குடும்பங்களில் பிரச்சனை யாரால்?

பிரச்சனை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால் அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்சனை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தை தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது.
பிரச்சனைகள் பலவிதம் கணவன் மனைவிக்குள் பிரச்சனை, குழந்தைகளால் வரும் பிரச்சனை, குடும்பத்தாரால் வரும் பிரச்சனை, சில நேரங்களில் நண்பர்களால் கூட பிரச்சனைகள் வரும்.
ஆனால் கல்யாணமாகி ஒருசில மாதமானாலும் சரி, பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சரி பிரச்சனை ஏற்ப்பட்டு கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்துப் போகும் நிலமை தற்காலத்தில் ஒரு நோயைப் போன்று பரவி வருவதைக் அதிகமாக காணமுடிகின்றது.
இதுபோன்ற பிரச்சனையை யார் நினைத்தால் தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைக்கின்றீர்கள்? நான் கூறுவேன் மனைவியை விட கணவன் மனது வைத்தால் நிச்சயமாக முடியும். எவ்வளவு பெரிய குடும்பப் பிரச்சனையையும் அவர்கள் நினைத்தால் தவிடு பொடியாக்க முடியும்.ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் ஏனோ அதைச் செய்ய முற்படுவதில்லை.
நானும் ஒரு பெண் என்பதால் அப்படி ஒருதலைப் பட்சமாக கூறவில்லை. என்னுடைய சொந்த அனுபவங்களாலும், மற்றும் பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை கண்டும், கேட்டும், தீர்வு காண செய்தும் உள்ள அனுபவத்திலிருந்தான் கூறுகின்றேன்.
ஆக ஒரு கணவனால் தான் பெரும்பான்மையான குடும்பங்கள் பிரியக் காரணமாக இருக்க முடியுமே ஒழிய நிச்சயம் ஒரு மனைவியாக இருக்க முடியாது. வீணாக அவர்கள் மீது வீண்பழியைச் சுமத்தி தப்பிப்பதும் ஆண்களாகத் தான் இருக்க முடியம் என்பது என் கருத்து.
இதோடு மட்டுமல்லாமல் குடும்பங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள் பெரிதாவதற்க்கும் காரணம் ஆண்கள் தானே ஒழிய பெண்களால் அல்ல என்று கூறி இந்த பிரச்சனையை பொது நலச் சிந்தனையோடு துவக்கி விட்டேன். இதை ஆமோதித்தோ அல்லது மாற்றுக் கருத்தோ கூற விரும்புவர்கள் தாராளமாக கூறலாம். கலந்தாலோசித்து நாம் நல்ல தீர்வையும் காணலாம். நன்றி.

மனோகிரி, நீங்கள்சொல்வது சரிதான்.கணவனால் தான் வீட்டில் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.அதனை சரிகட்ட மனைவின் மேல் பழியை போடுகிறார்கள்.கணவன் மார்கள்சிறிது விட்டு கொடுத்துபோனாலே போதும்.வீட்டில் நிம்மதியும் சந்தோசமும் தானாக வந்து விடும்.இதனை ஆண்கள் எப்போது உணர்வார்கள் என்றால் அவர்களுக்கு வயதாகும் போது தான் பொண்டாட்டியின் அருமை புரியும்.அடடா நம்ம எத்தகைய சந்தோசத்தை இழந்து விட்டோமென்று அவர்களுக்கு புரியும்.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பன்னி என்ன பிரயோஜனம்?வீட்டில் கணவனுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து மனைவியானவள் சமைத்து கொடுக்கிறாள்.குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் கவனித்து கொண்டுவீட்டையும் கவனித்து கொள்கிறாள்.அதற்கு எத்தனை எத்தனை பொறுமையும் அன்பும் நிதானமும் தேவை.அத்தகைய குணங்கள் கொண்டவள் மனைவி.இத்தகைய குணங்கள் கொண்ட மனைவியால் வீட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பே இல்லை.

ramba

ஹலோ ரம்பா, நிச்சயம் உங்களின் உண்மையான கருத்துக்களை ஒரு சில கணவன் மார்களையாவது சிந்திக்க வைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி

உங்களுடைய கணவன் மார்களை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து கணவன் மார்கலையும் குற்றம் சொல்வது ரொம்ப தவறு. பாவம்.... உங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வள்வுதான்.

என் பார்வையில் குடும்பம் என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் சுற்றியே உள்ளது. வீட்டு தலைவனை பொருத்த மட்டில் மனைவி, குழந்தைகள், பெற்றோர் அவன் குடும்பம்... இது ஒவ்வொருவர் மனபான்மையில் மறுபடும்.

