மஷ்ரூம் கேஷ்யூ ஸ்டிர் ஃப்ரை

தேதி: September 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மஷ்ரூம் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 1 - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு
கறிவேப்பிலை


 

மஷ்ரூமை சுத்தம் செய்து இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகைப் பொடி செய்து வைக்கவும். முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய மஷ்ரூம் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். மஷ்ரூம் நீர் விட்டு மீண்டும் ட்ரையாகத் துவங்கும்.
அப்போது பொடித்த மிளகு சேர்த்து பிரட்டி, அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்துப் பிரட்டவும்.
ஈஸி & டேஸ்டி மஷ்ரூம் கேஷ்யூ ஸ்டிர் ஃப்ரை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மஷ்ரூம் கேஷ்யூ ஸ்டிர் ஃப்ரை குறிப்பு ரொம்ப‌ ஈஸியா இருக்கே,
கொஞ்சம் கூட‌ தண்ணீ சேர்க்க‌ வேண்டாமா அக்கா,
சிம்பிள் அன்ட் டேஸ்டியா இருக்கும் போல‌,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

முதல் கருத்துக்கு மிக்க‌ நன்றி சுபி :) மஷ்ரூம் நீர் விடும் சிக்கன் போல‌. அதுவே போதும். நீர் சேர்த்தால் அதிக‌ நேரம் நீர் வடிய‌ அடுப்பில் வைக்கனும், மஷ்ரூம் ஜவ்வு போல‌ ஆயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மஷ்ரூம் கேஷ்யூ ஸ்டிர் ஃப்ரை சூப்பர் டெம்ப்டிங் ஆ இருக்கு. :)

மஷ்ரூம் ல‌ நிறைய‌ வெரைட்டி இருக்குனு கேள்விப்பட்டு இருக்கேன் இது எது..?

ரெசிபி படிச்சுட்டு இருக்கும் போதே நா கேட்க‌ நினச்ச‌ டவுட் சுபி கேட்டுடாங்க‌...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வழக்கமாக‌ நம்ம‌ ஊரில் கிடைக்கக்கூடிய‌ "வொயிட் பட்டன் மஷ்ரூம்" வகை தான். நீர் விட்டுடாதீங்க‌... ஜவ்வு மாதிரி பொடியா போகும் மஷ்ரூம். மிக்க‌ நன்றி கனி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம் பார்த்ததுமே நினைச்சேன் இந்த‌ வகையா தான் இருக்கும் நு.
எனக்கு மஷ்ரூம் சமைகக்வே பயம் காரணம் ஜவ்வு மாதிரி வந்துடுமோன்னு
இத‌ ட்ரை பண்றேன் ஏனா பெருசா நிறையோ பொருட்கள் நீங்க‌ இதுல‌ யூஸ் பண்ணல‌ ல‌ டேஸ்ட்டும் மைல்ட் ஆ இருக்கும் நு நினைக்கிறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஸ்வீட் அன்ட் ஸ்பைசின்னு சொல்லலாம் சுவையை. முந்திரி சுவையும் பெப்பர் சுவையும் சேர்ந்து எனக்கு ரொம்ப‌ பிடிச்சுது. செய்வது ரொம்ப‌ சுலபம். 15 மினிட்ஸ்ல‌ முடிச்சுடலாம். மஷ்ரூம் நீர் விட்டு கழுவ‌ கூடாது. துடைச்சு நீரில் அலசி மீண்டும் நீர் இல்லாம‌ துடைச்சுட்டு சமைக்கனும். அதிக‌ நேரம் சமைக்க‌ கூடாது... மூடி போட்டு அதிக‌ நேரம் விடக்கூடாது. 5 நிமிடம் தான் மஷ்ரூம் வேக‌. சரியா செய்தீங்கன்னா மஷ்ரூம் நல்லா இருக்கும் சாப்பிட‌, ஜவ்வு மாதிரி ஆகாது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமை. நான் இரண்டு வாரங்களாக‌ பனீர், மஸ்ரூம் ரெசிபிகள் தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீங்களும் மஸ்ரூம் ஃப்ரை குடுத்து இருக்கிங்க‌. : ) நன்றி. ட்ரை பண்ணிடுறேன்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

சிம்பிள் & யம்மி ஃபிரை வனி. சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிம்பிள் &டேஸ்டி ரெசிபி . ஆமா முந்திரி எப்ப சேர்க்கறிங்க.

Be simple be sample

Hmm aaha parkave nallayiruku trypanren

Allahu akbar

வனி அக்கா,
ம்ம் ஸாரி சிக்கன் பத்தி தெரியாது, நான் ப்யூர் வெஜ்.... ஓ தண்ணி தேவையில்லையா,
இன்னொரு டவுட் இந்த டிப்ஸ் ல‌ நீங்க‌ மஞ்சள் தூள் சொல்லல‌, ஆனா உங்க‌ கடைசி படம் யெல்லோ கலர்ல‌ கலர்புள்ளா இருக்கே........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Hello madam unga dish ellamey rempa simple avum rempa easy yavum irukku enakku unga kurippu rempa pidekkum.i am your fan

God is great

என்னா ஒற்றுமை... எனக்கு வரதா சொன்ன‌ ஒரு கெஸ்ட் வரல‌, வாங்கி வெச‌ பனீர், மஷ்ரூமை நானும் முழுங்கிகிட்டு இருக்கேன் ;) அவசியம் செய்து பாருங்க‌ தயூ. டீச்சரம்மா இப்பலாம் ரொம்ப‌ பிசின்னு நினைசேன், சமையல்ல‌ பிசின்னு இப்ப‌ தானே தெரியுது ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி. நான் உங்க‌ குறிப்புகளை மிஸ் பண்றேன் உமா... சீக்கிரம் வாங்க‌. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல‌ மிளகாய் வற்றலோட‌ சேர்த்து வறுத்திருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல‌ உள்ல‌ படஎல்லாம் கிச்சன்ல‌ எடுத்தது, கடைசி பட‌ வெளி வெளிச்சத்துல‌ எடுத்தது... என் மொபைல் அப்பப்ப‌ அப்படித்தான் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி திவ்யா :) அவசியம் ட்ரை பண்ணிப்பாருங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா