அனைவருக்கும் அன்பான வணக்கம் _()_ :)
பூ கட்டும் முறை பொதுவா நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.
முல்லை, ஜாதி முல்லை இவற்றை எளிதாக கட்டி விடலாம். மல்லிகையை ஊசி கொண்டு கோர்ப்பதுதான் மிக எளிது.
முதலில் நூலின் நுனிப்பகுதியை இடதுகை பெருவிரலால் பிடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இரண்டு பூக்களை எடுத்து வைத்து, அவற்றின் காம்புகள் நேராக இருக்கும்படி வைத்து பிடித்துக்கொள்ள வேண்டும்.
அதே போல் இன்னும் இரண்டு பூக்களை எடுத்து காம்புகள் மேல்நோக்கிய வண்ணம் இருக்கும்படி வைத்து நூலால் ஒரு சுற்று சுற்றிக்கொள்ள வேண்டும்.
அந்நூலினை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறகு விரலினால் ஒரு சுற்று சுற்றி முடிச்சு விழும் வகையில் வைத்து பூவின் மேல் பகுதி உள்வருமாறு வைத்து பிடித்து இழுக்க வேண்டும்.
இப்பொழுது அந்த நான்கு பூக்களும் கட்டியாயிற்று. இதற்கு ஒரு கண்ணி என்று பெயர்.
அதே போல் தொடர்ந்து அனைத்து பூக்களையும் வைத்துக் கட்டவேண்டும்.
முதலில் மிகவும் கடினமாக தெரிந்தாலும், விரைவில் எளிதகிவிடும்.
பூ தொடுத்து பழகுவதற்கு, சிறிய வகை பூக்களை விட்டு, பெரிய பூக்களாக தொடுத்து பழகலாம்.
காசரளி என்று ஒரு வகைப்பூ இருக்கும். அதில் எளிதாக தொடுத்து பழகலாம். இப்பூ தலையில் வைக்க உகந்ததல்ல, சாமிக்கு மட்டுமே வைக்கவேண்டும்.
இது வரை நாம் பார்த்தது கைகளினால் கட்டும் முறை.
இப்பொழுது பார்க்கப்போவது 'கால்கட்டு' என்று சொல்லும் முறை.
கால் பெருவிரலில் நூலினை மாட்டி தொடுக்கும் முறை இது.
ஆனால் இந்த முறையில் நான் எப்பொழுதும் தொடுப்பது இல்லை.
அதற்கு பதிலாக நாற்காலியின் மேல்முனை அல்லது டீப்பாயின் மேற்பகுதி நீண்டிருக்குமேயானால் அவற்றைப் பயன்படுத்தி தொடுக்கலாம்.
அதுவும் இல்லேனா, பொறுமைசாலிகள் யாரேனும் உங்க வீட்டில் இருந்தால், அவர்களின் கைகட்டை விரலை கடன் வாங்கிக்கொள்ளலாம் :)) நண்டுசிண்டுவாக இருந்தால் வேண்டிய மட்டும் கொறிக்கவோ, அருந்தவோ கொடுத்து வேலை வாங்கலாம். ஆனால் பாதிலயே எழுந்து ஓடும் நிலையும் உருவாகும். எப்பவோ அடித்தது திட்டியதுலாம் கூட கணக்கில் கொண்டு வரும் நிலையும் ஏற்படலாம். அவற்றையெல்லாம் மனதில் வைத்து கொண்டு வேலையை ஆரம்பிக்கவும் :))
சரி விசியத்துக்கு வாரேன்:
முதலில் வேண்டிய மட்டும் நூலினை எடுத்துக்கொள்ள வேண்டும். கைகட்டிற்கும், கால்கட்டிற்கும் உள்ள பெரிய வேற்றுமைகளில் இதுவும் ஒன்று.
கைகட்டானது நாம் எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் தொடுத்துக்கொண்டே போகலாம்.
கடைசியாக நூலினை கட் செய்து கொள்ளலாம்.
இம்முறை அப்படிப்பட்டதல்ல.
நாம் பூக்களின் அளவினை மனதில் வைத்து எவ்வளவு நீளம் வரும் என்பதை ஓரளவிற்கு கணக்கிட்டுக்கொண்டு , நூலினை முடி போட்டு முதலிலேயே கட் செய்து கொள்ள வேண்டும்.
அதனால் எப்பவுமே அளவு கொஞ்சம் எச்சுமுச்சாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
முதலாவதாக நூலினை, மேற்சொன்ன ஓசனையை பயன்டுத்தி
தேவையான அளவு எடுத்து முடிச்சு போட்டுக்கொள்ளவும்.
முடிச்சு போட்ட நுனியின் உள் பகுதியில் உள்ள இரட்டை நூலின் அளவுதான் நாம் கட்ட வேண்டிய பூவின் அளவு கிடைக்கும்.
இரண்டு பூக்களை எடுத்து , அந்த நூலின் இடைப்பட்ட பகுதியில் வைத்து , வெளியில் கத்தரித்து விடப்பட்ட நூலினால் ஒரு சுற்றுப்போட்டு உள்பக்கமாக இழுத்தால் முடிச்சு விழுந்து விடும்.
இவ்வாறாக அனைத்துப் பூக்களையும் கட்ட வேண்டும்.
கடைசியாக அதிகமாக உள்ள நூலினை கத்தரித்து விடாமல், அப்படியே வைத்து ஜடையில் சுத்தினாற் போல் வைத்து, அடிப்பகுதியில் கட்டி விடவேண்டும்.
இவற்றை வைப்பதற்கு, பூ குத்தும் ஊசியைவிட, கொண்டைஊசியே இலகுவாக இருக்கும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
மணப்பெண்களுக்கு, நாமே அலங்காரம் செய்வதாக இருந்தால் இம்முறையில் மிக எளிதாக ஜடை அலங்காரம் செய்துவிடலாம்.
நன்றாக கட்டிப்பழகிய பிறகு 4 பூக்களாக வைத்தும் கட்டலாம்.
இது கைக்கட்டிற்கும் பொருந்தும்.
ஆர்கிட் மலர்கள், அல்லது நந்தியாவட்டை மொட்டுக்கள் கிடைத்தால் அவற்றை கால்கட்டு முறையில் கட்டி, ஆடைகளுக்கேற்ற நிறங்களில் ஃபேப்ரிக் கலர் பூசி வைத்தால் மிக அழகாக இருக்கும்.
கடந்த ஐந்தாறு வருடங்களில் திருமண விழாக்களில் இம்முறை பெரிதும் பிரபலமாகியுள்ளது.
அம்மலரின் இதழ்களில் மிக சிறிதான கற்கள் ஒட்டி, ஆங்காங்கே ஜிகினாக்கள் தடவி வைத்தால் மிக மிக அழகாக இருக்கும்.
ஒற்றை மலர் அல்லது இரட்டை மலரினை இது போன்று செய்து, மாடர்ன் உடைகளை அணிந்து செல்லும் போதும் வைத்துச்செல்லலாம். இது கண்களை உறுத்தாத வகையில் மிக அழகாக இருக்கும்.
அதே போல் பூவின் இலைகளையும் கட்டி , அதனை ஒரு லேயர் வைத்து, பின்பு அதன் மேல் இது போன்று வர்ணம் தீட்டிய மலரினை வைத்தால் நன்றாக இருக்கும்.
மீண்டும் சந்திப்போம்.. நன்றி _()_ :).
பின் குறிப்பு:
முல்லை, ஜாதிமுல்லை, மல்லிகை ஆகியவற்றை மொட்டாக இருக்கும் போது பறித்து, இது போன்று கட்டியோ, கோர்த்தோ ஃப்ர்ட்ஜில் வைத்தால் இரண்டு நாட்களானாலும் வாடாமல் இருக்கும்.
முக்கியமாக ஜாதிமல்லிகை கட்டி வெளியில் வைத்தால் புளியம்பூ போன்று ஆகிவிடும். அதுவே மேற்சொன்னபடி வைத்தால் நிறம்மாறாமல், வாடாமல் இருக்கும்.
