என்ன செய்வது....

அன்புள்ளம் கொண்டோரே அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் :) _()_ :)

எங்கள் வீட்டு ஷோகேஸில் இருபுறமும் இரண்டு இரண்டு கண்ணாடி துண்டுகள் வீதம் மொத்தம் நான்கு துண்டுகள், அரைவட்டமாக வெட்டப்பட்டு மூலைவாங்கலாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு ஆங்கிலத்தில் கார்னர் பீஸ் என்று கூறுவர்.
அவ்வாறு இருந்த கண்ணாடி துண்டுகளை தொலைக்காட்சி பெட்டி வந்தவுடன் அதற்கு இடைஞ்சலாக இருக்கிறது, என்று அப்பொழுதே கழட்டிவைத்து விட்டோம்.

அந்த அரைவட்ட கண்ணாடி துண்டங்களுக்கு வர்ணம் பூசி, அழகுறச் செய்ய ஆசைப்பட்ட என் மகளுக்கு நானும் அனுமதி(??!!) வழங்க, அதன்படியே அதனை செவ்வனே செய்து முடித்தார்.

மிகவும் அழகாக இருக்கவே, தொலைபேசி தாங்கியும் இது போன்ற அமைப்புடன் இருக்கவே, அதனையும் அது போலவே செய்யுமாறு ஆணை(?!!)இட்டேன்(?!)..
சரி இன்னொரு நாள் செய்து தருகிறேன், என கூறினார்.

இன்னும் அதற்கான நேரம் வரவில்லை, அதனால் வர்ணப்பூச்சின்றி, பொலிவின்றித்தான் காட்சியளிக்கின்றது.

சரி என்னம்மா...சொல்லவாறே.. சொல்லவந்ததை சொல்லிட்டு ஓடிடு.. இதுதானே உங்கள் மனமெங்கும் உலாவரும் கேள்விகள்.

அப்படி அழகாக, மிகவும் கஷ்டப்பட்டு, நேரமெடுத்து, பொறுமையாக செய்த வர்ணக்கலவையிட்ட, கண்ணாடி துண்டுகளை இரண்டுநாட்கள் காயவைத்து, என்னிடம் ஒப்படைத்தார்.
பத்திரமாக வைய்யுங்கள், இதெல்லாம் நமக்கு சொல்லணுமா என்ன?
நானும் ரொம்ப ரொம்ப பத்திரமாக வைத்தேன்.

ஆனால் தெரியாமல் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததின் விளைவு.. இரண்டு துண்டுகளும் 'மாற்றான்' பட சூர்யாவைப்போல் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டன.
எவ்வளவு பிரயத்தனப்பட்டும் பிரிக்கமுடில.
எப்படி பிரித்தெடுப்பது...

நிச்சயம் பெயிண்டிங் உரிஞ்சி வராம, எடுக்க முடியாது.. ஆனா கண்ணாடிகளை ஒரு துளிகூட எடுக்கவே முடில, ஃபெவிக்கால் போட்டு ஒட்டியது போன்று, மிகவும் கடினமாக ஒட்டிக்கொண்டுள்ளது. என்ன செய்வது....
தயவு செய்து உதவுங்கள் தோழிகளே..

பின்குறிப்பு:
பிரித்தெடுத்த பிறகு, நீரை உலரச்செய்தேன். ஆங்காங்கு புள்ளிகள் போன்று இருப்பவற்றில் ஓரிரண்டு தண்ணீரில் உறிந்து வந்துவிட்டது.
ஏனைய வண்ணங்கள் அதே போன்று மாறிவிட்டது. ஆனால் சிறு சுருக்கங்கள் காணப்படுகின்றது.

மீண்டும் ஒரு வேண்டுகோளுடன் கூடிய பின்குறிப்பு :
இதோ இந்தபடத்தில் இருக்கும் வர்ணக்கலவைதான் வாங்கினேன். கலவைகளை தரம் பிரித்து அறியும் யுக்திகள் பற்றி பதிவு போட்டால், மேற்கண்ட விசயங்களில் என்னைப்போன்ற அரிச்சுவடி அறியாதவர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது போடுவீர்களா தோழிகளே!!

பொறுமையுடன் படித்து, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் _()_ :)

Average: 3 (1 vote)

Comments

:'(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரெண்டு நாள் காய வச்சதா இருந்தாலும், ஒண்ணு மேலே ஒண்ணு அடுக்கினதால, ரூம் டெம்பரேச்சர்லேயே அடி கண்ணாடியில உள்ள பெயிண்டிங் லேசா உருகி இருக்கலாம். க்ளாஸ் பெயிண்டிங் எல்லாம் glue mixed colorsஆ தான் இருக்கும். அதுக்காகத்தான் க்ளாஸ்ஸை ஒண்ணு மேலே ஒண்ணு வைக்கிறப்ப நடுவில எதாவது ஒரு பேப்பர் வச்சு அடுக்கணும்னு பெரியவங்க சொல்றாங்க. :-)

பெயிண்டட் க்ளாஸ்ன்னா ப்ரவுன் ஷீட், பட்டர் ஷீட் மாதிரியான வழுவழு ஷீட்ஸ் நடுவில வைக்கணும். சாதா க்ளாஸ்னா வெறும் நியூஸ்பேப்பரே போதும். (எப்புடி..! டிப்ஸ் கொடுத்துட்டோம்ல..!! :-))

சரி, ஆனது ஆயி போச்சு.. கொஞ்சம் மண்ணெண்ணெய்யை எடுத்து ஓரங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா தடவி பாருங்க. இலேசா இடைவெளி வரலாம். படத்தைப் பார்க்கிறப்ப ஓரங்கள்ல பெயிண்ட் இல்லேன்னு தெரியுது. மெல்லிசான ப்ளேடு உள்ள கத்தியை வச்சு ஓரங்களை லேசா நெம்பிப் பாருங்க. கண்ணாடியோட வளைவுப் பகுதியில ட்ரை பண்ணாம ஸ்ட்ரைட்டா உள்ள பக்கத்துல ட்ரை பண்ணுங்க. ஒருவேளை லேசா உடைஞ்சாலும் ஷோகேஸ்ல ஃபிட் பண்றப்ப அது உள்பக்கம் போயிடும். :-)

மண்ணெண்ணெய் இல்லேன்னா தின்னர்ல ஊறப் போட்டு எடுக்க ட்ரை பண்ணலாம். அடியில உள்ள க்ளாஸ் மட்டும் நனையற அளவுக்கு ஊறப் போட்டா, மேல் க்ளாஸ்ல இருக்கிற பெயிண்டிங்கை காப்பாத்த சான்ஸஸ் இருக்கு. பெயிண்டிங்க் போனாப் பரவாயில்லைன்னு நினைச்சா, க்ளாஸ்ஸை அப்படியே தூக்கி கொதிக்கிற வெந்நீர்ல போட்டு ஊற விடுங்க.

இது எதுலயுமே சரி ஆகலேன்னா ஜி.ஹெச்சுக்கு கொண்டு போயிடுங்க. :-)

ஓ...அங்கே இதுக்கு கூட‌ ட்ரீட்மெண்ட் உண்டா?? பரவாயில்லியே...எந்த‌ ஊரில்?

லேசான‌ வென்னீரை மேலே ஊற்றிக் கொண்டே இருங்கள். கட்டாயம் சூடு தாங்காமல் வந்துவிடும்.
பெயிண்டிங் உரிந்தால் சரி பண்ணிடலாம் அருள்

வனியக்காவே ஐடியா சொல்லாமல் புன்னகைத்தால் நானென்ன‌ சொல்ல‌?

//ஜி.ஹெச் ? அட்மின் பன்ச்? (குசும்பு..)

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஆஹா!! என்ன‌ பண்ணாலும் குட்டி பண்ண‌ வேலை போச்சேன்னு ஃபீல் பண்ணி ஒரு சோக‌ ஸ்மைலி போட்டா... புன்னகையாம்ல‌!!! 3:) கொம்பு பொம்மை ஜெயாக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சொன்ன ஜி ஹெச், Glass house ங்க.. பக்கத்துல எதாவது க்ளாஸ் ஹவுஸ் கடை இருக்கும். அங்க எடுத்துப் போனா எதாவது பண்ணி பிரிச்சுக் கொடுத்துடுவாங்க. :-)

