தேதி: August 30, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்
வறுத்து, பொடித்து சலித்த உளுத்த மாவு - 2 மேசைக்கரண்டி
வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு – 2 (நடுத்தரமான அளவு)
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிது.
எண்ணெய் - பொரிக்க
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கையும், வெண்ணெயையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி மாவு, உளுத்த மாவு மற்றும் சீரகம் சேர்த்து, சிறிது தண்ணீரில் உப்பு மற்றும் பெருங்காயத் தூளைக் கரைத்துச் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை தேன் குழல் அச்சில் போட்டு பிழியவும். இரு புறமும் லேசாக சிவந்ததும் எடுக்கவும்.

கரகர, மொறுமொறு உருளைக்கிழங்கு தேன் குழல் தயார்.

Comments
ஜெயந்தி அக்கா,
ஜெயந்தி அக்கா,
உருளை கிழங்கு ல முறுக்கு புதுசா இருக்கே,
இவ்ளோ ஈஸியா முறுக்கு செய்லாமா, நல்ல குறிப்பு ......
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
மாமி
உருளை கிழங்கு முறுக்கு வித்யாசமா இருக்கு. சிப்ஸ் எல்லார்க்கும் பிடிக்கும். அதே மாறி இந்த முறுக்கும் பிடிக்கும்.
ஆனா எனக்கு ஒரு சந்தேகம். உருளை வேக வெச்சி செஞ்சா சீக்கிரம் கெட்டு போகுமா? இல்லனா நிறைய நாளுக்கு வருமா?
ஆனா வித்யாசமா சூப்பரா இருக்கு மாமி.
எல்லாம் சில காலம்.....
நன்றி சுபி
செஞ்சு பாருங்க சுபி.
நன்றி பாலநாயகி
என்னை ஞாபகம் வெச்சுண்டு இருக்கறதுக்கு நன்றி பாலாநயகி.
ஒரு வாரம் நன்னாவே இருந்தது. அதுக்கப்புறம் இருக்குமான்னு தெரியல. ஏன்னா டப்பா காலி ஆயிடுத்து. ரொம்ப மகிழ்ச்சி என்னன்னா மகளோட ஆசிரியர், அவர் catering படிச்சவர். அவரே ரொம்ப நன்னா இருக்குன்னு பாராட்டினார்.
அன்புடன்
ஜே மாமி
நன்றி
பாபு, என் குறிப்பை இங்கு பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜே மாமி