இன்னுமொரு பின் குறிப்பு:
பூக்களை தொடுப்பதற்கு 'கோல்டன் கலர் நூல்' பயன்படுத்தினால் மிக அழகா இருக்கும். இதற்கென்றே கெட்டியான கோ.நூல் கிடைக்கிறது. கேட்டு வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொல்கிறேன் :))
Comments
வாவ்... சூப்பர்ங்க.... பூ
வாவ்... சூப்பர்ங்க.... பூ காலால் கட்டும் முறைக்கு போட்டோ போட்டிருக்கலாம்ல.. செண்டு ப்ளூ கலர்ல அழகா இருக்கு
ப்ரியா
ப்ரியாக்கண்ணூ, காலால் கட்டும் முறைதான் இரண்டாம் படம், சேர்ல மாட்டி கட்டுறேன் பாருங்க.
முதல் படத்தில் இருக்கும் பூக்கள், காலால் கட்டும் முறையில் (சேர்ல மாட்டி) கட்டியதே. பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி, குட்டிப்பையன் நலமா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
அதுக்குள்ள பதிலளி தட்டிபுட்டீங்களே.... பூ மாலை சுற்றி கட்டும் முறை சொல்லிதாங்கப்பா
பதிலளி
ப்ரியா, நீங்களும் பதிலளி தட்டிப்புட்டீங்களே!! மூன்றாம் படத்தில் இருப்பது என்பதற்கு பதிலாக இரண்டாம் படம் என மாற்றி போட்டுட்டேன்.
//பூ மாலை சுற்றி கட்டும் முறை சொல்லிதாங்கப்பா// எனக்கு தெரியாது ப்ரியா. எனக்கும் கத்துக்க ஆவலா இருக்கு.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள், பிரியா,
அருள் கலக்குறீங்க, வாழ்த்துக்கள்... :) சூப்பர்...
பிரியா, பூ மாலை சுற்றி கட்டுவதுன்னா, மாலைதானே கேட்குறீங்க?
arul
அருள் எனக்கு கைல கட்டும் முறை தெரியும். கால்கட்டு தெரியாது. அது பூ ஒரு பக்கம் வச்சிதான் கட்டனுமா.
Be simple be sample
அருள்
அருள் ரொம்ப ரொம்ப நன்றி தேடிக்கிட்டே இருந்தேன் இதைத்தான் யாராவது இப்படி சொல்லிக்கொடுத்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன் கேட்டுச்சா? ப்ளாக்காவே போட்டுட்டீங்க, படம் ரொம்ப அழகு. ஒரு சின்ன ஹெல்ப் படத்தை கொஞ்சம் பெருசா போட முடியுமா?
ரேணு
ரேணு மிக்க நன்றி :)
//பிரியா, பூ மாலை சுற்றி கட்டுவதுன்னா, மாலைதானே கேட்குறீங்க?// அதைத்தான் கேட்குறோம். தெரியுமா ரேணு? சொல்லித்தரமுடியுமா?
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரேவ்
ரேவ், கால்கட்டு கட்டும்போது ஒரு பக்கமா வைத்துதான் கட்டி இருக்கேன்ப்பா, இரு புறமும் வைத்தால் கீழ் பகுதியில் வைக்கும் பூக்கள் விழும். முயற்சித்து பாருங்கள் ரேவ்ஸ்.
மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
தேவி
தேவி, நான் அறுசுவைக்கு வந்த புதுசில, கைவினைப்பகுதிக்கு இதை அனுப்பி இருக்கேன். ஆனா ஃபோட்டோஸ் சரியா வரல :(
//படத்தை கொஞ்சம் பெருசா போட முடியுமா?// ப்க்ஸல் சைஸ் அதிகமானா அப்லோட் ஆகிறதில்ல தேவி.
//யாராவது இப்படி சொல்லிக்கொடுத்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன் கேட்டுச்சா?// கேட்டுச்சுப்பா, அதனாலதான் போட்டுட்டேன் :)) நிஜமாவே புரிற மாதிரி எழுதி இருக்கனா? இதில் ஏதேனும் சந்தேகம்னா கேளுங்க, சொல்றேன் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
புரியுது அருள் ஆனா நமக்கு செய்யும் போது தான் மூட்டை மூட்டையா டவுட் வந்து குவியும், கேட்கறேன் அருள். வனிதா மேடம்லாம் பெரிய படமா போட்டு இருந்தாங்களேன்னு கேட்டேன் அருள்
தேவி
//மூட்டை மூட்டையா // ஒவ்வொரு மூட்டையா இறக்கி வைய்யுங்க தேவி :) பிரிச்சுபார்த்து சொல்றேன்.
//வனிதா மேடம்லாம் பெரிய படமா போட்டு இருந்தாங்களேன்னு// நல்லா கேட்டீங்க போங்க. எனக்கு கேமரால ஆன்,ஆஃப்ஃப்ளாஷ் இது மூணும்தான் தெரியும். அவங்க போட்டோகிராபில கில்லி..:)
1, எனக்கு கொலாஜ் பண்ணுவதே பெரிய்ய்ய்ய் வேலை. பண்ணி முடிச்சு அப்லோட் பண்ணா, இன்னும் கொஞ்சம் சின்னதாக்கணும்னு வருது. அப்பிடியே நாலஞ்சு தபா பண்ணி பண்ணி, ஒருவழியா போட்டுடறேன்.
2, பேர் வெட்டாம போட்டு, நம்ம போட்டோவ யாரேனும் திருடிட்டா,(??அவ்வ்) அதுனால பேர் வெட்டுவதே பெரும்பாடு.. அதையும் எப்படியோ வெட்டி, ஒட்டினு பண்ணிடுறேன்.
3, நாம நல்லா எடுக்கலேன்லாம் எப்பவும் ஒத்துக்கவே மாட்டேன். அதுனால கேமரால ஏதோ கோளாறு, அதான் இப்பிடி..
நன்றி தேவி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
arul
எனக்கும் நன்றாக கால் கட்டு கட்டுவரும் திருமணங்களுக்கு இதை மாதிரி தான் பண்ணி கொடுகிற்ரென் இது வரை 35 திருமணதிற்கு அதிகமாக பண்ணி கொடுத்து இருகிறென் அனைவருகும் பிடித்து இருந்தது அதனால் நான் கேட்டதை விட அதிகமாக அவர்கள் கொடுதார்கள் வாழ்த்தும் கிடைத்தது எதிர் காலதில் நல்ல வரவெர்பு இருக்கும் நன்றி அருட்செல்வி
மலர் தொடுத்தேன்
அருள்,
பூத்தொடுப்பதே ஒரு அழகான கலை. நான் விரும்பி செய்யும் பணிகளில் ஒன்று.
நானும் கால்கட்டு முறையில் அழகாக பூதொடுப்பேன். மிகவும் பயனுள்ள பதிவுப்பா.
ரஜினிபாய்
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
அருள்
கால்கட்டு முறையில் நான் பன்னீர் பூக்களைக் கட்டி, நடுவில் ரோஜா வைத்து வட்டமாக சேர்த்து, பள்ளி செல்லும் போது ரெட்டை ஜடையில் வைத்திருக்கிறேன்.
//கோல்டன் கலர் நூலில் பூ கட்டினால் அழகாக இருக்கும் // உண்மை தான் அருள்.
அருமையான பயனுள்ள பதிவு.:)
அருள்
முடிஞ்சா கலர் செய்து வைக்கும் முறை படங்களோட கைவினைக்கு அனுப்புங்க... இதுல சின்ன சின்ன படம் தெளிவா தெரியல அருள் முடிச்சு போட்ட விதம். அழகா இருக்கு, கட்டிப்பார்க்க ஆசை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மலரே!
ஆர்வத்தோடு படிச்சு முடிச்சாச்சு. இது நம்ம டாபிக் இல்லாததால பாதிக்கு மேல புரியல அருள். தேவைப்பட்டா திரும்ப வந்து ரெஃபர் பண்ணிக்கறேன்.
- இமா க்றிஸ்
I'm new member to this
I'm new member to this site.... I like ur blog very much... I was searching the method of tying flowers..... But I couldn't get anywhere. Thank u very much for posting this...please update about tying garland tooo...
பூ கட்டும் மூறை
செல்வி அக்கா எப்படி இருக்கீங்க? பூ கட்ட அழகா சொல்லி கொடுத்துஇருக்கீங்க, பழக பூ தான் இல்லை:( எனக்கு பூ கட்ட தெரியாது, கத்துக்க ஆசைபட்ட போது கட்ட வரல, கத்துக்க சான்ஸ் கிடைக்கும் போது கத்துக்க பிடிக்கல, இப்ப கத்துக்க நினைக்கும் போது பூ இல்லை:))) சுமாரா கட்டுவேன் அங்க ஒன்னும் இங்க ஒன்னுமா:)ஒரு இழு இழுத்தா மீண்டும் உதிரிப்பூக்கள் தான், போட்டோ பெரிசா இருந்தா நல்லா இருந்திருக்கும், முக புத்தகத்தில் பார்த்தது போல இருந்தது, தேடும் போது கிடைக்கல, எனக்கு ஸ்டுல் உதவியோட பன்றது கத்துக்கனும்:) கத்துகிட்டு போட்டோ போடறேன்:))போடுவேன்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
அருள்
சேர்ல கட்டும் முறையில் முல்லைப்பூ கட்டினேன்பா... அழகா வந்துச்சு..... நன்றி இந்த பதிவ்க்கு
அர்ச்சனா
அர்ச்சனா, எனக்கு கைக்கட்டு முறைதான் நல்லா வரும். சமீபகாலமாக மணப்பெண் அலங்காரத்தில் இந்த முறை பெரிதும் பிரபலப்பட்ட காரணத்தால் இதை ரொம்பவே முயற்சித்துக் கற்றுக்கொண்டேன், கற்ற பிறகு இந்த முறை மிக எளிதாக இருக்கிறது :)
(என் சிறு வயதில் என் பாட்டி 4 கால் ஜடை போட்டு, கால்கட்டுமுறையில் கட்டி வைத்துவிடுவார். எனக்கு 4 கால் ஜடை கற்றுக்கொள்ள மிக ஆசையாக இருக்கும். ஆனா என்ன கற்றுக்கொடுக்கத்தான் ஆளில்லை).
ஃப்ரஞ் பிளாட் போட்டு அரைவட்டமாக இது போல் கட்டி வைத்தால் மிக அழகாக இருக்கும். எனக்கு யாருக்காவது வித விதமாக முடி அலங்காரம் செய்வதென்றால் ரொம்பவே பிடிக்கும் :)
//இது வரை 35 திருமணதிற்கு அதிகமாக பண்ணி கொடுத்து இருகிறென் அனைவருகும் பிடித்து இருந்தது அதனால் நான் கேட்டதை விட அதிகமாக அவர்கள் கொடுதார்கள் // வாழ்த்துக்கள் :)
மிக்க நன்றி அர்ச்சனா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரஜினி மேடம்
//பூத்தொடுப்பதே ஒரு அழகான கலை. // செடியில் இருக்கும் மலர்களை பறிப்பது கூட மன ஒருமைப்பாட்டிற்கான பயிற்சினு சொல்லலாம். இப்ப சீசன் என்பதால் ஜாதி மல்லி நிறையவே பூக்கிறது. தினமும் மாலை வேளை பூக்களுடனே கழிகிறது.
மிக்க நன்றி ரஜினிமேடம் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
நிகி
பன்னீர் பூக்கள் என்றால் என்ன என்பதை ஜெயா புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார்கள். சம்பங்கி என்றுதான் சொல்வோம். திருமண மாலை அதில்தான் செய்வார்கள். அந்த வாசனை ரொம்ப நல்லா இருக்கும். அந்த செடி கிழங்குவைத்தால் வளரும் வகையைச் சார்ந்தது. இங்கேயும் அந்த மலரில் கால்கட்டும்முறையில் கட்டி, வண்ணமடிப்பது உண்டு. இது (இந்த மலர்) பதிவில் சொல்லாமல் விட்டுப்போன விசயம், ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி தோழி :)
மிக்க நன்றி நிகி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனி
வனி, //கைவினைக்கு அனுப்புங்க//
கலர் செய்யும் முறை மிகவும் எளிது. சில சமயம் நெயில் பாலீஷ் கூட அடிப்பதுண்டு. மிகவும் குறைவான செயல்முறை விளக்கமே வரும். அதனால்தான் அனுப்பவில்லை :) ஆமா வனி, முடிச்சுகள் பார்க்கும் போது, ஒரே அளவினதாக மிக அழகாக இருக்கும். மிக்க நன்றி வனி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
இமா
ஆர்வத்துடன் படித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி இமா :)
//பாதிக்கு மேல புரியல அருள். தேவைப்பட்டா திரும்ப வந்து ரெஃபர் பண்ணிக்கறேன்.// தேவைப்படும் பொழுது, சந்தேகம் இருந்தால் கேளுங்கள் இமா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
தர்ஷனா
உங்கள் பெயர் சரியாக சொல்லி இருக்கிறேனா தர்ஷனா :)//I'm new member to this site// அறுசுவை அன்புடன் வரவேற்கிறது :)
//update about tying garland tooo// எனக்கு மாலை கட்டத்தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தெரிந்த தோழிகள் கட்டாயம் பதிவிடுவர்.
