ஈஸி குழிப்பணியாரம்

தேதி: September 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

இட்லி மாவு - 2 கப்
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று
நறுக்கிய வெங்காயம் - சிறிது
எண்ணெய், உப்பு


 

இட்லி மாவில் உப்பு சேர்த்து, திக்காக கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும்.
தாளித்தவற்றை மாவுக் கரைசலில் ஊற்றிக் கலக்கவும்.
பிறகு குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் தெளித்து, மாவை ஊற்றி சிறு தீயில் வைத்து வேகவிடவும்.
6 நிமிடங்கள் கழித்து பணியாரத்தைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சூடான குழிப்பணியாரத்தை காரச் சட்னியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈஸி குழிப்பணியாரம் என் ஃபேவரிட் டிஷ் அம்மா அடிக்கடி இப்படி தான் செய்வாங்க‌ :) நல்ல‌ குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பினை உடனே வெளியிட்ட‌ டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்கள் அன்பான‌ முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இதே மாதிரிதான் நானும் செய்வேன் முஸி. படங்கள் அருமை, பிரசன்டேசன் சூப்பர்

Nalla seithu irukinga , idly mavil kulipaniyaram different a iruku

வழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி,வாணி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ‌ அலைக்கும் சலாம்,பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி மா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.