சோளத் தோகை ரோஜா

தேதி: August 21, 2014

5
Average: 4.5 (4 votes)

 

சோளத் தோகை (Corn Husk)
நூல்
கத்திரிக்கோல்
பச்சை நிற டேப்
குறடு
சற்று தடிமனான கம்பி - தேவைக்கேற்ப
ஸ்டாக்கிங் கம்பி - தேவைக்கேற்ப
விரும்பிய ஃபுட் கலர் (பூக்களுக்கு)
பச்சை ஃபுட் கலர் (இலைக்கு)
இஸ்திரிப்பெட்டி
பழைய நியூஸ் பேப்பர்
வெள்ளை பேப்பர்
பென்சில்
க்ராஃப்ட் க்ளூ
டூத் பிக்

 

விரும்பிய நிற ஃபுட் கலரில் பூவுக்கும், பச்சை நிறத்தில் இலைகளுக்கும் சாயமிட்டு காயவிடவும். காய்ந்ததும் இஸ்திரி போட்டு சோளத் தோகைகளை தயாராக வைக்கவும். சிறியதும் பெரியதுமாக 2 அல்லது 3 அளவுகளில் இதழ்கள் தேவைப்படும். வெள்ளை பேப்பரில் தேவையான அளவுகளில் ரோஜா இதழை வைத்தே இதழ் வடிவத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும். அவற்றை மாதிரியாக வைத்து தோகைகளில் இதழ்களை வெட்டி எடுக்கவும். (குறைந்தது ஒவ்வொரு அளவிலும் 6 இதழ்கள் தேவைப்படும்).
க்ரேப் பேப்பரில் இதழ் வடிவம் கொடுப்பது போல, இதழின் நடுவில் விரலால் நீவி விட்டால் குழியாகி ரோஜா இதழின் வடிவம் கிடைக்கும்.
கெட்டியான கம்பியின் முனையை குறட்டினால் முடுக்கி விட்டுக் கொள்ளவும். ஒரு சிறு செவ்வக வடிவத் தோகையை எடுத்து, இரண்டாக மடித்துக் முடுக்கிய கம்பியின் நுனியில் வைத்துச் சுற்றி நூலால் கட்டிக் கொள்ளவும்.
பிறகு அதைச் சுற்றிலும் சிறியதாக வெட்டி எடுத்த ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாக வைத்துக் கட்டிக் கொண்டே வரவும்.
அதனைச் சுற்றிலும் அதைவிட பெரிய இதழ்களை வைத்துக் கட்டவும். அதற்கடுத்து அதைவிட பெரிய அளவான இதழ்களை வைத்துக் கட்டிக் கொள்ளவும். (ஒவ்வொரு இதழையும் நூலால் பூ கட்டுவது போல கட்டவும்).
இதழ்களின் நடுவே விரலை விட்டு சற்று மலர இருப்பது போல பூவை லேசாக விரித்துவிடவும். பிறகு இதழ்களின் ஓரங்களை டூத் பிக் அல்லது பென்சில் கொண்டு சுருட்டிவிடவும். (இவ்வாறு சுருட்டிவிடுவதால் இதழ்கள் அனைத்தும் உண்மையான பூவின் இதழ் போலவே இருக்கும்).
பிறகு பூவின் அடிப்பகுதியில் வைப்பதற்கு புல்லிதழ் (Sepal) தயார் செய்ய பச்சை நிற தோகையில் மெல்லியதாக 5 இலை வடிவத் துண்டுகள் வெட்டி எடுக்கவும்.
அவற்றை ஒவ்வொன்றாக இதழ்களின் அடிப்பகுதியைச் சுற்றிலும் வைத்துக் கட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரே அளவில் 2 இலை வடிவத் துண்டுகள் வெட்டி எடுக்கவும்.
அவற்றில் ஒரு துண்டின் மீது சிறிது க்ராஃப்ட் க்ளூ தடவி, ஸ்டாக்கிங் கம்பியை வைக்கவும். அதன் மேல் மற்றொரு இலை வடிவத்தை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
பூவின் காம்பு பகுதியில் பச்சை நிற டேப் சுற்றிவிடவும். பூவுடன் இலையை இணைத்து சுற்றி முடித்தால் அழகான சோளத் தோகை ரோஜா (Corn Husk Rose) தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூ...ப்பர் வனி. கலர் கண்ணைப் பறிக்குது. முடிவு செய்தாச்சு. இமா கட்டாயம் செய்து பார்க்கிறதுதான்.