குடும்பத்தில் பிரச்சைனைகள் பலவற்றுக்கும் காரணம் நம் மனம் தான். நாம் எப்பொழுது நம் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்துகிறோமோ அன்று நிச்சயம் பிரச்சைனைகள் குறைந்து விட்டது போல தோன்றும்.

அனைவரின் எண்ணங்களும் ஒன்று போல் இருந்தால், வாழ்க்கை சலித்து விடும், ஆகவே மற்றவரின் மாற்று எண்ணங்களை ஒத்து கொள்கிறோமோ இல்லையோ மதிக்க தெரிந்து கொண்டால் பல பிரச்சைனைகள் இல்லாமல் போய் விடும். இதில் ஆண்களும் சரி பென்களும் இருவருமே மாற்றத்தை உண்ர வேண்டியவர்கள் தான்.

ஹலோ வீரமுத்து சார், நீங்கள் ஒரு அன்பான கணவர் அல்லது அப்படி இருக்க தான் ஆசைப்படுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

டியர் மைதிலி, தங்கள் கருத்திற்க்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறுவதும் சரி தான். ஆனால் அது பொதுவான குடும்பப்பிரச்சனைக்கு நன்றாக ஒத்து வரும். உதாரணத்திற்க்கு ஒரு குழந்தை ஒழுங்காக படிப்பதில்லை, ஒழுங்காக வீட்டுப் பாடம் செய்வதில்லை என்று அறிவித்தால், அதற்க்கு காரணம் அந்த குழந்தை இல்லை. ஆனால் அதற்க்கு காரணம் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள மற்றோரும் தான். இப்படியான விசயங்களுக்கு நாம் பொதுவாக எல்லோரும் பொருப்பேற்றுக் கொள்ளலாம்.ஆனால் கணவன் மனைவிக்குள் எழும் பிரச்சனை என்று பார்த்தோமானால் ஒரு பிரச்சனைக்கு காரணம் ஒருவராகத்தான் இருக்க முடியும். பொதுவாக பெண்களின் சுபாவம் எந்த பிரச்சனையையும் தள்ளி போடமாட்டார்கள். அவர்களுக்கு அதை உடனே கண்டித்து நல்ல தீர்வு காணச் செய்யவேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள். ஆனால் ஆண்கள் எந்த விசயத்தையும்
மிகவும் எளிதாக தள்ளி வைத்து விடுவார்கள். இவற்றால் வரும் பாதிப்புக்களும், பின்விளைவுகளையும் அவர்கள் சிந்திப்பது கிடையாது. எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு பெரிதாக வெடிக்கும் பொழுது கூட ஒரு கவலையும் இல்லாமல் பெண்களால் தான் பிரச்சனை பெரியதாகி விட்டது என்ற பழியையும் போடுவார்கள்.ஆகையினால் தான் பிரச்சனைகளுக்கும், குடும்பங்கள் பிரிவதர்க்கும் காரணமே ஆண்கள் தான், என்று கூறினேன்.நன்றி.

டியர் மனோஹரி,
உங்கள் கருத்து சரி தான்....நீங்கள் சொல்வது போல்
"இதுபோன்ற பிரச்சனையை யார் நினைத்தால் தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைக்கின்றீர்கள்? நான் கூறுவேன் மனைவியை விட கணவன் மனது வைத்தால் நிச்சயமாக முடியும். எவ்வளவு பெரிய குடும்பப் பிரச்சனையையும் அவர்கள் நினைத்தால் தவிடு பொடியாக்க முடியும்." என்பது 100/100 சரி.....

எனென்றால் ஒரு பிரச்சனை என்று வரும் போது பெண்கள் எப்பொழுதும் solution-ஐ தான் எதிர்ப்பார்ப்பார்கள்...ஆண்கள் அதை தவிர்ப்பதை(avoid) தான் விரும்புவார்கள்....
இதனால் பிரச்சனை பெரிதாகுமே ஒழிய குறையாது...

நன்றி...

