அபார்சன்

எனக்கு திருமணமான அடுத்த மாதம் கரு தங்கி விட்டது. ஆனால் அந்த குழந்தைக்கு இதய துடிப்பு. வரவில்லை தானாக மூன்று மாத்த்தில் கலைந்து விட்டது. d &c பண்ண வில்லை .அதற்கு பின் ஒனபது மாதங்கள் ஆகியும் கரு தங்க வில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. தோழிகளே என் போன்று யாருக்காவது இது போல் நடந்து குழந்தை இருக்கிறதா? d &c செய்தால் தான் குழந்தை வருமா ? எனக்கு ரெகுலர் பீரியட் தான் . எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே . நான் இங்கு தனிமையில் தவிக்கிறேன் உதவுங்கள்

//என்ன செய்வதென்று புரியவில்லை.// இப்போதைக்கு ஒன்றே ஒன்றுதான் நீங்கள் செய்ய வேண்டியது. கண்டபடி யோசிக்காமல் நன்றாகச் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். என்னைக் கேட்டால்... இடையில் ஒன்பது மாதங்கள் நல்ல விடயம்தான் என்பேன். உங்கள் உடல்நிலை தேற நிறைய கால அவகாசம் கிடைத்திருக்கிறது.

//d &c செய்தால் தான் குழந்தை வருமா ?// அப்படியில்லை என்று நினைக்கிறேன். D&C செய்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. இப்போது யோசிப்பதால் ஆகப் போவது எதுவுமில்லை கண்ணா. ரிவர்ஸ்ல போக முடியாது இல்ல! யோசிக்காம இருங்க. முதலில் மனசு நன்றாக இருப்பது முக்கியம். எங்க அம்மா, பாட்டி காலத்திலெல்லாம் எல்லாக் கருச்சிதைவுகளுக்கும் பின்னால் D&C செய்திருக்க மாட்டார்கள். இயற்கை சிலதைச் சரிசெய்யும். காலம் எடுப்பது நல்லதுதான். //ரெகுலர் பீரியட்// அப்போ யோசிக்காம இருங்க.

//தனிமையில் தவிக்கிறேன்// அதற்குத்தானே அறுசுவை இருக்கிறது. உங்கள் சமையலை, உங்களுக்குத் தெரிந்த கைவினையை இங்கு குறிப்பாக அனுப்பலாம். கதை கவிதை எழுதுவீங்களா? அனுப்பி வைங்க. வரும் கமண்ட்ஸுக்கு பதில் போடுறதுல தனிமை காணாமப் போய்ரும். பிறகு மெதுவாக எல்லாம் சரியாகும்.

வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

கட்டாயம் என்றில்லை, ஆனால் ஒரு முறை மருத்துவர் ஆலோசனை எடுக்கலாம், அதுவும் உங்க மனசு திருப்திக்காக. அதிகபட்சம் ஒரு ஸ்கான் பார்ப்பாங்க. மருந்து அது இது இப்போ தேவை இல்லை, நல்லா இருக்க உடம்பை தேவையில்லாம வம்பு பண்ணக்கூடாதில்ல.

என் தோழிக்கும் இப்படி ஆனது, பின் 1 வருடம் கழித்து மீண்டும் குழந்தை உண்டானது. அதனால் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள். பீரியட்ஸ் ரெகுலரா இருக்குன்னா டாக்டர் ஸ்கான் கூட பண்ணுவாங்கன்னு எனக்கு தோனல. ஒழுங்கா அபார்ட் ஆகாம உள்ளே ஏதும் மிச்சம் (சிறு துளி இருந்தா கூட) இருந்தா பீரியட்ஸ் ரெகுலரா இருக்காது, இல்ல போக ஆரம்பிச்சது நிக்காம இருக்கும்... இது போல நேரத்தில் தான் தானா க்ளீன் ஆகலன்னு டாக்டர்ஸ் அபார்ட் பண்ணுவாங்க. இப்போ உங்களுக்கு அது சரியா இருக்குன்னா நிச்சயம் உள்ளே ஒன்னும் இல்ல, D&C பண்ணும் அவசியம் இல்லை என்று தான் அர்த்தம்.

அதனால் மனசை சந்தோஷமா வைங்க, இதை பற்றிய சிந்தனையே இல்லாம இருங்க... தானா நல்லது நடக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா மேடம், வனிதா மேடம் ரொம்ப நன்றி. நீங்க எனக்கு பதில் சொன்னது ரொம்ப ஆறுதலா இருந்தது. மனசு இப்ப லேசானது போல இருக்கு. தோழிகளே எனக்கு மட்டுமல்ல அனைத்து தோழிகளின் சந்தேகத்திற்கும் நீங்கள் கூறுகின்ற பதில்கள் அவர்களுக்கும் ஆறுதலாக இருப்பதை படித்திருக்கிறேன். வனிதா மேடம் உங்கள் தோழிக்கும் என்னை போல். d&c பண்ணாமலே குழந்தை பிறந்ததா ? நான் கரு கலைந்து ஆறு மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூரில் ஸ்கேன் செய்து பார்த்தோம் . ஆனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் கூறினார்.லேசான நீர்க்கட்டி இருக்கிறது ஆனால் அது பிரச்சனை இல்லை என்றும் வெயிட்டை கொஞ்சம் (64கிலோ)குறைக்க வேண்டும் என்று கூறினார்.

ஓ... ஸ்கான் பார்த்தாச்சா? குட் குட். ஆமாம் அவங்களும் முறையா அபார்ட் பண்ணல. பொதுவா ஒரு ஆரோகியமான உடல் உடனுக்குடன் கரு நிக்காதுங்க. காரணம் ஒரு முறை நின்று கலைந்தால் கருப்பை கொஞ்சம் வீக்கா இருக்கும், அது ஆறி ஒரு குழந்தையை தக்க வைக்க கொஞ்சம் நாள் எடுக்கும். அதனால் மருத்துவர் சொன்னது போல உணவில் கட்டுப்பாடு, உடல் எடை குறைப்பது போன்றதை கவனிங்க. அவங்களே ஒன்னும் இல்லன்னு சொன்ன பின் ஏன் கவலை? சிரிங்க :) சிரிச்சுகிட்டே சந்தோஷமா எல்லாம் செய்ங்க. நல்லது தானா நடக்கும்... அதையே நினைச்சு கவலைபடுறது குழந்தை பிறப்பை இன்னும் தாமதப்படுத்தும்னு மருத்துவர்கள் சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு செப்டம்பர் 15 தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.எனது சந்தேகத்திற்கு பதில் அளித்த இமா மேடம், வனிதா மேடத்திற்கும் நன்றி. இந்த இனிய செய்தியை உங்களிடம் தெரிவிக்க ஆசை பட்டேன்.

Sakthi giri sister ungalaku enoda wishes...enaku ipo post lam pathu konjam aaruthala iruku ......enaku ipolam arusuvai varathuthan time pass .....feel very lonely....inga ethachum padichutu konjam nalla useful ah time poguthu ....thanks imma mam vani vasu sister ungaloda caring comments ellam romba useful ah iruku...thanks everyone in arusuvai....

frd na 3month pregnant ..na Foreign la iruken Entha monthla flightla fly panrathu safe? Plz Ans pannuga..enoru doubt Vameet Tablet Saptom vamet varuthu athuku tips thaga frd vamet stop Aaga..

neenga onnum payappada vendom enakkum ithu mathiri ahirichu naanum ithey mathiri payanthen enakku marriage agi 3 monthla pregnent aanen appuram baby heart beat illannu solli abortion panna tablet kodutthanga appuram 10 months kalichu pregnent aginen ippo en ponnukku 1 1/2 years aguthu so don't worry ok

God is love

மேலும் சில பதிவுகள்