கீரை பொரித்த கூட்டு

தேதி: September 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கீரை (ஏதேனும் ஒரு வகை) - ஒரு கட்டு
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6 (அ) 7
மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 (அ) 2
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாசிப்பருப்பைக் குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, தோலுரித்த சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அத்துடன் தேங்காய்ப் பூவையும் போட்டுக் கிளறவும்.
வறுத்து அரைத்தவற்றுடன், வதக்கியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கீரையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வேக வைக்கவும்.
வேக வைத்த கீரையுடன் வெந்த பாசிப்பருப்பு மற்றும் அரைத்த கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி வைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துச் சேர்க்கவும். சுவையான கீரை பொரித்த கூட்டு தயார். இதை சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும், சுடு சாதத்தில் இந்தக் கூட்டு சேர்த்து, சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கீரை பொரித்த கூட்டு ஹெல்தி அன்ட் சூப்பர் டிஷ் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Arumaiyana keerai poritha kootu kandipa yammyayirukumnu parkumpothe thonuthu thanksma

Allahu akbar

அம்மா எங்க‌ வீட்ல‌ தினம் கீரை செய்வோம்.

ஆனால் இது மாறி வித்யாசமா செய்தது இல்லை.

நாளைக்கு இது மாறியே செய்து பார்க்கிறேன். வித்யாசமா இருக்கு.

ரொம்ப‌ டேஸ்டாவும் இருக்கும் போல‌.

எல்லாம் சில‌ காலம்.....

பார்த்ததும் வெந்தய கீரையை போட்டு செய்துவிட்டென்..யம்மியா இருந்தது..குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.

சுவையான குறிப்புக்கு நன்றி..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இதுபோல செய்தது இல்லை. நல்லாருக்கு செய்துபார்க்கிறேன்

Be simple be sample

இன்றைக்கு சமையல் இதுவே,,,,,

மிகுந்த சுவை,,,,

நன்றி

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

கீரை பொரித்த கூட்டு வித்யாசமா இருக்கு

அன்பு கனிமொழி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஹாஜ நிஸா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலநாயகி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ராஜி,

செய்து பாத்தீங்களா, ரொம்ப‌ மகிழ்ச்சி.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு திவ்யா,

செய்து பாத்தீங்களா, ரொம்ப‌ மகிழ்ச்சி.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நஸ்ரின் கனி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீத்தாம்மா இன்று உங்க கீரை பொரித்த கூட்டு செய்தேன் நீங்க சொன்னதுபோல் சாதத்தில் நெய் பிசைந்து சாப்பிட ரொம்ப நல்ல இருந்தது என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருக்கு நன்றி

அன்பு நஸரீன் கனி,

செய்து பாத்தீங்களா, மிகவும் சந்தோஷம். மிளகு, பருப்பு எல்லாம் வறுத்து அரைத்து சேர்க்கறதால‌, குழம்பு போல‌ ருசியா இருக்கும்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

Hai Nan arusuvaiku puthithu.madam patuppu keerai kootu seithen.its came very well.
En husband virumpi saptanga.thank u so much for the
Recipe.