ஸ்பைஸி சிக்கன் க்ரேவி

தேதி: September 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஊற வைக்க
தயிர் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 4 துண்டு
தாளிக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

சிக்கனுடன் ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்துப் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை மசித்து வைக்கவும்.
வறுத்து அரைக்க வேண்டியவற்றை லேசான தீயில் வைத்து (தீய்ந்து விடாமல்) வாசம் வரும் வரை வறுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு மசித்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் ஊற வைத்துள்ள சிக்கனைச் சேர்த்துப் பிரட்டி, உப்பு சேர்த்து வதக்கவும் .(சிக்கனில் உப்பு சேர்த்து ஊற வைத்திருப்பதால், வதக்கும் போது உப்பு குறைவாகவே சேர்க்கவும். உப்பு சரிபார்த்து தேவையெனில் மேலும் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்). சிக்கனிலிருக்கும் தண்ணீர் கொதித்து வரும் போது மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி மூடி போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்துக் கிளறி குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான ஸ்பைஸி சிக்கன் க்ரேவி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புதுசா இருக்கே பேரு ;) சமையல் குறிப்பு பக்கம் பார்த்து ரொம்ப‌ நாளாச்சே!! யாரா இருந்தாலும் குறிப்பு ரொம்ப‌ நல்லா இருக்கு... படத்தை பார்த்ததும் காலை சாப்பிட்ட‌ இட்லிக்கு கிடைச்சிருந்தா சூப்பரா இருந்திருக்குமேன்னு பார்க்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீம்க்கு தாங்க்ஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நானே அது நானே.. இந்த‌ ரெசிபி சமைத்தது நானே

முதல் பதிவிற்க்கு நன்றி அக்கா .. :)

பேருக்கு ஐடியா வேற‌ எங்க‌ இருந்தும் வரல‌ உங்க பழய‌ ரெசிபி ல‌ இருந்து வந்தது தான்;)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ந்‍ஆன் பேரு புதுசுன்னு சொன்னது, குறிப்பு பேரை இல்லை... குறிப்பு கொடுத்தவங்க‌ பேரை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முடியலை டா சாமி .. உட்கார்ந்து யோசிப்பாங்களோ ;)

கனி இந்த‌ பேர் புதுசா உங்களுக்கு :('

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நான் ஆளே புதுசு இருக்குன்னு சொல்றேன்... எனக்கு கனிமொழி யாருன்னே நினைவில்லை. சரியான‌ டியூப் லைட் கனி!! :( முடியல‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// எனக்கு கனிமொழி யாருன்னே நினைவில்லை //

அப்போ கனி நு மட்டும் தான் நியாபகம் இருந்ததா அர்த்தமா இல்லை அதும் இல்லையா... அப்படி இருந்தா கனி பாவம் இல்லையா ... இப்படியா ஒரே அடியா க‌ மறப்பது ...

நீங்களே ரெசிபி போஸ்டிங்க்ஸ்க்கு என்கரேஜ் பண்ணிட்டு இப்படி பேரை மறக்கலாமோ.. ஏறுங்க‌ பெஞ்ச் ல‌ இது தான் நீங்க அடிக்கடி சொல்றது இப்போ உங்களுக்கு.. இது மட்டும் இல்ல‌.

உங்க‌ வீட்ல‌ இருக்குற பெரியவங்க‌ ;) கிட்ட‌ சொல்லி இன்னைக்கு டின்னர் பட்டினி போட‌ சொல்லுறேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிங்கிறது சும்மா ஷார்ட் ஃபார்ம் ;) எனக்கெல்லாம் அறுசுவையில் கண்ணில் படாதவங்களை நினைவே இருக்காது. மறக்க‌ கூடாதுன்னா அடிக்கடி குறிப்பு அனுப்பணும், போஸ்ட் போடணும்... புரிஞ்சுதா? ம்கும்... எவங்களை நான் பட்டினி போடாம‌ இருந்தா சரி தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் கனி. ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் உங்க குறிப்பு. சூப்பரூ. இப்டி பெரிய கேப்பெல்லாம் விடாதீங்க. வனி சொல்றமாதிரி எல்லாரும் மறந்துர போறோம். ஹி...ஹி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கு நன்றி.

அவ்வளவு பெரிய‌ கேப்பா ;)

நீங்களும் வனி அக்கா கூட்டணியா இந்த‌ விஷயத்துல‌ :(

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

//எனக்கெல்லாம் அறுசுவையில் கண்ணில் படாதவங்களை நினைவே இருக்காது//

அறுசுவை கழக‌ மக்களே இதற்கு முன்னாடி அடிக்கடி வந்து போஸ்டிங் போட்டுட்டு இப்போ கொஞ்ச‌ நாளா எட்டி பார்க்காம எல்லாருக்கும் தான் இந்த‌ ஸ்டேட்மெண்ட்...

இப்போ கரெக்ட்டா அக்கா ;)

ஓ அவங்கள பட்டினி போடுறா ஐடியா வேற‌ இருக்கா உங்களுக்கு
வேணா ஒரு பேச்சுக்கு ஸ்கூல் ல‌ இருந்து வந்ததும் கேட்டு பாருங்களேன் குறிப்பா சின்ன சார் கிட்ட‌ ... ;)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

sirandtha karuthu

ரொம்ப நாள் ஆச்சே கனியை பார்த்து . சூப்பர் யம்மி சிக்கன்

Be simple be sample

வருகைக்கு நன்றி.

நலமா. நான் கூட‌ உங்கள‌ ரொம்பவே மிஸ் பண்ணேன் :)

ரொம்ப‌வும் கேப் விட்டா ஆளையே மறந்துடுவாங்களாம் இங‌ எல்லாரும் ஒரு மேடம் சொன்னாங்க‌. ஆளை மட்டும் இல்ல‌ பழகுன‌ பேரை கூட‌:(

காலை ல‌ இருந்து வம்பிழுத்துக்கிட்டு இருக்கேன் அக்கா அந்த‌ மேடமை

மேடம் கைல குச்சியோட‌ வர மாதிரி தெரியுது ;)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எப்படி இருக்கே?
உன்னோடு பேசி ரொம்ப‌ நாள் ஆச்சு? ஆளையே காணோம்.
சிக்கன் க்ரேவி சூப்பர் வாழ்த்துக்கள் கனி

நல்லா இருக்கேன் அக்கா நன்றி வருகைக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கும் தாங்க் யூ. :)

இனி ரெகுலரா வருவோம் ல‌ நாங்களும். :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்