கார்கூந்தல்

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு
ஆம். பெண்ணுக்கு கூந்தல் அழகு மிக‌ முக்கியமான‌ ஒன்று. பெண்ணுக்கு மட்டுமல்ல‌, ஆணுக்கும் கூட‌ அது தலைக்கும் மேலே தலையாய‌ விஷயம் தான்.

வழிய‌ வழிய‌ எண்ணெய் தேய்த்து, படியப் படிய‌ சீவி, இறுக்கிப் பின்னிய‌ தலையையும், ஷாம்பூ போட்டு அப்படியே ஒரு பனானா க்ளிப் அல்லது பட்டஃபிளை க்ளிப் போட்டு சும்மா பறக்க‌ விடப்பட்ட‌ தலையையும் கற்பனை பண்ணிப் பாருங்கள்.

ஒரு மணப்பெண்ணை நீலக்கலர் புடவை கட்டி, அதற்குப் பொருத்தமாக‌ நீலக்கலர் ஆபரணங்களைப் பூட்டி, நீலக்கலரில் அலங்கரிக்கப்பட்ட‌ மேடையில் அமர‌ வைத்தால் எப்படி இருக்கும்? நீலக்கலரு சிங்குச்சா மாதிரி.........................

அதே பெண்ணுக்கு மேடையை ஆஃப் ஒயிட்டில் அலங்கரித்து வைத்தால் அந்த‌ பேக்ரவுண்டு அவளை பளிச்சுனு காட்டும் அல்லவா? அது போலத் தான் வட்ட‌ நிலவு போன்ற‌, மாசு மருவற்ற‌ மங்கையரின் முகத்துக்கு கார்கூந்தல்.

தலையில், நெற்றியில், காதோரத்தில், கழுத்தில் புரளும் அந்தக் கூந்தலே அவளைப் பேரழ‌கியாக‌ காட்டுவதில் முதலிடம் வகிக்கின்றது.

சரி முன்னுரை போதும் என்கிறீர்களா?

முதலில் கூந்தலுக்குத் தேவை புரோட்டீன். அது இருந்தால் தான் முடி சீராக‌ அடர்த்தியாக‌ வளரும்.

உங்களுக்காக‌ இதோ ஒரு புரோட்டீன் ரிச் ஹேர் ஆயில். இது என் பாட்டி, அம்மா, நான், என் பெண் என‌ தலைமுறையாக‌ உபயோகிக்கும் ஒன்று. கேரளாவில் இது ரொம்ப‌ பிரபலம்.

நன்கு முற்றிய‌ தேங்காய் ஐந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதைத் துருவி அரைத்து பின் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தேங்காய்ப் பாலை அகலமான‌ பாத்திரத்தில் வைத்து அப்படியே அசையாமல் ஃபிரிஜில் வையுங்கள்.

ஒரு நாள் அப்படியே இருக்கட்டும். மறு நாள் பாத்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் அதில் ஃபிரிஜிலுள்ள‌ குளிர்ச்சியால் சுத்தமான‌ தேங்காய் எண்ணெய் சும்மா வெண்ணெய் மாதிரி அப்படியே மிதந்து கொண்டிருக்கும். (அடியில் தங்கியிருக்கும் தண்ணீர் தேவையில்லை)

அதைத் தனியே எடுத்து வாணலியில் போட்டு மிதமான‌ தீயில் காய்ச்சுங்கள். இப்போது சுத்தமான‌ உருக்கெண்ணெய் ரெடி. இது புரோட்டீன் ரிச் ஆயில்.

இதைத் தொடர்ந்து உபயோகிக்க‌ ஹேர் ஆயில் விளம்பரத்தில் வருவதைப் போல‌ இடுப்பு வரை அடர்ந்து செழித்த‌ கூந்தல் உங்களுக்கே சொந்தம்.

இனி அடுத்த‌ விஷயம் முடி உதிர்தல்.

டென்ஷன்
சூடு
சத்துக்குறைபாடு
கெமிக்கல்

இவையே முடி உதிர‌ முக்கியமான‌ காரணங்களாகும்.