உங்களோட பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி தோழி :) இடது பக்கமாக கீழ் பகுதியில் தமிழில் எழுதும் முறை கொடுத்திருக்கின்றனர். பயன்படுத்தி பாருங்கள் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரேணுகா
//பழக பூ தான் இல்லை:(// ஓ பூக்கள் இல்லாத ஊரா? எங்கேயுமே கிடைக்காதா? காகிதத்தை சிறு துண்டுகளாக்கி கட்டிப்பாருங்கள். நான் இது போன்று முயற்சித்து இருக்கிறேன். அதே போல் தேவையில்லாத துணி இருந்தால், சிறு துண்டுகளாக்கி கட்டிப்பார்க்கலாம்.
//போட்டோ பெரிசா இருந்தா நல்லா இருந்திருக்கும்// ஆமாம், போட்டோக்கள் மிகவும் சின்னதாக ஆகிடுச்சு.
//முக புத்தகத்தில் பார்த்தது போல இருந்தது, தேடும் போது கிடைக்கல, // அங்கேயேதான் :)
ஒரு விஷயம், அக்கா வேணாமே!! பெயர் சொல்லியே அழைக்கலாமே!! :)
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ரேணுகா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ப்ரியா
ஹாய் ப்ரியா, பார்த்தேன்பா :) அழகா கட்டி இருந்தீங்க. அந்த அரைவட்டத்தில், இன்னுமொரு வகைப்பூவை இதே போல் அரைவட்டமாக கட்டி அதன் மேல் வைத்து, ஜடைக்கு வைத்தால் மிக அழகாக இருக்கும் :) (இட்லிப்பூ அல்லது வேறு வகையான கலரில் உள்ள பூக்கள், இல்லையேல் செயற்கை வர்ணம் பூசவேண்டியதுதான்)
ரேவ்ஸும் அழகா கட்டி இருந்தாங்க.
ரொம்ப நன்றி ப்ரியா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
இருநூலை முடிச்சிட்டு பூக்கள் மேல் நோக்கி வரும்படியும் காம்பு கீழே வரும்படி பூ கட்டலாம்.சாமந்திப் பூவை அப்படி கட்டி மேலே குங்குமம் வைத்து சாமிக்குப் போடலாம்.
நிகி
நிகி, நீங்கள் சொல்வது போலத்தான் கால்கட்டும் முறை, சாமிக்கு போடறதாலேயும், எவ்வளவு நேரம் கீழே உக்காந்து கட்டுறது, என்பதாலேயும்தான் இப்படி சேர், டீப்பாய் முனை, மத்தவங்க பெருவிரல் உபயம் இதெல்லாம் பயன்படுத்தி கட்டுறேன்.
கைக்கட்டு முறைல, பெரிய பூவாக இருக்கும்பட்சத்தில் இது போல் கட்டுவதுண்டு. உதாரணம் செவ்வந்திப்பூ (ஆயுத பூஜைக்கு ரொம்பவே விசேசம்) சாமந்த்திப்பூவை சிலர் சின்னதா பிச்சு பிச்சு கட்டுவாங்க, அதையா சொல்றீங்க? சாமந்தி ரொம்ப பெரிசா இருக்குமல்லவா?
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.