குழந்தை பேறு தள்ளி போக மிக மிக முக்கிய காரணம் மனஅழுத்தம்.

ஆமாங்க. மனஅழுத்ததிலிருந்து விடுபட்டதும் எனக்கு பிள்ளை நின்றதுனு இந்த தளத்திலேயே நிறைய பேர் சொல்லியிருக்காங்க. நானும் தான். அது முழுக்க முழுக்க உண்மை. தள்ளி போக போக நமக்குள் எத்தனை கேள்விகள்? எத்தனை போராட்டங்கள் மனதில்? இதனால் நிக்கலையோ? அதனால் நிக்கலையோ? இப்படி செய்தால் தங்குமோ? அப்படி செய்தால் தங்குமோனு எவ்வளவு யோசனைகள்? மனம் படும் பாட்டை கேட்டால் நாய் கூட கண்ணீர் விடும். என்ன தான் சொல்ல வரன்னு கேட்பது கேட்கிறது. தயவு செய்து சந்தோஷமா இருங்க. அதையே நினைக்காதீங்க. நான் திருமணத்திற்கு பின் பிள்ளை வேண்டாமென்று ஒரு வருடம் தள்ளி போட்டேன். பின் நின்று கலைந்தது. கஷ்டபட்டேன். ஆறு மாதம் ஆகியது. அப்போது தான் வேண்டும் என்று ஆசைபட்டு முயற்சி செய்தோம். ஆனால் கரு தங்கவில்லை. மூன்று மாதம் கடந்தது. பயமும், மனஅழுத்தமும் என்னை ஆட்கொண்டது. டாக்டர், மருந்து, மாத்திரை, ஆகாரம் என்று எல்லாமும் மாறியது. எதுவும் நடக்கவில்லை. இணையத்தில் தேடாத வார்த்தைகள் இல்லை இதை பற்றி. அறுசுவையில் பார்க்காத பதிவுகள் இல்லை. கேட்காத கேள்விகள் இல்லை. அழதா நாட்கள் இல்லை, வேண்டாத தெய்வங்களும் இல்லை. கடைசியாக வீடு மாற நேர்ந்து சூழல், மனிதர்கள் மாறி மனம் வேறு ஒன்றை பற்றி ஆர்வம் கொண்டு அழுத்ததிலிருந்து விடுபட்ட அந்த மாதமே என் நாள் தள்ளியது. அந்த பொன் நாளும் வந்தது. இன்று என் மகன் என் மடியில். அப்பாடா கை வலிக்குது. எனவே தோழிகளே மனஅழத்திலிருந்து எப்படியாவது வெளிவர முயன்று பாருங்கள். வெற்றி நிச்சயம்.

Enaku mrg agi 2 months than aguthu.en mamiar veetla kuda enna onnum solla matanga.but intha 2 months period vanthathuku en amma enna thiti theethutanga.intha time thituna avlothan.thanga mudiathunu atha nenache mindku romba pressure kuduthuten.neenga sonatha keta piragu na ini relaxa iruka happya iruka pakren.thanks akshitha akka

அஷ்விதா உங்களுக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்ததா

நானும் உங்களை போல் தான் 2 வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன். மன அழுத்ததில் தான் தினமும் வாழ்கிறேன். அதனாலேயே கரு நிக்கவில்லை என நினைக்கிறேன். உங்களுடைய பதிவு எனக்கு ஆறுதலாக உள்ளது. என் கணவரையும் பாடாய் படுத்துகிறேன். நான் என்னதான் முயற்சி செய்தாலும் மன அழுத்ததிலிருந்து விடுபட முடியவில்லை. 24 மணி நேரமும் இதே சிந்தனையில் தான் இருக்கிறேன். கரு நிக்க என்ன செய்ய வேண்டும். எனக்கு ஆலோசனை கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்