல் ரவிக்கை முழுவதும் ஜரிகை இழை ஓடிய துணியினால் தைத்த ரவிக்கை மிகவும் அழகைக் கொடுக்கும்.
அதேப் போல் உயரம் குறந்தவர்கள் குட்டையான கைவைத்த ரவிக்கைகளை தவிர்த்து சற்று நீளமான கையுடைய ரவிக்கையை அணியலாம். கழுத்தை ஓவல் வடிவம், செவ்வக வடிவம் போன்ற வடிவத்தில் அணிந்தால் அழகாக இருக்கும்.
ஜரிகை வைத்த ரவிக்கையை தேர்வு செய்யும் பொழுது கையில் பாடர்ஸை வைத்தும் அணியலாம்.அல்லது மெல்லிய ஜரிகை இழை குறுக்கும் நெடுக்குமாக ஒடிய ரவிக்கையை தைத்து அணிந்தால் பேரழகை பெறலாம்.
பழைய படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை பார்த்தோமானால் குட்டை, நெட்டை, ஒல்லி, குண்டு, என்று எல்லா வடிவத்திலும் இருப்பார்கள்.அனால் அவர்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் மிக கச்சிதமாக இருப்பதை காணலாம். கண்டு இது போன்ற நிறைய அழகுக் குறிப்புகளையும் கற்றுக் கொள்ளலாம்.
முக்கியமாக இந்த அட்டாச் பிளவுஸ் உள்ள புடவைகளை தவிர்த்து, நமக்கு பிடித்தமான ரவிக்கை துணியை வாங்கி தைத்து அணிவதில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என் கருத்து என்று கூறி முடிக்கின்றேன் நன்றி.

prema
yes madam.how are you. thankyou for your tips....

prema

மேலும் சில பதிவுகள்