‍- இமா க்றிஸ்

குறிப்பு வந்தாச்சா? அருமை. நான் பார்தததைவிட அறுசுவையில் ரோஜா ஜில்ல்னு இருக்கு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அழகா இருக்கு சோளத் தோகை ரோஜா... கட்டாயம் செய்துவிடுவேன். வாழ்த்துக்கள் :)

Kalai

ரோஜா அழகா இருக்கு. நல்லா நேர்த்தியா செய்திருக்கீங்க‌.
வாழ்த்துக்கள்.

சோளத்தில் செய்தது போலவே இல்லை, ஒருபக்கம் பிளாஸ்டிக் பூ போலவும், இன்னொருபக்கம் உண்மை பூ போலவுமே உள்ளது!! சூப்பர்ப்....

பூவோட‌ கலர் சூப்பர் வனி....

ரொம்ப அழகு... நிஜமான பூ போலவே இருக்கு

ரெட் ரோஸ் ரொம்ப‌ அழகா இருக்கு.....சூப்பர்.
அழகான சோளத் தோகை ரோஜா வனி அக்கா நல்லா லுக்கா செய்துஇருக்கீங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சோளத் தோகை ரோஜா கொள்ளை அழகு... குட்டீஸ் ஹெல்ப் பண்ணாங்களா... அதான் அவங்கள‌ மாதிரியே ரொம்ப‌ க்யூட்டா இருக்கு... லவ்லி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை அழகாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :) செய்து காட்டிடுங்க‌ எனக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எந்த‌ குறிப்புமே டீம் கை பட்டா பளிச்சுன்னு அட்டகாசமா தான் வருது ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்துட்டு எனக்கு படத்தை காட்டிடணும் ;) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) அந்த‌ கலரை கொண்டு வரத்தான் இந்த‌ குறிப்பில் எனக்கு நேரம் அதிகம் எடுத்துது. அதுபாட்டுக்கு ஒரு 45 நிமிஷம் வரை கொதிக்க வேண்டி இருந்தது. சில‌ நேரம் மறந்து பாத்திரத்தோட‌ தோகையும் கருப்பா போச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லுக்கா டீம் காட்டி இருக்காங்க‌ ;) நன்றி சுபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடியோ... எவ்வளவு நாளுக்கு அப்பறம் வந்திருக்கீங்க‌ ;) நன்றி நன்றி. பதிவுக்கும் வருகைக்கும்.

//குட்டீஸ் ஹெல்ப் பண்ணாங்களா// ‍ இது குசும்பு தானே?? அவங்க‌ கையில் கண்ணில் படாம இதை மறைச்சு வைக்க‌ நான் பட்ட‌ பாடு...!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மையை சொல்லவா இப்போவும் சோளத் தோகை ரோஜா ரொம்ப‌ அழகா தான் வந்திருக்கு ...
இருந்தாலும் புள்ளைங்க‌ கண்ணுல‌ படுற‌ மாதிரி வச்சு இருந்தா அவங்க‌ ஐடியாவும் சேர்ந்து இன்னும் அட்டகாசமா இருந்து இருக்கும் கலர் காம்பினேஷன்

நீங்க‌ பர்பெக்டா பண்ணி இருக்கீங்க‌ பட் அவங்களையும் ஹெல்ப் பண்ண‌ விடுங்க‌ அக்கா பாவம் ல‌ குட்டிஸ்

சின்னவர் கிட்ட‌ மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க‌ அவர் கொஞ்சமே கொஞ்சம் தான் விளையாட்டு பிள்ளை .... மத்தபடி ;) உங்களுக்கே தெரியும் ;)

இவ்வளவும் இவ‌ எதுக்கு பேசுறா நு தான‌ யோசிக்குறீங்க‌... அதுலாம் எனக்கும் உஙக் குட்டிஸ்க்கும் உள்ள‌ டீல் .... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பரோ சூப்பர். நேச்சுரல் ரோஸ் மாதிரியே கலர் ஃபுல்லா இருக்கு...

கலை

டீல்??? ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கில்ல‌. 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :) நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப‌ அழகா இருக்கு. நிறைய‌ திறமை உங்களிடம் இருக்கிறது.:)

மிக்க‌ நன்றி :) எல்லா புகழும் இறைவனுக்கே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Beautiful flowers... Nice colors :) seythu photo anupuven ;)

Kalai

மிக்க நன்றி :) வெயிட்டிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Wow super. All the best.

Mikka nanri :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா