க்ரீமி பனீர் குருமா

தேதி: September 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 3
உருளைக்கிழங்கு - ஒன்று
குடைமிளகாய் - பாதி
மல்லித் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி - 10
வெந்தயக் கீரை - ஒரு கைப்பிடி அளவு
பால் - ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
நெய் - சிறிது


 

வெங்காயத்தைத் தோல் நீக்கிவிட்டு, நடுப்பகுதியில் நான்கு பாகமாக வரும்படி வெட்டி வைக்கவும். (துண்டுகளாக்கத் தேவையில்லை). ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கத் துவங்கியதும் அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கொதித்தவுடனேயே வெங்காயத்தை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).
பனீரை நறுக்கி சிறிது நெய் விட்டு வறுத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நசுக்கிச் சேர்த்து மேலும் சில நிமிடம் வதக்கவும்.
பிறகு தூள் வகைகள் சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, மசாலா வாசம் போகக் கிளறவும். அதிலேயே உருளைக்கிழங்கு வெந்துவிடும்.
பிறகு முந்திரியை பாலில் ஊற வைத்து அரைத்துச் சேர்க்கவும். மீதமுள்ள பாலையும் சேர்த்துச் சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும்.
10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, வறுத்த பனீர் மற்றும் க்ரீம் சேர்க்கவும்.
பிறகு வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான க்ரீமி பனீர் குருமா தயார். ரொட்டிக்கு பக்க உணவாக சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டெம்டிங் ரெசிபி.

அந்த‌ பவுல் ல‌ இருக்குற‌ க்ரீமி பனீர் குருமா எனக்கு குடுத்துடுங்க‌ .. நான் இன்னைக்கு லஞ்ச்க்கு சப்பாத்திதான் கொண்டு வந்து இருக்கேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Kuruma chapathiku today engaveetla ungalodathan taste nallayiruku neenga milk nu potuyintheenga nan coconutmilk serthen.neengalum athane pottuyirunthinga thanks vanitha

Allahu akbar

வனி நான் சப்பாத்தி எடுத்துருக்கேன் வரல, அதனால குருமாவோட குடுத்துடுங்க.

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு மிக்க‌ நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு நோ சொல்வோமா?? எடுத்துக்கங்க‌ :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதுக்குள்ள‌ செய்தாச்சா? மிக்க‌ மகிழ்ச்சி :) நன்றி.

உங்க‌ பேரை படிச்சதும் அறுவையில் இருந்த‌ பழைய‌ தோழியின் நினைவு வருது. ம்ம்... பாவம், இப்போ அவங்க‌ வருவதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வீட்டுக்கு வாங்க‌ ரேவ்ஸ்... சப்பாத்தியும் குருமாவும் சுடச்சுட‌ தரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யாசமா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

Hello madam paneer epdi pannuvega nu solluga pls. Last time naan try pannen but gravy seiyum pothu sariya varala.pls help

God is great

http://www.arusuvai.com/tamil/node/20198

Idhula panneer seymurai padathoda irukku. Avanga panneer seydhu piece pannama kaiyaal pisaindhirupaanga. Ninga weight vechu gettiya kidaikira paneerai thundugal potu payanpaduthunga. Avanga koduthirupadhu perfect method.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanku so much :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா