ஒரு வயது குழந்தை உணவு.

தோழிகளே எனக்கு உதவுங்கள். எனது குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. சத்தான அதே சமயம் சுவையான உணவு கொடுக்க விரும்புகிறேன். எனக்கு இந்த அறுசுவையில் இருக்கும் ஒரு வயது குழந்தைக்குரிய உணவு வகைகளை எப்படி பார்ப்பது என்று சொல்லுங்கள். ரெசிபீஸ் கொஞ்சம் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் . நன்றி.

http://www.arusuvai.com/tamil/node/14967 பாருங்கள். உதவுமா என்று தெரியவில்லை.

//எப்படி பார்ப்பது// மேலே அறுசுவையில் கூகுள் சர்ச் பகுதியில் விதம் விதமாகத் தட்டித் தேட வேண்டும். புதிதாக இழை ஆரம்பிக்கும் சகோதரிகள் உங்களைப் போல கேள்வி இன்னது என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். அனேகமானவர்கள் 'உதவி தேவை', 'உதவுங்கள் தோழிகளே' என்றே தலைப்புப் போட்டு வைப்பதால் இப்போது தேடுவது சற்றுச் சிரமம்தான். ;(

நீங்கள் மன்றத்தில் சரியான பகுதியில்தான் கேள்வியைப் பதிவிட்டிருக்கிறீர்கள். அதே பகுதியிலிருக்கும் மீதித் தலைப்புகளை ஒரு தடவை க்ளிக் செய்து உள்ளே நுழைந்து பாருங்கள். அதற்குள் வேறு சகோதரிகள் இங்கு பதில் சொல்லக் கூடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா. நான் தேடி பார்க்கிறேன் .

அன்புடன்,
zaina.

மேலும் சில பதிவுகள்