மேத்தி பனீர்

தேதி: September 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
சாம்பார் பொடி / மிளகாய் + தனியா பொடி - ஒன்றரை தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - தேவைக்கு
வெந்தயக் கீரை - ஒரு கைப்பிடி அளவு
ஊற வைக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி


 

ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் பனீரைப் போட்டுப் பிரட்டி 1 - 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஒரு வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாகவும், மற்றொரு வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டைத் தட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி எடுத்து ஆறவிட்டு, அத்துடன் ஒரு தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து பிரட்டவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, ஊற வைத்த பனீரை லேசாக வறுத்து எடுக்கவும்.
வறுத்த பனீரை வெங்காயக் கலவையில் சேர்த்து, வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி சேர்த்து, 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்துப் பிரட்டி இறக்கவும்.
சுவையான மேத்தி பனீர் தயார். ரொட்டியுடன் பரிமாறுவதற்கு ஏற்ற ஜோடி.

ஃப்ரெஷ் வெந்தயக் கீரைக்கு பதிலாக ட்ரை மேத்தி இலைகளை கைகளால் லேசாக பொடித்தும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்மி ரெசிபி லவ் இட் கண்டிப்பா ட்ரை பண்ணுவேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சிம்பிளா சூப்பரா இருக்கு. ஈஸியா தான் இருக்கு. செய்து பார்க்கிறேன்.

இப்போ வனி ஹோட்டல்ல‌ பன்னீர் ரெசிபி ஓடுதா?

எல்லாம் சில‌ காலம்.....

ஆஹா .இனி பனிர் ரெசிபிகள் தொடருமோ. சிம்பிளீ சூப்பர் வனி

Be simple be sample

மேத்தி பனீர் சூபெர்க்கா பார்க்கும் போதே சாப்பிடனும் தோணுது ஹஜுரி மேத்தி என்பது ட்ரை வெந்தயக் கீரையா பொடியா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? மிக்க நன்றி :) பனீர் இரண்டே இரண்டு ரெசிபி தானே அனுப்பினேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பனீர் ரெசிபி எல்லாம் அதிகம் பண்றதில்லை ரேவ்ஸ்... இவர் விரும்ப மாட்டார் அதிகம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) kasuri methi பயன்படுத்தலாம். உலர்ந்த கீரை தான், பொடி இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா