உல்லன் மேட் - பாகம் 1

தேதி: September 8, 2014

5
Average: 4.8 (5 votes)

 

விரும்பிய நிற உல்லன் நூல் - 2 (அ) ஆரஞ்ச் - ஒன்று, பச்சை - ஒன்று
குரோசே ஊசி
கத்தரிக்கோல்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஆரஞ்ச் நிற உல்லன் நூலில் ஒரு முடிச்சுப் போட்டு ஊசியை அந்த முடிச்சினுள் விட்டு 12 சங்கிலிப் பின்னல்கள் (Chain Stitch) பின்னிவிட்டு, ஊசியை முதல் சங்கிலியில் விட்டு இணைக்கவும். (இணைத்ததும் ஒரு வளையம் போல இருக்கும்).
இப்பொழுது 3 சங்கிலிப் பின்னல்கள் பின்னி ஊசியில் நூல் சுற்றவும்.
பிறகு ஊசியை வளையத்தினுள் விட்டு, இரட்டைக் குரோசே பின்னல் (Double Crochet) பின்னவும்.
பின்னல் இறுக்கமாக இல்லாமல் சற்று தளர்வாக இருக்கவேண்டும்.
இதே போல் ஊசியில் நூல் சுற்றி வளையத்தினுள் விட்டு தொடர்ந்து இரட்டைக் குரோசே பின்னல்களைப் பின்னவும். 16 பின்னல்கள் பின்னி முடித்ததும் ஊசியை முதல் பின்னலின் மேலுள்ள சங்கிலியில் விடவும்.
அந்த சங்கிலியை அதற்கு முன் உள்ள சங்கிலியோடு இணைத்துவிட்டு, 3 சங்கிலிப் பின்னல்கள் பின்னவும்.
பிறகு படத்தில் உள்ளவாறு கீழே உள்ள பின்னல்களின் இடைவெளியில் ஊசியை விட்டு 3 இரட்டைக் குரோசே பின்னல்கள் பின்னவும். பிறகு 2 பின்னல்களை விட்டுவிட்டு அதற்கடுத்துள்ள இடைவெளியில் 4 இரட்டைக் குரோசே பின்னல்கள் பின்னவும்.
இதே போல் 2 பின்னல்களை விட்டுவிட்டு அடுத்துள்ள இடைவெளியில் 3 இரட்டைக் குரோசே பின்னல்களும், மீண்டும் 2 பின்னல்களை விட்டுவிட்டு அதற்கடுத்துள்ள இடைவெளியில் 4 இரட்டைக் குரோசே பின்னல்களும் என மாற்றி மாற்றி பின்னிக் கொண்டே வரவும். கடைசி பின்னல் பின்னி முடித்ததும் ஏற்கனவே இணைத்தது போல் ஊசியை முதல் பின்னலின் மேலுள்ள சங்கிலியில் விட்டு இணைக்கவும்.
பிறகு 3 சங்கிலிப் பின்னல்கள் பின்னி, படத்தில் உள்ளவாறு கீழே உள்ள பின்னல்களின் இடைவெளியில் ஊசியை விட்டு 3 இரட்டைக் குரோசே பின்னல்கள் பின்னவும். அடுத்ததாக அம்புக் குறியிட்டுள்ள இடைவெளியில் 3 இரட்டைக் குரோசே பின்னல்களும், அதற்கடுத்ததாக உள்ள 4 பின்னல்களின் இடையில் 4 இரட்டைக் குரோசே பின்னல்களும் பின்னவும். அதற்கடுத்ததாக குறியிட்டுள்ள இடைவெளியில் 3 இரட்டைக் குரோசே பின்னல்களைப் பின்னவும்.
இதே போல் கீழ்பக்கம் 4 பின்னல்களுள்ள இடங்களில், அதற்கு இடையில் ஊசியை விட்டு 4 இரட்டைக் குரோசே பின்னல்களும், மற்ற இடைவெளிகளில் 3 இரட்டைக் குரோசே பின்னல்களும் பின்னி முதல் சங்கிலியோடு இணைத்து முடிக்கவும். அடுத்தடுத்தச் சுற்றுகளும் இதே போல் தான் பின்ன வேண்டும்.
இதே போல் மற்றொரு சுற்று பின்னிவிட்டு நூலை வெட்டிவிடவும். அதனுடன் பச்சை நிற நூலை இணைத்து முடிச்சுப் போட்டு, 3 சங்கிலிப் பின்னல்கள் பின்னிக் கொள்ளவும்.
ஏற்கனவே பின்னியது போல் பச்சை நிறத்தில் 2 சுற்றுகள் பின்னிவிட்டு நூலை நறுக்கிவிடவும்.
பிறகு ஆரஞ்ச் நிற நூலை இணைத்து 2 சுற்றுகள் ஆரஞ்ச் நிறத்திலும், மீண்டும் பச்சை நிறத்தில் 2 சுற்றுகளும் என உங்களுக்குத் தேவையான அளவிற்கு பின்னி முடிச்சுப் போட்டு நூலை வெட்டிவிடவும். (கடைசியாக முடிக்கும் போது ஆரஞ்ச் (முதல் சுற்று நூலின் நிறம்) நிறத்தில் இருக்குமாறு முடிக்கவும்).

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அங்க வரப்ப சுபத்ராட்ட நேர்ல கேட்டுப் போட்டுப் பார்க்கணும் என்று நினைச்சிருந்தேன். ஹ்ம்! :-) நாகை வரப்ப அட்மினுக்குத் தெரியாம மாறுவேஷத்துல வந்தால்தான் இது எல்லாம் சாத்தியம் போல இருக்கு, :-)

‍- இமா க்றிஸ்

(9 வது படத்தில் )3 வது double crochet க்கு அடுத்த இடைவெளியில் 3 crochet poda venduma or antha 3 crochet ன் idaiulum 1 ,1 aga 3 crochet poda venduma?. Muthal murai pati enil, enakku picture il ullathu pola flat aga vara mattaenguthu.box pontru last row mêla elumbi varukirathu.appadi than irukkuma?1 row Start 3 crochet+3 crochet+4 crochet.then 2 nd row 3 cro+ 3 cro+3 crochet + 4 crochet.immurail varuvathu sariya? 9 & 10 pic between il konjam détail pic poda mutiyuma?This looks vert Nice.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

தேங்க்யூ.. இதை பார்த்து நானும் 3 மேட் பின்னிட்டேன்... ஃபர்ஸ்ட் டைம் பின்னனுது பாக்ஸ் மாதிரி ஆகிட்டு.. அப்புறமா பின்னுன ரெண்டும் நல்லா வந்துச்சு...

கலை

சுபத்ரா அழகான கைவேலை, ஒரு சந்தேகம், நீங்கள் இதில் பயன்படுத்தியுள்ள குரோசா ஊசியின் நம்பர் என்ன என்று தெரிவிக்கமுடியுமா?

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

டெல்ஸிபிரபு
8 வது படத்தில் இருப்பது போல தான் அடுத்து பின்னனும். அதுக்கு கீழ் வரிசையில் இருக்கும் பின்னலில் 2 பின்னலுக்கு அடுத்துள்ள இடைவெளியில் 3 பின்னல், அப்புறம் அதே மாதிரி 2 பின்னலுக்கு அடுத்து 4 பின்னல் பின்னனும். ஒரு இடைவெளியில் 3 பின்னல். அப்புறம் 4 பின்னல். அப்படியே தொடர்ந்து முதல் சுற்று பின்னனும். (1, 1 பின்னல் கிடையாது).

டைட்டா பின்னினா பாக்ஸ் மாதிரி ஆகிடும். கொஞ்சம் லூஸாவே பின்னுங்க.. நல்லா வரும்.

முதல் சுற்று 3, 3, 4 பின்னனும். அடுத்து 3, 3, 3 ,4 அதற்கடுத்து 3, 3, 3, 3, 4 பின்னனும். அப்படியே அடுத்தடுத்து பின்னும் போது 3 பின்னல் மட்டும் ஒவ்வொன்றாக கூடுதலாகிட்டே இருக்கும். 4 பின்னல் மேட்டோட 4 கார்னரிலும் வரமாதிரி இருக்கும்.

(எண்ணிக்கை வைச்சு பின்னாம இப்படியும் பின்னலாம். முதல் சுற்று மட்டும் பின்னிவிட்டு, அடுத்து பின்னுறப்போ கார்னரில் 4 பின்னல் உள்ள இடத்தில் மட்டும் அதற்கு இடையில் ஊசியை விட்டு 4 பின்னலும், மற்ற இடைவெளிகளில் 3 பின்னலும் பின்னக் கொண்டே வரவும்). விளக்கம் புரியவில்லையென்றால் கேளுங்கள்..

சிவிஸ்ரீ
இதில் பயன்படுத்தியுள்ள குரோசா ஊசியின் நம்பர் 12.

சுபத்ரா - அறுசுவை டீம்

Nantri akka athanai mutithu vittaen.next than doubt ippo enaku.10 vathu pic ilum mutual row pontru 2 ,2 idaiveli vitu than 3,3,4 and then ... Ippadi pinna venduma akka?.pls siramam paramal ietharku mattum answer koorungalaen.ini ippothaikku disturb panna mattaen.ungal punniyathil ungal peyar solli en veedu muluvathum mate a pinni poda poraen
pls.....( mobile athan thanglish Il type seikiraen .mannikkavum)

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

படத்திலும், விளக்கத்திலும் சிறிது மாற்றம் செய்துள்ளேன். 2 பின்னல்கள் விட்டுப் பின்ன வேண்டாம். அடுத்தடுத்துள்ள இடைவெளியில் தொடந்து பின்ன வேண்டும்.

சுபத்ரா - அறுசுவை டீம்

Madam neenga sonna murai padi than nan seithu parthaen.nnalla vanthuchu.but 5 sides varuthu.unkaluku 4 sides thana vanthu irukku (square shape).fb arusuvai closed groupla post panni irukkaen enna thappu panni irukaen nu konjam solla mutiuma?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!