அடம்பிடிக்கிறான்னு..............

என் பையன் L.K.G படிக்கிறான்.தினமும் அவனோட‌ டீச்சர் அவன‌ பத்தி குறை சொல்றாங்க‌.அவன் க்ளாஸ்ல‌ எதுவும் எழுத‌ மாட்டேங்குறான் ,சொல்ற‌ பேச்ச‌ கேட்க‌ மாட்டேங்குறான்,ஏதாவது சொன்னா உடனே பயங்கரமா சத்தம் போட்டு அழறானு சொல்றாங்க‌...க்ளாஸ்ல‌ ஒரு இடத்துல‌ உட்காரதில்லை,ரொம்ப‌ அடம்பிடிக்கிறான்,சொல்லி குடுத்தா எதுவும் சொல்றதில்லை இன்னும் நிறைய‌.....
எனக்கு என்ன‌ பண்றதுன்னு தெரியல‌...அவன் சின்ன‌ பையன் அவனுக்கு எப்படி சொல்லி புரிய‌ வைக்கிறது.ரொம்ப‌ வருத்தமா இருக்கு :( .உங்களுக்கு இதை பற்றி ஏதாவது ஜடியா இருந்தா சொல்லுங்கப்பா....ப்ளீஸ்......

Mk.. உங்கள் பையனுக்குப் பிடித்த‌ உணவுகளையோ அல்லது விளையாட்டுப் பொருட்களையோ வாங்கிக் கொடுத்து நீ நன்றாகப் படித்தால் உணக்கு இன்னும் நிறைய‌ வாங்கித் தருவேன் என்று கூறுங்கள். அது மட்டும் அல்லாமல் அவனுக்கு பிடித்த‌ இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாகவும் உறுதியளிங்கள். நிச்சயம் நன்றாகப் படிப்பான். குழந்தைகளை அன்பால் மட்டுமே வெல்ல‌ முடியும்.

ஷாலி அருண்

தினமும் அப்படி சொல்லிதான் அனுப்புவேன்.மிஸ் சொன்னா கேட்கனும் அப்பதான் உன்ன‌ குட் பாய்னு சொல்லுவாங்கனு,சரிம்மா சரிம்மானு சொல்லிட்டு போவான், ஆனா மிஸ் தினமும் ஏதாவது ஒரு குறை சொல்லிதான் வீட்டுக்கு அனுப்புவாங்க‌.

மற்ற‌ பையன்களைப் பாரு எப்பிடி படிக்கிறாங்க‌ அவங்கட‌ அம்மா எவ்வளவு ஹப்பியா இருப்பாங்க‌ ஆனா உன்னோட‌ அம்மா எவ்வளவு கவலைப்படுவா, பாவம் தானே அம்மா நீ நல்லா படிச்சா அம்மா ரொம்ப‌ ஹப்பியா இருப்பேன் என்டு சொல்லிப் பாருங்க‌..

ஷாலி அருண்

ரொம்ப‌ நன்றி ஷாலி.நீங்க‌ சொல்ற‌ மாதிரி செய்றேன் பா..

ஸ்கூலில் மட்டுமா இல்லை வீட்டிலும் அடம் தானா... யார் சொல்வதை கேட்பானோ அவர் மூலம் சொல்லுங்கள்

வீட்டிலும் சில‌ சமயம் ஏதாவது சொன்னா ரொம்ப‌ அடம் பிடிப்பான்.pre.k.g படிக்கும்போதெல்லாம் இந்த‌ பிரச்சனை இல்லை இப்பதான் இப்படி...:(

சின்ன குலந்தை .திட்டாதிர்கல். அன்பாக சொல்லவும்.

தயவு செய்து மற்ற பையன்களை பார் என்று சொல்லாதீங்க அக்கா. ஏன்னா மற்ற பெற்றோரை பார். அவங்க கேட்டதெல்லாம் வாங்கி தராங்க என்று பையன் ஒப்பிட ஆரம்பித்தால் நமக்கு எரிச்சல் தானே வரும். அதே உணர்வு தான் குழந்தைக்கும் ஏற்படும்.
அவனது தனிச்சிறப்பையும், சரியாகச் செய்யும் ஒவ்வொரு சின்ன‌ விஷயத்தையும் பாராட்டுங்கள்.
உற்சாகப்படுத்தி கீழ்படிய வையுங்கள்.

ஹாய் segan,
எப்படி இருக்கீங்க‌ பா....

உங்கள் குழந்தை சுட்டித்தனம் மிகுந்தவனாக காணப்படுகிறான் என்று நினைக்கிறேன். அதை புரிந்து கொள்ளாததால் ஆசிரியை அவனை தொல்லை படுத்துவதாக எண்ணுகிறார்கள்.

இத்தகைய குழந்தையை hyperactive Kids)
என்று கூறுவார்கள்.உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் இதனை சரி செய்யலாம்.

Information is wealth

மேலும் சில பதிவுகள்