குட்டிப் பெண்ணாக‌ இருக்கும் போது வேகமாக‌ வளரும் முடி, ப்ளஸ் டூ செல்லும் போது உதிர‌ ஆரம்பிக்கின்றது. இதற்குக் காரணம் டென்ஷன். மார்க் வாங்க‌ வேண்டிய‌ நிர்ப்பந்தம். அவர்கள் தலைக்கு மேலே ஏற்றி வைக்கப்படும் பாரம் தாங்காமல் முடி உதிரத் தொடங்குகின்றது.
டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸ் ஆக‌ இருப்பது அவசியம்.

அப்புறம் ஹீட். இதுவும் ஒரு மெயின் காரணமாகும். இதற்கு நல்ல‌ தீர்வு உள்ளது.

கால் டம்ளர் கெட்டியான‌ தேங்காய்ப் பாலில், அரை ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு கலந்து, தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறியதும், ஷாம்பூ போடாமல் குளிக்க‌ வேண்டும். தொடர்ந்து செய்து வர‌ சூடு தணிந்து முடி உதிர்தல் நிற்கும்.

சத்துக்குறைபாடு
உணவில் கால்சியமும், இரும்புச்சத்தும் எடுத்துக் கொண்டால் முடி உதிராது. இதற்கு தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட‌ வேண்டும். பேரீச்சையில் கால்சியமும், அயர்னும் உள்ளது.

இதைச் சாப்பிட‌ ஆரம்பித்து ஏழே நாட்களில் சே.....சே........ஏழு நாள் அதிகம்........ஒரே வாரத்தில் முடி உதிர்வது நின்று விடும். இது நூறு சதம் உண்மை. முயற்சித்து பாருங்களேன்.

பொடுகு
இது ஒரு ஜுஜிபி மேட்டர்.

கொஞ்சம் வேப்பம்பூவை எடுத்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்க்க‌ போயே போச்சு.

முடி மிருதுவாக‌

இருக்கவே இருக்கு ஹென்னா. போட்டுப் பாருங்க‌ உங்க‌ கூந்தல் அப்படியே ஷைனிங்கா சும்மா டாலடிக்கும். மாதம் ஒரு முறை போடலாம். பளபளக்கும்.

இந்தப் பதிவு, கூந்தல் மாதிரி ரொம்ப‌ நீளமா போச்சு. போதும் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அடுத்த‌ பதிவில் சந்திப்போம்.

பின்குறிப்பு; இதெல்லாம் எங்க‌ வீட்டு டைரியில் இருந்த‌ குறிப்புகள். நான் ஃபாலோ பண்ணுபவை. (இத்தனை நாளும் இந்தக் குறிப்பு எங்கேயிருந்ததுனு சொல்லிட்டேன் சுபி).

5
Average: 5 (7 votes)

Comments

ஊரில் இருந்த வரை நானும் எண்ணெய் காய்ச்சியேதான் வைப்பேன். இதே ப்ரிஜ் டெக்னிக்தான். சூப்பர் இல்ல! வெள்ளை வெளேர் என்று இருக்கும் அந்த வெண்ணெய்க் கட்டியைத் தொட்டுப் பார்க்கப் பிடிக்கும். :-)

‍- இமா க்றிஸ்

அக்கா நலமா... அருமையான‌ பதிவு இன்றைய‌ சூழலில் எல்லோருக்கும் தேவையான‌ பதிவும் கூட‌...

அக்கா தேங்காய் பால் ல‌ காச்சுன‌ எண்ணெய் எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் அக்கா ...இல்ல‌ ஸ்டோர் பண்ண‌ வேற‌ ஏதாவது வழி இருக்கா

இப்படிக்கு அன்பு தங்கை ;)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இப்படிலாம் எண்ணெய் செய்வதை இப்ப‌ தான் கேட்கறேன். நிச்சயம் ட்ரை பண்ணிப்பார்க்கறேன். நல்லெண்ணெய் வேப்பம் பூ காய்ச்சி வைத்து கொள்ளலாமா? அல்லது அப்பவே பயன்படுத்தி விட‌ வேண்டுமா? தெரிந்த‌ ஒருவருக்கு சொல்ல‌ வேண்டும் இந்த‌ முறையை... டவுட்டை க்ளிரயர் பண்ணுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்களும் இதே முறை தானா? தண்ணீர் அடியில் தங்கி, மேலே மிதக்கும் அந்த‌ எ(வெ)ண்ணெய்க் கட்டியிலிருந்து உடனே ஆயில் ரெடி பண்ணி விடலாம்.
//ஊரில் இருந்தவரை// ஏன் இப்போ விட்டுட்டீங்க‌ இமா

ரொம்ப‌ நலம் கனி.
உன்னோடு பேசி ரொம்ப‌ நாளாச்சி.
எண்ணெய் ஈரப்பதம் இல்லாமல் பக்குவமாக‌ காய்ச்சினால் மாதக் கணக்கில் வரும் கனி.
சிறு துணியை திரியாக்கி அதை எண்ணெயில் விட்டு பின் தீயில் காட்டினால் சலசலப்பு இன்றி திரி எரிந்தால் ஆயில் பக்குவம் சரி. ஈரப்பதம் இல்லேன்னு அர்த்தம். பாட்டி சொல்லித் தந்தது.

இப்படிக்கு அன்பு அக்கா:)

கட்டாயம் ட்ரை பண்ணுங்க‌ வனி. முடி நன்கு வளரும்:).
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை காய்ச்சி வைத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது வனி. நெடு நாட்கள் இருக்கும்.

நான் அந்த‌ தேங்காய் எண்ணெய் காய்ச்சி வைக்க‌ போறேன்... எவ்வளவு நாள் வைக்கலாம் நிகி? அதை எவ்வளவு நேரம் காய்ச்சணும்? எப்படி பதம் தெரிஞ்சுக்கிறது? தெளிஞ்ச‌ வெண்ணெய் போன்றதை எடுக்கும் போது ஒடையாமல் வருமா? தண்ணி இல்லாம‌ எப்படி எடுக்கணும்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கு யாரும் எண்ணெய் வைப்பதில்லை. பவுடர் போடுவதும் கிடையாது. அப்படியே நானும் பழகியாச்சு. முடிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நல்லாவேதான் இருக்கு. மெதுவா எண்ணெய் வைப்பதை மறந்தே போய்ட்டோம்.

இங்க வந்த ஆரம்பத்தில பார்சூட் எண்ணெயை பாட்டில்ல இருந்து வெளிய எடுக்க வழி தெரியாம உருக்கிறதுக்கு வெயிலும் இல்லாம சிரமப் படுவேன். பிறகு வாடகைக்கு இருந்த வீடுகளில் பாய்லர் கப்போர்டில் வைக்க முடிந்தது. பிறகு கிடைத்த வீடுகளில் இந்த வசதி கிடைக்கவில்லை. எண்ணெய் வைக்காமல் விட்டு பத்து வருஷமாச்சும் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நிகி அக்கா,
ஆஹா எவ்வளவு அருமையான குறிப்பு சொல்லி இருக்கீங்க‌,
ரொம்ப‌ ரொம்ப‌ தான்க்ஸ்.......

அதோட‌ முடிக்கு நிறைய‌ டிப்ஸ் சொல்லி இருக்கீங்க‌,
எனக்கு நிறைய‌ முடி இருக்கும், இப்ப‌ கொஞ்சம் அதிகமா கொட்டுது, நீங்க‌ சொன்னதை முயற்சி பண்றேன் அக்கா.....

இத்தனை நாளா எங்க‌ அக்கா போனீங்க‌, இந்த‌ டிப்ஸ் எங்கப்பா வச்சி இருந்தீங்க‌...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்கு முற்றிய‌ தேங்காய் எடுப்பது அவசியம் வனி.
தெளிந்த‌ வெண்ணெய் போன்றதை எடுக்கும் போது உடைந்தால் பரவாயில்லை. அதாவது, அடியிலுள்ள‌ நீரை வடித்து விட்டு மேலே மிதக்கும் எண்ணெயை அப்படியே காய்ச்ச‌ வேண்டியது தான். நீரை வடித்துவிடுவதால் விரைவில் ஆயில் ரெடியாகிவிடும். அடுப்பை சிம்மில் வைங்க‌

எண்ணெய் ஈரப்பதம் இல்லாமல் பக்குவமாக‌ காய்ச்சினால் மாதக் கணக்கில் வரும்
சிறு துணியை திரியாக்கி அதை எண்ணெயில் விட்டு பின் தீயில் காட்டினால் சலசலப்பு இன்றி திரி எரிந்தால் ஆயில் பக்குவம் சரி. ஈரப்பதம் இல்லேன்னு அர்த்தம். பாட்டி சொல்லித் தந்தது.:)

//எண்ணெய் வைக்காமல் விட்டு பத்து வருஷமாச்சும் இருக்கும்//.ஓ... அந்த‌ க்ளைமேட்டுக்கு ஆயில் தேவையில்லை போல‌. ஆனால், இங்கே அப்படி முடியாதே.
ஆனாலும், வெளியே கிளம்பும் போது தலைக்கு ஆயில் இல்லாமல் இருப்பது தனி அழகு தான்.:) இமா

தேங்காய்ப் பாலும், பேரீச்சையும் கட்டாயம் கை கொடுக்கும் சுபி. நூறு சதம் நம்பலாம். ட்ரை பண்ணிப் பாருங்க‌ .

//இத்தனை நாளா எங்க‌ அக்கா போனீங்க‌, இந்த‌ டிப்ஸ் எங்கப்பா வச்சி இருந்தீங்க‌.///
எங்க‌ வீட்டு டைரியில் இன்னும் ஏராளமா இருக்கு சுபி.எல்லாம் பாட்டி, அம்மா சொல்லித் தந்தது :)

தெளிவா சொன்னதுக்கு நன்றி :) அம்மாவ‌ செய்ய‌ சொல்லுறேன் எனக்கு இப்போலாம் ரொம்பவே ஹேர் ஃபால் ஆகுது அக்கா அலர்ஜி மாத்திரினால‌ நு டாக்டர் சொன்னங்க‌ ...
இதுக்கு கெமிக்கல் லஅம் யூ ஸ்பண்ண‌ கூடாது நு சொன்னாங்க‌ அக்கா அதான் இத‌ யட்ரை பண்ணலம‌ நு இருக்கேன் ..

அக்கா இத‌ தொடர்ந்து யூஸ் பண்ணனுமா இல்லை 2 நாளுக்கு ஒரு முறை யூஸ் செய்யணூமா அன்ட்

தேச்சு ஊற‌ வச்சு தலை குளிச்சா பலன் கிடைக்குமா அக்கா அப்புறம் வெறும் தேங்காய்ன்றதால‌ தேச்சுட்டு போனா ஸ்மெல் வெருமா அக்கா ?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்கு முதலில். அடர்த்தியனா முடி அப்புரம் 12 த் படிக்கும் போது ரொம்ப கொட்ட ஆரம்பித்துவிட்டது இப்பம் ஒரு 7 வருடமா ரொம்ப கொட்டுது. என்ன பன்ன எனக்கு தெரியல vcare oil use pannukiren but mudi romba kottuthu more stressa irukupa mudi nuniyil splitends niraiya irruku naan vcare sikakai use pannuren plz friends mudi nangu valara eppidi follow pannurathu sollunga.white hair vera irruku .ennaku tuticorinpa my relatives neriya per tvl irrukanga.

adi maram kolirnthalthan nooni maram valarum

வழக்கமா ஆயில் தேய்க்கிற‌ மாதிரி இதையும் யூஸ் பண்ணலாம் கனி.
//தேச்சு ஊற‌ வச்சு தலை குளிச்சா பலன் கிடைக்குமா அக்கா அப்புறம் வெறும் தேங்காய்ன்றதால‌ தேச்சுட்டு போனா ஸ்மெல் வெருமா அக்கா ?//
ஊறவிட்டும் குளிக்கலாம் . ஸ்மெல்??? தேங்காய் எண்ணெய் நல்ல‌ மணம் தானே கனி.:) தைரியமா யூஸ் பண்ணுங்க‌.

டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸா இருங்க‌. டென்ஷனால் நடக்கப் போவது ஒண்ணுமில்லை தோழி.
நான் சொன்னதை ஃபாலோ பண்ணுங்க‌. கட்டாயம் முடி கொட்டுவது நிற்கும்:)

இமா அம்மா
\\எண்ணெய் வைக்காமல் விட்டு பத்து வருஷமாச்சும் இருக்கும்.\\

ஓ எண்ணெய் வைக்காம‌ இருந்தா தலைவலி வராதா, .....

எண்ணெய் வைக்காம‌ இருந்தா முகம் ப்ரஸா இருக்கும், ஆனா எனக்கெல்லாம் எண்ணெய் வைக்காட்டி நிறைய‌ பிராப்ளம் வரும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நிகி அக்கா,
ம்ம்
தேங்காய் பால் நிஜமா நல்ல‌ குளிர்ச்சியா இருக்கும், ஆனா எனக்கு தான் தேய்ச்சி
ஊறவச்சி குளிச்சப்பா காய்ச்சல் வந்துருச்சி.........
பேரிச்சம்பழம் சாப்பிடறேன் தான்க்ஸ் அக்கா

///எங்க‌ வீட்டு டைரியில் இன்னும் ஏராளமா இருக்கு சுபி.எல்லாம் பாட்டி, அம்மா சொல்லித் தந்தது /// ஒண்ணு ஒண்ணா வெளில‌ விடுங்க‌ அக்கா,

எங்கள மாதிரி ஆளுக்கு யூஸ் ஆகும்...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//ஒண்ணு ஒண்ணா வெளில‌ விடுங்க‌ அக்கா,//
உங்களுக்கு யூஸ் ஆனா எனக்கு மகிழ்ச்சி தான் சுபி. டைரியிலே இருந்து அப்படியே சும்மா இருக்குது. இப்படி தொகுத்து விடறது எனக்கும் வசதியா இருக்கு சுபி:)
பதிவில‌ சொல்லிட்டேன் சுபி. எங்கேயிருந்ததுனு ? பின்குறிப்பு பாருங்க‌.

//பின்குறிப்பு பாருங்க‌.// ம்ம் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் .....
ஹா ஹா :)) :))
வலைபதிவிலேயே போட்டாச்சா, அக்கா....
அப்போ பாட்டிக்கு தான்க்ஸ். பாட்டிங்க‌ எல்லாருமே கடவுளின் வரபிரசாதம் தானே, எல்லாத்துக்கும் வீட்லயே கைவைத்தியம் வச்சீருப்பாங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//அப்போ பாட்டிக்கு தான்க்ஸ். பாட்டிங்க‌ எல்லாருமே கடவுளின் வரபிரசாதம் தானே, எல்லாத்துக்கும் வீட்லயே கைவைத்தியம் வச்சீருப்பாங்க‌.//
உண்மை தான் சுபி. அவங்க‌ சொல்ற‌ இயற்கை முறை ட்ரீட்மெண்ட் ஐ நம்பிக்கையோடு செய்யலாம்.
எனக்கு அதில் ரொம்பவும் ஈடுபாடு
தான்க்ஸ் சுபி :)

ஹை தோழி ஒரு நாளைக்கு டேட்ஸ் எத்தனை எடுக்கனும்? என்ன சாம்பு யூஸ் பன்னாலாம்? பால் எடுக்கும் போது தண்ணிர் சேர்க்கலாமா? மிகவும் நன்றி

தேங்கா இருக்கும் ஆன்னா முத்தினதா எப்படி கண்டுபிடிக்கிறது ???தேங்காய்பால் தேய்த்து குளித்தபின் அன்று ஷாம்பு உபயோகிக்க கூடாதுன்னு சொல்றீங்க ,,இந்த மாதிரிதான் தலைக்கு குளிக்கணுமா ஷாம்புவே தேவை இல்லையா ,,எத்தனை நாளைக்கு ஒருதரம் இப்படி தேய்த்து குளிக்கணும்???

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஐந்து டேட்ஸ் சாப்பிடுங்க‌.
கெட்டியான‌ பாலை தலைக்குத் தேய்க்கனும். லேசா தண்ணீர் தெளிச்சு எடுங்க‌.

கருங்கண்ணு தேங்காய்னு சொல்லுவாங்க‌. நல்லா விளைந்து இருக்கணும்.
ஓடு கறுப்பா இருக்கும். ஆமா, அன்று மட்டும் ஷாம்பூ வேண்டாம். தொடர்ந்து நாலைந்து நாட்கள் அப்ளை பண்ணுங்க‌. அப்புறமா மாதம் ஒரு முறை போதும்.:)

ஷாம்புவே தேவை இல்லையா ,

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

//எண்ணெய் வைக்காம‌ இருந்தா தலைவலி வராதா,// ;)) இங்க யாருமே எண்ணெய் வைக்காததால தலைவலி வரதா சொல்லிக் கேட்டது இல்லை. இவங்க கலாச்சாரத்துல எண்ணெய் வைக்கிற பழக்கம் கிடையாது இல்லையா!

தவிர... இங்க தேங்காய் எண்ணெய் அறை வெப்பநிலைலயே ப்ரிஜ்ல வைச்ச மாதிரி இருக்கும். நல்லெண்ணெய்... அந்த வாசனையோட ஸ்கூலுக்குப் போக முடியாது. எண்ணெய் இல்லாமலே பழகிட்டு. நான் விடுமுறைல அங்க வந்தப்பவும் வைக்கல. தலைவலி வரல. இலங்கைல இருந்திருந்தா நீங்க சொல்ற மாதிரியேதான் நானும் சொல்லி இருப்பேன்.

‍- இமா க்றிஸ்

நிகிலா பொடுகுக்கு வேப்பம்பு நல்லென்னை காய்ச்சி தேய்த்தூ குளீக்க வேண்டுமா
அப்படியெ விட‌ வேன்டுமா

நிகி நல்ல உபயோகமான பதிவு :) இந்த முறையில் எண்ணைய் எடுப்பது இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். நாங்களும் கடையில் எண்ணைய் வாங்காமால், முற்றிய தேங்காய்களை துண்டுகளாக்கி காயவைத்து மிஷினில் கொடுத்து எண்ணைய் ஆட்டி வைப்பதே வழக்கம்.
அதைவிட இது மிகவும் எளிதான முறையாக இருக்கிறது, இந்த முறையை செய்து பார்க்கப்போகிறேன்.

தேங்காய் அரைக்கும் பொழுது தண்ணீர் எவ்வளவு ஊற்றி அரைக்கவேண்டும்?
நிறைய நல்ல பல உபயோகமான விஷயங்களை பகிர்ந்துள்ளமைக்கு நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர் நிகி. நல்ல உப்யோகமான பதிவு. எல்லா சந்தேகமும் தீர்த்துடுங்க. தேங்காய் முதல் பால் மட்டும் எடுத்தா போதுமா. எவ்வளவு தண்ணீர் சேர்க்கும். எனக்கு இடுப்பு வரைக்கும் இருந்தது முடி. இப்ப பிளவுஸ் மேல இருக்கு..முனை வெடிப்பு விட்டு முடி குருவி வால் மாதிரி சுருண்டுக்குது.என்ன பண்ணலாம் அணுக்கம் கொஞ்சம் டிப்ஸ் சொல்லுஙு

Be simple be sample