எல்லாருக்கும் தெரிஞ்ச‌ ஜி.ஹெச் நா நிகி அக்கா சொன்னது தான் ;) ஆனா ஜி.ஹெச்க்கும் இப்படிலாம் விளக்கம் குடுக்க‌ உங்களால‌ மட்டும்தான் அண்ணா முடியும்.;)

அருள் அக்கா பக்கத்துல‌ எப்படி நு போய் விசாரிப்பாங்க‌ ஜி.ஹெச் எங்க‌ இருக்குன்னா இல்ல‌ Glass houseனாஅப்படியே Glass house நு சொன்னா அங்க‌ இருக்குறவங்களுக்கெல்லாம் தெரியுமா ;)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பச்சதண்ணில போட்டேன் (தேங்ஸ் சத்யப்ரியா), வரலேனுட்டு, கொஞ்சநேரம் கவலையா இருந்தேன்.
பிறகு சமையல் வேலை முடிச்சிட்டு அறுசுவை வந்து பார்த்தேன்.
அதுக்கு முன்னாடியே பலமுறை பார்த்தேன்,
வனி உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்த்தேன், ஆனா சோகமுகம் காட்டி இருந்தீங்க. கொஞ்சம் இல்ல, நிறைய வருத்தம். இருக்காதா பின்ன கரப்பான் பூச்சிக்கு மருந்தெல்லாம் சொன்னேன்:)))))). (அதுக்கு பதில் மருவாதி தெரிவிக்க வேண்டாமா?..... உங்கூட்டு கலயாணத்தில 100 ரூவா மொய் வெச்சேன்...நீங்கவெக்கவே இல்ல......:)))))))

தண்ணில போட்டதால ஊறிப்போய் இருந்துச்சு, அப்பறம் கத்தியால ஓரத்தில லேசா எடுக்கவும், வந்துடுச்சு. பெயிண்டுக்கும் அதிக சேதாரமில்லை. (நன்றி அட்மின் அண்ணா).

பிரிச்சப்பதான் தெரியுது, ஒரு பக்க பெயிண்டிங் பகுதி உள்ள வரமாதிரி அடுக்கிட்டேன். பெயிண்டிங் பகுதி இரு புறமும் வெளிப்பக்கமா இருக்கும் படி வைக்காததின் விளைவு.

மற்றும் அட்மின் அண்ணா கூறியது போல பேப்பர் மற்றும் இதர வகையாறாக்களை வைக்காததுமே இது போன்று ஆனதற்கு காரணம் என்பதை அறிந்து கொண்டேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிகி வரலேனா அடுத்த கட்டபரிசோதனையா வெந்நீர் ட்ரீட்மெண்ட்தானு நினைச்சேன், அதுக்குள்ள சரியாகிடுச்சு மிக்க நன்றி :) இப்ப கொஞ்சூண்டு பெயிண்ட் உரிஞ்சு வந்திருக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயா, அதானே நல்லா கேளுங்க, ஆனா அது புன்னகையல்ல ஜெயா, வீணாகிடுச்சேனு சொல்லாம சொல்லி இருக்காங்க..
ஜிஹெச்.. நானும் முதல்ல நிகிலா மாதிரிதான் நினைச்சேன் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி ஜெயாவ போட்டோல பார்த்திருக்கேன், அழகா இருப்பாங்க. கொம்பு...அழகாத்தான் இருக்கும்.:))
//ஆஹா!! என்ன‌ பண்ணாலும் குட்டி பண்ண‌ வேலை போச்சேன்னு ஃபீல் பண்ணி// திட்டுவீங்களோனு பயந்துட்டே இருந்தேன்..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி எவ்வளவு விவரமா சொல்லி இருக்கீங்க :) மிக்க நன்றி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அந்த‌ கரப்பானுக்கே நான் உங்ககிட்ட‌ தான் ஐடியா கேட்டேன்... இந்த‌ கண்ணாடிக்கு நான் எப்படி ஐடியா சொல்ல‌??? ;( வனி பாவம். மொய் வைக்கிற‌ அளவுக்கு சரக்கில்ல‌. எனக்கு என்னவோ எப்படி எடுத்தாலும் பெயின்ட் போயிருமேன்னு தான் கவலையா போச்சு... குட்டி ஆசையா பண்ணிருப்பாளேன்னு அவ‌ யோசனையா போச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் அண்ணா, இந்த பதில் நிச்சயம் பலபேர்க்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொறுமை எடுத்து பலவேலைகளை செய்து, அதனை தகுந்த முறையில் பாதுக்காப்பது எப்படினு தெரியாமலே, நிறைய வேலைகள் வீணாகிவிடுகின்றது.

பெரியவா எல்லாம் பொறுமையுடன் வந்து பதில் சொல்லியமைக்கு எனது நன்றிகள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பெயிண்ட், அதிலிருக்கும் டாட்ஸ் மட்டும் வெங்காய தோல் போல் உரிந்து வந்தது. ஆனால் கொஞ்சநேரம் எடுத்துப்பார்த்தால் தான் தெரியும், எல்லாமே வந்துடுமோனு... இப்ப ஃபேன் போட்டு காயவிட்டிருக்கேன்..
//குட்டி ஆசையா பண்ணிருப்பாளேன்னு அவ‌ யோசனையா போச்சு.// புரிஞ்சுது வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க பொண்ணு அழகா பெய்ன்ட் பண்ணி இருக்காங்க அருள்.

உங்களுக்குத் தீர்வு கிடைத்ததன் பின்னாடிதான் போஸ்ட்டே படிக்கிறேன். இனி ஐடியால்லாம் சொல்லத் தேவையில்லை.

வேறு யாருக்காவது உதவலாம் என்னும் எண்ணத்தில் இது... தண்ணில ஊறினதும் பிரிஞ்சு வந்து இருக்கு என்றால் நீங்க glass பெய்ண்ட் யூஸ் பண்ணல என்று தோணுது. இந்த மாதிரி வேலைகளுக்கு தரமான பெய்ண்ட் பயன்படுத்துங்க. சாதாரண ஆயில் பெய்ண்ட், ஆக்ரிலிக் எல்லாம் போதாது. எத்தனை நேரம் செலவளிச்சு இருப்பாங்க உங்க பொண்ணு! இப்போ அவங்க பிரயாசை வீண் இல்லையா! இந்த விபத்து நடந்திராவிட்டாலும், எப்போதாவது சுத்தம் செய்ய முனையும் போது உரிந்து போயிருக்கும்.

பெய்ன்ட் டப்பாவில் curing பற்றியும் சுத்தம் செய்வது பற்றியும் குறிப்பு கொடுத்திருப்பார்கள். அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். மறக்காமல் எங்காவது குறித்து வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

கண்ணாடிப் பொருட்கள், பீங்கான் பாத்திரங்கள் செட்டாக பெய்ண்ட் செய்து பேக் செய்யும் போது, நேரத்தையும் மின்சாரத்தையும் மிச்சப் படுத்த வர்ணம் தீட்டாத இடத்தில் இடையிடையே இரண்டிரண்டு நாணயங்கள் வைத்து பாத்திரங்களை அடுக்குவார்கள்.

ஸ்டோர் செய்வதற்கு... நாணயத்திற்குப் பதில் non slip silicon mat அல்லது non slip rubber mat வாங்கி சிறிய வட்டங்களாக வெட்டி, மேலே சொன்னது போல வர்ணம் தீட்டாத இடத்தில் மட்டும் வைத்து அடுக்க வேண்டும். நழுவிப் போவது, கீறல் விழுவது, தேய்மானம் எல்லாமே குறைவாக இருக்கும். Non Stick பாத்திரங்களை அடுக்கும் போதும் இப்படி அடுக்கலாம்.

பெய்ன்ட் எத்தனை கோட்டிங் கொடுத்திருக்கு என்கிறதைப் பொறுத்தும் இப்படி ஆகி இருக்கலாம். ரொம்ப திக்கா வைச்சிருந்தா மேலே மட்டும் காய்ந்து உள்ளே க்ளூ டெக்க்ஷர்ல இருந்து இருக்கும். வெய்ட் ஏற பச்சக் ஆகிரும். :-)

சுடு தண்ணீர், கத்தி.. அபாயம். நான் ட்ரை பண்ண மாட்டேன். தின்னர்... சுவாசிக்காமல் இருப்பது நல்லது. ஃபேஸ்க் மாஸ்க் போடலாம்.

//பெயிண்டிங் பகுதி இரு புறமும் வெளிப்பக்கமா இருக்கும் படி வைக்காததின் விளைவு.// அப்படி வைச்சிருந்தாலும் கீழே உள்ள கண்ணாடி, அது நேரடித் தொடர்பிலிருக்கும் மேற்பரப்போடு ஒட்டியிருக்கக் கூடும். இடைல காற்றோட்டம் இருக்கிற மாதிரி வைக்கிறதுதான் நல்லது அருள்.

‍- இமா க்றிஸ்

இமா, //நீங்க glass பெய்ண்ட் யூஸ் பண்ணல என்று தோணுது// கடைல கிளாஸ் பெயிண்ட் வேணும்னு மட்டுமே கேட்டு வாங்கினேன். பிராண்ட் பெயர் இதெல்லாம் அப்ப தெரில எனக்கு :( (இப்பவும் என்ன ப்ராண்ட் நல்லா இருக்கும்னு தெரில:( ) ஆனா அது கிளாஸ் பெயிண்டேதான், கிளாஸ் கலர்ஸ், வாட்டர் பேஸ்டு என்று இருக்கு.

//எத்தனை நேரம் செலவளிச்சு இருப்பாங்க உங்க பொண்ணு! இப்போ அவங்க பிரயாசை வீண் இல்லையா!// ம் :(

இமா, நிஜமாவே இந்த பதிவு போடும்போதும் ஒட்டிப்போன கண்ணாடிகளை பார்த்த போதும் மனக்கண்ணில் உங்களோட கர்ஜனை(கர்ர்) கேட்டுச்சு.
அடுத்தமுறை மிக கவனமா இருப்பேன்.

நிறைய விஷயங்களை தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி தோழி :)

//உங்க பொண்ணு அழகா பெய்ன்ட் பண்ணி இருக்காங்க அருள்.// இன்னிக்கு மாலை பள்ளிவிட்டு வந்த உடனே இந்த பதிவினை காமிக்க போறேன். நன்றிங்க இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//கிளாஸ் பெயிண்ட் வேணும்னு மட்டுமே கேட்டு// நான் தமிழ்ல போடல, கவனிச்சு இருப்பீங்க. க்ளாஸ்னா gloss என்கிற மாதிரியும் கேட்கும். :-) அதனால் வாயால கேட்டாலும், காதால கேட்டாலும் படிச்சும் பார்க்கணும்.

இது போல பெரிய வேலைகளுக்கு க்ராஃப்ட் க்ளாஸ் பெய்ன்ட் ஆகாது.

//அது கிளாஸ் பெயிண்டேதான், // அப்படின்னா க்யூரிங் டைம் கவனிங்க. டப்பால சொன்னதை விட திக்னஸ் & க்ளைமேட் அலவன்ஸ் என்று அரை நாள் கூடவே காய விடலாம். மேல ஃபினிஷ் கோட் என்று ஏதாவது பயன்படுத்தச் சொல்லி இருந்தாங்களா?

‍- இமா க்றிஸ்

நான் அக்கான்னு கூப்பிட்டா நீங்களும் அக்கான்னு தான் என்னை சொல்லுவேன்னு சொன்னீங்க‌ ஆனா கூப்பிடல‌:)))

அருள் எனக்கு ஒரே கவலையா போச்சு, அய்யோ இப்புட்டு வேலை பார்த்து வீனாயிட்டோன்னு, பரவாயில்லை அதிக‌ சேதாரம் இல்லாம பிரிச்சுட்டீங்க‌, பெயின்டிங் அழகா இருக்கு,உங்க‌ பொண்ணுகிட்ட‌ சொல்லிடுங்க‌,

இமா மற்றும் அண்ணா சொன்னா டீப்ஸ் நானும் நோட் பண்ணிக்கிறேன்,:)

இமா இந்த‌ பெயின்டிங் தொடவே இது தான் பயம், கடைல‌ இருக்க‌ பேரெல்லாம் படிச்சே நான் நிறைய‌ குழப்பத்துல‌ இருக்கேன்:) அதுல‌ அது காயர‌ வரைக்கும்,பக்குவம் பார்க்கறது இங்க‌ கஷ்டம்:(( அத‌ பத்தி அடிப்படை அறிவாது வேனும்ன்னு தோனுது:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா,
//அதனால் வாயால கேட்டாலும், காதால கேட்டாலும் படிச்சும் பார்க்கணும்.// படிச்சு பார்த்தேன், ஆனா பிராண்ட்ல கவனம் செலுத்தல, கெடுதி இருக்கா, இல்லியானு மட்டும் பார்த்தேன்.

உங்களுக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கேன், நேரம் இருக்கும் பொழுது பாருங்கள் இமா.
அன்புடன் பதில்கூறியமைக்கு நன்றிகள் பல:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//பெயின்டிங் அழகா இருக்கு,உங்க‌ பொண்ணுகிட்ட‌ சொல்லிடுங்க‌,// இங்கு வந்த அனைத்து பின்னூட்டங்களையும் காமிச்சுட்டேன். மிகவும் சந்தோஷம்+நன்றி :)

ஆமாம் ரேணு, இதில் நிறைய நிறைய நான் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு.
//அத‌ பத்தி அடிப்படை அறிவாது வேனும்ன்னு தோனுது:)// இதை நீங்க சொன்னா நான் நம்பமாட்டேன்.
உங்களோட கிராஃப்ட் ஒர்க் சான்ஸே இல்ல, பொறுமைசாலி ரேணு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க பொண்ணு அழகாசெய்து இருக்காங்க. ஜி.ஹெச்க்கு போகமயே காப்பாத்தியாச்சு ;)

Be simple be sample

//நேரம் இருக்கும் பொழுது பாருங்கள்// பார்த்தேன். கைல நாலைஞ்சு வேலையை வைச்சு ஜகிள் பண்ணிட்டு இருக்கிறேன் இப்போ. அவசரம் இல்லைல்ல! கொஞ்சம் மெதுவாவே பதில் சொல்றேனே.

மறக்காம செல்வி விடுமுறை முடிஞ்சு வந்ததும் அவங்கள்ட்ட அட்வைஸ் கேளுங்க. பெரிய சைஸ் க்ளாஸ் பெய்ன்டிங்ல அவங்க எக்ஸ்பர்ட். வீட்டுல பெருசு பெருசா அழகான பெய்ன்டிங்ஸ் போட்டு வைச்சிருந்தாங்க.

‍- இமா க்றிஸ்

அன்பு அருள்,

அடேங்கப்பா, எத்தனை தகவல்கள்!

பின்னூட்டங்களிலும் எல்லாரும் கலக்கியிருக்காங்க‌.

எனக்கு பாத்து ரசிக்க‌ மட்டும்தான் தெரியும் அருள், அதனால் ... எஸ்கேப்!

உங்க‌ பொண்ணுக்கு எங்களோட‌ பாராட்டுக்களை மறக்காம‌ சொல்லிடுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி ரேவ்ஸ் :)))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//அவசரம் இல்லைல்ல! கொஞ்சம் மெதுவாவே பதில் சொல்றேனே// இல்லவே இல்லை, வேலை முடிஞ்சு வந்து மெதுவே சொல்லுங்கள் இமா :).
//மறக்காம செல்வி விடுமுறை முடிஞ்சு வந்ததும் அவங்கள்ட்ட அட்வைஸ் கேளுங்க.// நிச்சயம் செல்விக்காட்ட கேட்டுக்கிறேன். இன்னும் புக் செல்ஃப் கண்ணாடிலாம் இருக்கு. அதுக்குலாம் உதவியா இருக்கும் என நினைக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு சீதாமேடம்,
//அடேங்கப்பா, எத்தனை தகவல்கள்! // ஆமாம், எந்த சந்தேகம்னாலும் தெரிந்த விசயங்களை நன்கு தெரிவிக்கும் கலையை அறுசுவையில்தான் கத்துக்கணும்.
//எனக்கு பாத்து ரசிக்க‌ மட்டும்தான் தெரியும் அருள், அதனால் ... எஸ்கேப்!// நானும் உங்களோட கேட்டகிரிதான்.
என்ன கொஞ்சம் எடுபிடி வேலை செய்து கொடுப்பேன், அதையும் சரிவர செய்யலேங்கிறதை இப்ப உலகமே அறிஞ்சிடுச்சு :)))

நிச்சயம் உங்கள் அனைவரின் பாராட்டுதல்களையும் தெரிவித்துவிடுகிறேன், என் மனமார்ந்த நன்றிகள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.