ஹலோ வாணி டியர், தங்கள் கருத்திற்க்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. குடும்ப பிரச்சனைகளை தவிர்ப்பதினால் தான் பிரச்சனைகளும், குழப்பங்களும் பெரிதாகி விடுகின்றன. இதில் ஒரு சிலர் இன்னமும் மோசம் பிரச்சனைகளையும் தவிர்த்து விடுவார்கள்,அவர்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த ஒரு அனுபவத்தை சொல்கின்றேன்.எனக்கு நன்கு அறிமுகமான ஒரு இந்தியப் பெண்மணியை தற்செயலாக மாளில் சந்தித்தேன்.பார்க்க கலையிழந்த முகத்தோடு காணப்பட்டார்கள். ஏதாவது உடம்பு சரியில்லையா என்ன் இப்படி மெலிந்து இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்களால் ஒரு பதிலையும் கூற முடியாமல் தவிப்பதை உணந்துக் கொண்டு வேண்டாம் நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம் எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறினேன். அவ்வளவு தான் கண்களில் பொல பொல வென்று கண்ணீர் வழிந்தொடத் தொடங்கிவிட்டது. பிறகு சிறிது தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசினாற்கள். அதாவது. எனக்கு உடம்புக்கு ஒன்றுமிலை. வீட்டில் தான் ஒரே பிரச்சனை ஆகவே என் கணவர் இல்லாமல் குழந்தகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு போக தீர்மானித்து விட்டேன் என்றார்கள்.
பிரச்சனை இதுதான்.அவர் கணவர் அன்பாக இருப்பதில்லையாம்.வீட்டில் குழந்தைகளைக் கூட கவனிப்பது கிடையாதாம்.வேலைக்கு போவாராம் பிறகு வீட்டில் இருந்தால் எந்த நேரமும் கம்ப்யூட்டரின் முன் தான் அமர்ந்துக் கொள்வாராம், இரவு இரண்டு மூன்று மணி வரையிலும் கூட டிவி பார்த்துக்கொண்டிருப்பாராம், மற்ற சமையங்களில் உறவினரிடமும், நண்பர்களிடம் தொலை பேசியில் பேசிக் கொண்டிருப்பாராம். மனைவியிடமோ, குழந்தைகளிடம் கூட சரியாக பேசுவது கூட கிடையாது. சாப்பாடு கூட எடுத்து வை, நானே போட்டுக் கொள்கிறேன் என்று தடுத்து விடுகின்றார். நானும் குழந்தைகளும் என்ன தவறு செய்தோம் எங்களை ஏன் இப்படி தண்டிக்கின்றார். இந்த ஊரில் எங்களுக்கு இவரை தவிர வேறு யார் இருக்கின்றார்கள்.வாழ்க்கையே வெறுத்து விட்டது ஆகவே குழந்தைகளுக்கு பரிட்சை முடிந்தவுடன் ஊருக்கு போய்விடுவோம்.என் படிப்பிற்க்கு ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு பிழைத்துக் கொள்வேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட நான்,உடனே இதற்க்கு போயா கணவனை விட்டு தனியே போய் வாழப் போகின்றாய, நீ கூறியதை பார்த்தால் உன் கணவருக்கு தனிமைத் தேவைபடுகின்றது அவ்வளவு தான். ஏதோ ஒரு காரணத்திர்க்காக அவர் மன உலைச்சலில் இருக்கலாம். ஆகவே கொஞ்ச நாளைக்கு அவரை கண்டுக் கொள்ளாதே, அவர் இஷ்டப்படியே தனிமையில் இருக்கட்டும்.பிறகு எல்லாம் சரியாகி விடும் என்னை நம்பு. குழந்தைகளிடம் கூட பேசுவதில்லை என்றால் அவருக்கு மனதில் ஏதோ பிரச்சனை உள்ளது போல் தெரிகின்றது. என்று விளக்கி கூறியதும், முகத்தில் ஆயிரம் வாட் பல்ப் ஒளி வீசியது. பிறகு அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். மிகவும் சந்தோசத்துடன் என்னிடம் உரையாடினார்கள். ஊருக்கு போகும் முடிவை கைவிட்டுவிட்டதாகவும். கூறினார்கள்.இதைக் கேட்க மிகவும் சந்தோசமாக இருந்தது.பிரிய இருந்த ஒரு அன்பான குடும்பத்தை தடுத்து நிறுத்தியதை நினைத்து பெருமையாகவும் இருந்தது.
ஆகவே இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் ஆண்கள் மனைவியையும் ஒரு பெண் தோழியைப் போல் பாவித்து மனந்திறந்து உரையாடினால் இது போன்ற ஒன்றுமில்லாத பிரச்சனைகளையும், தேவையில்லாத சந்தேகங்களையும் தவிர்த்து விடலாம். இதனால் குழந்தைகளும் பாதிக்கபட மாட்டார்களென்பது தான் என் ஆவலும் எல்லாப் பெண்களின் ஆவலும் என்று கூறி முடிக்கின்றேன் நன்றி.

அன்பு தோழிகளுக்கு வணக்கம்
நீங்கள் சொல்வது மிகவம் சரி .ஆண்கள் பிரட்ச்சணைஐ தல்லி போடுவதால் பாதிக்கப் பட்டவள்.5வருடம் அழுது இப்போதான் என் மனதை திடபடுத்தி கொண்டேன்

டியர் மனோகரி,

நீங்கள் சொல்லுவதுதான் சரி. ஆண்கள்தான் குடும்பப்பிரச்சினைக்கு காரணம்

மேலும் சில பதிவுகள்