கண்கள்

வணக்கம் தோழிகளே!!!!!
என்னுடைய‌ கண்கள் எப்பவும் ரொம்ப‌ சோர்வா இருக்கு.
என் இடது கண்ணின் மேல்(upper eye lid)ஒரு மடிப்பும் (crease)வலது கண்ணின் மேல் இரண்டு மடிப்பும் ஒட்டியவாறு உள்ளது.இதனால் என் வலது கண் இடது கண்ணை விட‌ சற்று சிறியதாகவும்,இரண்டு கண்களும் எப்போதும் பார்க்க‌ மிகவும் சோர்வாக‌ உள்ளது.(droopy eyelids)..........இதற்கு ஏதாவது ஹோம் ரெமிடி இருந்தா தெரிந்தவர்கள் சொல்லுங்க‌ பா ப்ளீஸ்........

//எப்பவும் ரொம்ப‌ சோர்வா இருக்கு.// சமீபத்திலிருந்தா அல்லது எப்போதும் இப்படியே இருந்ததா? போதுமான உறக்கம் கிடைக்கிறதா? என்ன வேலை பார்க்கிறீர்கள்?
//வலது கண் இடது கண்ணை விட‌ சற்று சிறியதாகவும்// எல்லோருக்குமே ஒரு கண் மற்றதை விட வித்தியாசமாகத்தான் இருக்கும். இரண்டு கண்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. //ஹோம் ரெமிடி// வேறு யாராவது பதில் சொல்வார்கள். தேவா அவர்களது இழைகளில் தேடிப் பாருங்கள்.

என் அபிப்பிராயம்... கண்மடலில் கை வைக்க வேண்டாம். மசாஜிங் என்று ஆரம்பித்தால் இருப்பதை விடவும் மோசமாகும் சாத்தியம் இருக்கிறது.

அழகுதான் பிரச்சினை என்றால்... ஓய்வை அதிகரிக்கலாம். மேக்கப்பில் மறைக்கலாம். பாக் ஏதாவது இருக்கக் கூடும். கண்ணைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வெள்ளரி ஸ்லைஸ் வைத்துக்கொள்ளலாம். உணவில் நிறையப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நீர் குடியுங்கள். மனதைச் சந்தோஷமாக வைத்திருங்கள்.

கண்மடல் பார்வையை மறைக்கிறது என்று தோன்றினால், வைத்தியம் செய்வதானால், நீங்களாக ஏதாவது செய்துகொள்ளாமல் முறையான வைத்தியம் செய்வதுதான் நல்லது. முதலில் ஒரு டாக்டரிடம் அபிப்பிராயம் கேளுங்கள். பிறகு அவர்கள் சொல்லும் சிகிச்சையைத் தொடர்வதும் தொடராவது விடுவதும் உங்கள் விருப்பம். செபாவுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. கண்மடல் பார்வையை மறைப்பதால் சில சமயம் சற்று அண்ணார்ந்தபடி பார்க்க வேண்டி இருக்கிறது. முக்கியமாக, கணனியிலிருக்கும் சமயம் இப்படித்தான் பார்க்கிறார். இது பற்றி விசாரித்ததில் இதற்கு சத்திரசிகிச்சை இருப்பதாகத் தெரியவந்தது. செபா வயதானவர். சிகிச்சை இல்லாமல் சமாளிப்பதாகச் சொல்லிவிட்டார்.

என் கண் அமைப்பும் அவரது போலவே இருப்பதால் இடைக்கிடை கண்ணாடியில் அவதானித்துக் கொண்டே வருகிறேன். :-) என்னால் கண்மை வைத்துக்கொள்ள இயலுவது இல்லை. மடல் மடிப்பு கெடுத்து வைக்கும். அழகு... இமா எப்பொழுதும் அழகுதான். :-) அழகு மனம் சார்ந்தது. கண் சோர்வாகத் தெரிந்தால் தூக்கம் போதவில்லை அல்லது ஸ்ட்ரெஸ் அல்லது இரண்டும் என்று எடுத்துக் கொண்டு அதற்கேற்றபடி நடப்பேன்.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா!எப்படி இருக்கீங்க‌? //சமீபத்திலிருந்தா அல்லது எப்போதும் இப்படியே இருந்ததா? போதுமான உறக்கம் கிடைக்கிறதா? என்ன வேலை பார்க்கிறீர்கள்?// சமீபத்திலிருந்துதான் இப்படி உள்ளது.நான் வேலைக்கு போகல‌.என் குட்டி பையன் இரவு தூங்குறதுக்கு 12 ஆயிடும்.காலைல‌ 5 மணிக்கு எழுந்திருப்பேன்.மதியம் 1 மணி நேரம் தூங்குவோம்.// எல்லோருக்குமே ஒரு கண் மற்றதை விட வித்தியாசமாகத்தான் இருக்கும். இரண்டு கண்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை// எல்லோருக்குமே இப்படிதானா, நான்தான் தேவையில்லாம‌ பயந்துட்டு இருந்துருக்கேன் ;‍). //கண்ணைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வெள்ளரி ஸ்லைஸ் வைத்துக்கொள்ளலாம்//இப்போதைக்கு இததான் தினமும் பண்ணிட்டு இருக்கேன்.
//கண்மடல் பார்வையை மறைக்கிறது என்று தோன்றினால்//கண்மடல் பார்வையை மறைக்கவில்லை.ஆனா பார்க்க‌ ரொம்ப‌ டயர்டா ரொம்ப‌ நாள் தூங்காத‌ மாதிரி இருக்கு.நான் ஆக்டிவா இருந்தாலும் கண்ணு ரொம்ப‌ சோர்வா இருக்கு.

மேலும் சில பதிவுகள்