குழந்தைக்கு உணவு

என் பையனுக்கு 7 மாதம் நான் காலை 8.30 க்கு வேலைக்கு கிளம்புகிரென் மாலை 5 க்கு வீட்டிற்க்கு வருகிரென். என் மாமனார் தான் குழந்தயை பார்த்து கொள்கிரார். அவர் இரவு செக்யூரிடி வேலைக்கு செல்கிரார். பகலில் குழந்தையை பார்த்து கொன்டு அவன் தூங்கும்பொழுது தூங்குகிரார் விளையாடும்பொழுது பார்த்து கொள்கிரார். அவர் கட்டிலை விட்டு இற்ங்குவதில்லை. குழந்தைக்கு சாதம் ஊட்ட‌ சொன்னால் முடியாது நான் தூங்க‌ வேன்டும் என்கிரார். 5 மனிக்கு மேல் சாதம் ஊட்டலாமா ஜீரனம் ஆகுமா குழந்தைக்கு சாதம் ஊட்ட‌ வேரு வழி எதாவது இருக்கிரதா இப்பொழுது cerelac lactogine மட்டும் தான் கொடுகிரார்

6 மணிக்கெல்லாம் கொடுக்கலாம். ஆனால் மசாலா சேர்க்காத உணவாயிருப்பது நல்லது. நெய்யும் இரவில் வேண்டாம்.
உணவு கொடுத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தை விழித்து இருக்க வேண்டும். நீங்கள் காலையில் வேலைக்கு செல்லும் முன் இட்லி, அல்லது தோசையுடன் பருப்பும், நெய்யும் கலந்து ஊட்டி விட்டு செல்ல பாருங்கள்.
இரவில் விழித்து வேலை பார்ப்பவர்கள் குழந்தையை பகலில் கவனிப்பதென்பது அத்தனை எளிதானதல்ல. குழந்தையின் Safety மிக முக்கியம்.

Mudintha alavuku kalaiyil edli kutuka parunka aprum neenka work pona pin mamakita biscut banana ceralac milk evaikala kutuka solunka evng neenka vantha aprum parupu satham kutunka araimani neram kaliju thoonka vaiunka ok

ML

என் 8 மாத‌ பையன் சாதம் சாப்பிடவே மாட்டேங்குரான். நான் மாலை 4.30 மனிக்கு சாதத்தில் கொஞ்சம் பருப்பு சேர்த்து வேக‌ வைத்து கடைந்து துளி நெய் விட்டு கரன்டியால் மசித்து தான் ஊட்டுகிரென் 2 ஸ்பூன் தான் சாப்பிடுகிரான் அதும் அழுது கொன்டே தான் அதர்க்கு மேல் என்னால் கட்டாய‌ படுத்துவதில்லை நான் என்ன‌ செய்வது அவனை எப்படி சாப்பிட‌ வைப்பது ஏதாவது வழி கூறுங்கள் ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்