செட்டிநாட்டு பெப்பர் சிக்கன்

தேதி: September 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
க்ரஷ்டு பெப்பர் - ஒன்றரை மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


 

சிக்கனைச் சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடுகு, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக, மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், ஒரு மேசைக்கரண்டி அளவு க்ரஷ்டு பெப்பர் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை சுருள வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தனியாத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனைச் சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் ஊற்றாமல் 20 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வேகவிடவும். கடைசியாக மீதமுள்ள க்ரஷ்டு பெப்பரைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான செட்டிநாட்டு பெப்பர் சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Parthale sapidalamnu iruku superdish koduththathuku thanks

Allahu akbar

Looks yummy musi :)

Kalai

Super dish

செட்டிநாட்டு பெப்பர் சிக்கன் செம‌ டெம்ப்டிக் நா செய்யும் போது காரம் மட்டும் கம்மி பண்ணிப்பேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ்! யம்மி. கலக்கலா இருக்கு. வாசனை இங்க‌ வரைக்கும் வருது. சூப்பர். நாக்குல‌ எச்சில் ஊருது.

எல்லாம் சில‌ காலம்.....

குறிப்பினை உடனே வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

முதல் பதிவிர்க்கு மிக்க‌ நன்றி;கலை.

வாழ்த்திர்க்கு ரொம்ப‌ நன்றி;ஷேக் ந‌சிரா.

காரம் குறைத்தும் செய்யலாம்.நன்றி கனி.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப‌ நன்றி;பாலநாயகி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.