பஜ்ஜி

பஜ்ஜி செய்யும் அவாவில் கறி மிளகாயை கூடுதலாக வாங்கிவிட்டேன். கடலை மாவில் தோய்த்துப் பொரித்தேன். எல்லாம் உடைந்துதான் பொரித்தேன். உடையாமல் எப்படி பஜ்ஜி செய்வது?

பஜ்ஜி உடையாமல் வருவதற்க்கு 1கப் கடலை மாவு,ஒரு பிடி அரிசி மாவு,1மேஜை கரண்டி மைதா மாவு விகிதம் 1சிட்டிகை சோடாப்பு சேர்த்து செய்தால் நன்றாக வரும்,முயற்சியுங்கள்.வாழ்த்துக்கள்!

நன்றி Rasia

நான் மிளகாயின் ஒரு ஓரத்தில் கத்தியால் கீறி அதற்குள் கலவையை வைத்து பின் தோய்த்துப் பொரித்தேன்.
மிளகாயை எவ்வாறு கீறினால் நன்று?

மிளகாய்களை கீராமல் முழுதாக வைத்து அதில் முள் கரன்டியால் ஆங்காங்கே குட்றி உப்பு நீரில் ஊர வைத்து செய்தால் உள்ளே உப்பின் சுவை ஏறி நன்றாக வரும்

நன்றி Rasia உடன் அறியத்தந்தமைக்கு

மேலும் சில பதிவுகள்