சூரியகாந்தி எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய்

அறுசுவை நேயர் திரு.வீரராகவன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் எழுப்பிய கேள்வியை இங்கே பதிவு செய்கின்றேன். அனுபவம் உள்ளவர்கள் பதில் அளிக்கவும். கேள்வி இதுதான்.

"கடந்த 20 வருடங்களாக சூரியகாந்தி எண்ணெய்யை பயன்படுத்தி வருகின்றேன். இதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாமா என்பதை அறிய விரும்புகின்றேன். அது மட்டுமன்றி, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை, தீமைகள் என்பதையும் தெரிவிக்கவும்."

திரு வீரராகவன்/திரு அட்மின் அவர்களுக்கு தாங்கள் ஒரு மாற்றத்திர்க்கு வேண்டுமானால் நிச்சயம் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். ஆனால் தாங்கள் எந்த நோக்கத்தோடு சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்தீர்களோ அந்த நோக்கத்திற்க்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நினைதீர்களானால் நீங்கள் சூரியகாந்தி எண்ணெயையே தொடரலாம்.காரணம் இரண்டும் நம் உடலுக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தாலும் அதன் பயன்கள் வெவ்வேறாக தான் இருக்கும்.
ஆலிவ் ஆயிலால் உடலில் சேறும் கொழுப்பை அகற்றவும், உண்ட உணவு நன்கு செரிக்கவும், அசிடிட்டியால் ஏற்ப்படும் நெஞ்சுகரித்தல் போன்ற அஜீரண கோளாருகள் ஏற்ப்படாமல் இருக்கவும், மற்றும் இரத்தகொதிப்பையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கவும் பெரும்பங்காற்றுகின்றன.
மேலும் நம் உடலின் எல்லா வித வெளிப்புற பூச்சுதல்களுக்கும் பேருதவி புரிகின்றன. கோடையினாலும், குளிரினாலும் நம் தோலை காய்ந்து போகாமல் பாதுகாக்கவும், தலை முடியிலிருந்து பாதங்கள் வரையில் எல்லாவித தேவைகளுக்கும் நல்ல நிவாரணியாக பயன்படுத்த படுகின்றது.
தீமைகள் என்று என்னைப் பொருத்தவரையில் இதுவரை எதுவும் தென்படவில்லை. எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். நன்றி.

Manohari avargalukku,

I'm using both sun flower oil as well as olive oil. I read also heard through others that olive oil loses it's goodness when it is heated. Is it true? In all cooking shows, I've noticed people always using olive oil. What is the truth? (I'm sorry.It's bit difficult to type in Tamil.It will take sometime for me to learn to type in Tamil. Until then I hope admin avargal yennai thamizhil type panna allow pannuvargal yenru)

அட்மின் அவர்கள் உங்களை என்றுமே தமிழில் டைப் செய்ய அனுமதிப்பார். அவரது வேண்டுகோளே அதுதானே.. ;-)

ஹாய் மனோகரி மேடம்
நானும் ஆலிவ் எண்ணெயில் சமையல் பண்ணுகிரேன்
அதில் 2வகை இருக்கிறது லைட் ஆலிவ்ஆயில் , டார்க் ஆலிவ்ஆயில் எந்தவகை நம் சமையலுக்கு,உடலுக்கு நல்லது

ஹலோ ஆலன் எப்படி இருக்கின்றீர்கள்? ஆலீவ் எண்ணெயைப் பற்றி நல்ல பயனுள்ள கேள்வியைக் கேட்டுள்ளீர்கள், நன்றி. இந்த எண்ணெய்யை நீங்கள் கூறுவதுப் போல் எல்லா குக்கிங் ஷோவிலும் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.ஆனால் இந்த எண்ணெயை அவர்களின் சமையல் முறைகளுக்கு ஏற்றவாறு அந்தந்த முறையில் தயாரித்த எண்ணெய்யைத் தான் பயன்படுத்துவார்கள். நிச்சயமாக வெர்ஜின் ஆலீவ் ஆயில் என்ற தரத்தை சூடுப் படுத்தும் பொழுது தான், அதன் தன்மை மாறிவிடும். இதைத் தவிர மற்ற வகையான ஆலீவ் எண்ணெய்யை சூடுபடுத்தும் பொழுது அதன் தன்மை மாறாது. ஆனாலும் இந்த எண்ணெயை உணவின் சமையல் முறைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.

சாலட் போன்று பச்சையாக சாப்பிடும் உணவுகளில் கலந்தோ அல்லது தொட்டு சாப்பிடவோ எக்ஸ்ரா வெர்ஜின் அல்லது வெர்ஜின் என்ற முதல் தரமான ஆலீவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த வகை ஆயிலைத் தான் அடுப்பில் வைத்து சூடு படுத்தி சமைக்கும் உணவிற்க்கு பயன்படுத்தக் கூடாது. விலையும் அதிகம்.

மற்றபடி எல்லாவிதமான சமையலுக்கென்று, பொதுவாக உள்ள மீடியம், லைட், எக்ஸ்ரா லைட் போன்ற ஆலீவ் எண்ணெயை வகைகளை பயன்படுத்தலாம்.மேலும் சந்தேகமிருந்தாலும் கேட்கவும்,நன்றி.

ஹலோ ஹவ்வா, எப்படி இருக்கின்றீர்கள்? நீங்கள் கேட்டுள்ள கேள்வியின் விடையாக நம்மூர் சமையலுக்கு ஏற்றது லைட் ஆலீவ் ஆயில், மற்றும் எக்ஸ்ரா லைட் ஆலீவ் ஆயில் ஆகும்.

வதக்கல்,வறுவல், பொரியல், மற்றும் தாளிக்க போன்ற முறைகளுக்கு லைட் ஆலீவ் ஆயிலை பயன்படுத்தலாம்.

மற்றபடி எண்ணெயில் பொரிக்கும் அப்பளம் மற்றும் பலகாரங்களுக்கு எக்ஸ்ரா ஆலீவ் ஆயிலைப் பயன் படுத்தலாம்.காரணம் இவை மேற்கூறிய முறைகளை விட நன்கு சுத்திகரிக்கப்பட்டு தயாரிப்பதால் பொரிப்பதற்க்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது.

டார்க் என்று எக்ஸ்ரா வெர்ஜினைதான் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த வகை நம்மூரின் சமையலுக்கு ஏற்றதல்ல. ஆகவே அதைத் தவிர்த்து விடுவது நல்லது. வீணாக பணம் தான் விரயமாகுமே ஒழிய அதனால் பயன்னில்லை.
பொதுவாக கூற வேண்டுமென்றால் எக்ஸ்ராவெர்ஜின், அல்லது வெர்ஜின் ஆலிவ் ஆயிலை தவிர்த்து மற்றவகை ஆலிவ் எண்ணெய்கள் அனைத்தும் நம்முடைய்ய சமையலுக்கு ஏற்றது. உடல் நலம் என்று பார்த்தால் கிடைக்கும் எல்லா வகையான எண்ணெய்களிலும் ஆலீவ் எண்ணெய் தான் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்க்கும் நல்லது என்பது என் கருத்து. சரியா,நன்றி டியர்.

நன்றி மனோகரி மேடம்
நல்லஎண்ணைக்கும் ஆலீவ் எண்ணெய்க்கும் எண்ண வித்தியாசம்?

ஹலோ ஹவ்வா, நல்லெண்ணெய்க்கும், ஆலிவ் எண்ணெய்க்கும் எனக்கு தெரிந்த ஒரு வித்தியாசம் அது பெறப்படும் பொருளிலிருந்து வருவது தான்.நல்லெண்ணெயை எள்ளின் விதையிலிருந்து அரைத்து பெறப்படுகின்றது.ஆலிவ் எண்ணெய் அதன் பழத்திலிருந்து அதை அரைத்து பெறப்படுகின்றது.
மற்றபடி அதன் நிறத்திலும், மணத்திலும் தவிர்த்து,எனக்கு தெரிந்த வரையில் வேறெந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. இவையிரண்டு எண்ணெய்களுக்கும் வித்தியாசத்தை விட ஒற்றுமைகளே அதிகம் உள்ளதாக கருதுகின்றேன். அவைகள் உற்பத்தியாகும் ஸ்டேஜஸ்ஸிலிருந்து, அதன் பயன்கள் வரை எல்லாமே சரிசமமாக உள்ளதால் வித்தியாசங்கள் என்று எனக்கு தெரிந்த அளவில் ஒன்னுமில்லை என்று தான் நினைக்கின்றேன்.நன்றி.

ella oililum same saturated fat erukku even olive oililum errukku aanal olive oilil good fat aathikamaerrukku oru allukku arai kilo oru mathaththukku bayan paduththavum atharkku mel use pannenal kastam than

நன்றி ALL IN ALL மனோகரி மேடம்

மேலும் சில பதிவுகள்