வெட்டவெளி பொட்டலிலே-3

”அம்மா”
”என்னடி”
”நான் ஸ்கூலுக்கு போறேம்மா, படிக்கனும்னு ஆசையா இருக்கு. எங்க டீச்சர் நல்லா படிக்கறே மேலே படி நல்லா வருவேன்னு சொல்லி இருக்காங்கம்மா. நீ அப்பங்கிட்டே சொல்லும்மா. நான் படிக்கனும்”.
”உங்கொப்பன் வரட்டும் கேட்டு சொல்றேன். நீ ஆட்டை ஓட்டிட்டு போ”
கோடை விடுமுறை முடியும் நாள் வேகமாக வந்து கொண்டிருநதது. பக்கத்து நகரத்தில் புதிதாக கார்மெண்ட்ஸ் உருவாகின. நகரத்தில் இருந்து வாகனங்கள் கிராமம் நோக்கி வர தொடங்கின.
தே புள்ளே... சுப்புக்கு எல்லோருமே புள்ளேதான். யாரையும் பெயர் சொல்லி அழைத்தோ மரியாதையாக கூப்பிட்டோ பழக்கமே இல்லை.
என்னாப்பா.
பக்கத்து ஊர்ல என்னமோ துணி தெய்க்கறது ஆரம்பிச்சிருக்காங்களாம். காலைல போய்ட்டு சாயந்திரம் வந்துடலாமாம். இருநூறு ரூவா கூலி தாராங்களாம், நாளைல இருந்து போறியா?.
நான் ஸ்கூலு போகனும்.
ஒதைசேன்னு வெச்சுக்க இடுப்பு ஒடிச்சிடுவேன்... பள்ளிகூடம் போறாளாம் பள்ளிகூடம். நாளைல இருந்து வேலைக்கு போ.
செய்வதறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது இந்துவுக்கு.
அடுத்த நாள் எதுவுமே பேசாமல் காலையில் சோற்றை தூக்குபோவனியில் போட்டு கொடுத்தாள் அம்மா.
வேனில் ஏற்றி விட இந்துவை அழைத்து வந்தான் சுப்பு. மனது அழுது அழுது மரத்து போன நிலையில் உதவி செய்ய யாருமற்ற அபலையாய் தன்னை உண்ர்ந்தாள் இந்து. வேன் அருகே வந்த பொழுது வேனின் டிரைவர் இந்துவை ஏற்ற மறுத்தார். ”வயசு கம்மியா இருக்கும் போல இருக்கே... பதினாலு வயசுக்கு மேலே இருந்தாதான் வேலைக்கு வரனும்மா, பதினாலு வயசுக்கு கம்மியான புள்ளைங்களை வேலைக்கு வெச்சுகிட்டா கம்பெனியை இழுத்து சீல் வெச்சுடுவாங்களாம்”, நீ இறங்கு. இந்துவின் மனதில் ஜிலீரிட்டது ஆனந்தம். யாருக்கு நன்றி சொல்ல... சாமிக்கா இல்லை அரசாங்கத்துக்கா. செய்வதறியாமல் குழம்பி போய் நின்ற அப்பனை கூட மறந்து விட்டு வீட்டுக்கு பறந்தாள் இந்து.
ஏண்டி வந்துட்டே... குட்டியானை தொட்டிலில் போட்டு கொண்டே அம்மா கேட்டாள்.
பதினாலு வயசுக்கு கம்மியா இருந்தால் வேலைக்கு வெச்சுக்க மாட்டாங்களாம்...
சரி... அப்போ நாளைலே இருந்து குட்டியான பார்த்துட்டு ஆட்டை மேச்சிக்கோ... நானு வேலைக்கு போறேன். இருநூறு ரூவா கூலியாமில்லே...
இடி நேராக உச்சந்தலையில் இறங்கியது இந்துவுக்கு

5
Average: 5 (4 votes)

Comments

அண்ணா ரொம்ப தாமதம் பண்ணறிங்க. இந்துக்கு மட்டுமா கடைசில அதிர்ச்சி. எங்களுக்கும் தான். கொஞ்சம் யோசிச்சு புள்ளய படிக்க வைங்கண்ணா.

Be simple be sample

சீக்கிரம் அடுத்த பாகம் வரணும். இல்லாட்டா படிக்க மாட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

பெண் பிள்ளையை படிக்க வையுங்க அந்த குடும்பம் படிச்ச மாதிரி இல்லனா நான் பள்ளி கூடத்துக்கு இந்து வை அனுப்பி வைப்பேன் சரியா

இந்துவை படிக்க வைக்கறதுல ரொம்ப ஆர்வமா இருக்கீங்க

அன்புடன்
THAVAM

கதை ரொம்ப நல்லா இருக்குங்.
இன்னும் சீக்கிரமே அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறோம். :-)

நட்புடன்
குணா