உடல் ஆரோக்கியம்

என் வலது தோல்ப்பட்டை மிகவும் வலிக்கிறது.எனக்கு குழந்தை பிறந்து 5.1/2 மாதம் ஆகிறது.பால் கொடுப்பதால் வலி எற்படுமா-? Please help for me.

தோள்ப்பட்டை வலி எப்பவும் இருக்கா இல்ல‌ விட்டு விட்டு வருதா?

ரொம்ப‌ சிவியர்னா டாக்டர்கிட்ட காட்டுறதுதான் நல்லது....வலியை குறைக்க‌ வேணும்னா மசாஜ் பண்றது,சூடா ஒத்தடம் குடுக்குறது இப்ப‌டி ஏதாவது முயற்சி செய்து பாருங்க‌ பா .....கவலைப்படாதீங்க‌ சீக்கிரம் சரியாகிடும்.......

இப்படிக்கு,
mk

Ungaluku pappa cesarian panni poranthangala ungaluku sholder pain madhiri enaku knee pain erundhadhu athunala katean romba valicha Dr kita ponga ma take care

3. வாரங்களாக வலி.
வீட்டு வேலையை கூட என்னால் செய்ய முடிவில்லை பா Please Help me

சுகபிரசம் தான். டாக்டரிடம் போக பயமாக இருக்கு பால் கொடுப்பதில் பிரச்சனையாகிவிடும் என்று. கை வைத்திம்சொல்லலுங்க please. Help me. Goodnight pa

நீங்க‌ இப்படி வலியை பொறுத்துக்குறதுக்கு பதிலா ஒரு முறை டாக்டர‌ பார்த்து கன்சல்ட் பண்ணிட்டு வந்துடறது நல்லது பா...

//கை வைத்திம்// உங்கள் கையைப் பார்க்காமல் சொல்லும் பதில்கள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா!

பாலூட்டுவதால் இப்படி ஆகச் சாத்தியம் குறைவு. நீங்கள் குழந்தையைத் தூக்கும் விதத்தினால் இப்படி ஆகச் சாத்தியம் இருக்கிறது. படுக்கையில் பாலூட்டுவீர்களா! சரியான அளவிலான உள்ளாடை அணிகிறீர்களா! நீங்கள் தூங்கும் விதம், குழந்தையை எந்தப் பக்கம் போட்டுத் தூங்குகிறீர்கள் என்பவற்றைக் கவனித்து பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். போஷாக்குக் குறைபாட்டினாலும் வரலாம்.

//3. வாரங்களாக வலி. வீட்டு வேலையை கூட என்னால் செய்ய முடிவில்லை// போய்க் காட்டுங்க. உடனே காட்டினால் குணமாக எடுக்கும் காலம் குறைவாக இருக்கும். தாமதமாகிப் போனால் சிகிச்சையும் நாள் எடுக்கும், மாதங்கள் கூட ஆகலாம். இப்போதைக்கு... ஜண்டு பாம் போல ஏதாவது வீட்டிலிருக்கும் பெய்ன் கில்லர் தேய்த்தால் தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

//டாக்டரிடம் போக பயமாக இருக்கு பால் கொடுப்பதில் பிரச்சனையாகிவிடும் என்று.// ஒரு பிரச்சினையும் ஆகாது. மறக்காம பாலூட்டுவதைச் சொல்லுங்க. என்ன சந்தேகம் இருந்தாலும் அங்கே கேளுங்க.

‍- இமா க்றிஸ்

வணக்கம் தோழி தங்களின் வலியின்காரணம் இவையாக கூட இருக்கலாம் குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொடுக்கவும் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் வலி இருக்கும் அடிஅடிக்கடி சுடுதண்ணிர்வைத்து கையில் லேசாக மசாஸ் செய்யவும். முயற்ச்சி செய்து பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்