அன்னைக்கு மேல் செல்லமடி

அன்னைக்கு மேல் செல்லம். அம்மாவுக்கு மேல் யார் இருக்க முடியும்? ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலேயும் 'அம்மா'! இந்த சொல், வெறும் சொல்லாக இல்லாமல் வாழ்க்கையின் பொருளாகவும் இருந்திருக்கும். இனி மேலும் இருக்கும். அப்படி என் வாழ்வில் என்னுடைய அம்மாவாகவே இருக்கும் என் அப்பாயி(தந்தைவழிப்பாட்டி) - பாலு @ பாலக்கிருஷ்ணம்மாள் தான் எனக்கு அன்னைக்கும் மேல் செல்லம்.

என் நினைவு தெரிந்த நாள் முதல் நான் சாப்பிடும் உணவு முதலாக எல்லாவற்றிலும் முதல் அக்கறை என் அப்பாயிக்குத்தான். சாப்பிட்டேனா, பால் குடித்தேனா என எல்லாவற்றையும் கவனிப்பவர். ஒரு முறை ஏதோ கோபம். அதை நான் உணவில் காட்டி நாள் முழுவதும் சாப்பிடவில்லை.எனக்காக அப்பாயியும் அன்று சாப்பிடாமல் இருந்துவிட்டார். அந்த அன்பிற்காகவே என் கோபம் மறைந்தது அன்று.

என்னைத்திட்டி யாரெனும் ஏதேனும் சொன்னால் அவருக்குப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கு ஏதேனும் வேலை சொன்னால் அதை எனக்கு முன்பு சென்று அவரே செய்துவிடுவார். இதனால் அவர் என்னை எதுவும் தெரியாமல் வளத்ததாய் எண்ண வேண்டாம். அப்பாயியின் ஒவ்வொரு வேலை நுணுக்கமும் எனக்கும் தெரியும். பதவிசான வேலைத்திறன் அவர் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் காண முடியும்.

இன்று நான் அப்பாயியின் பிரதிபலிப்பாகவே உணர்கிறேன். எனக்கு நல்ல அன்பும் இவரிடம்தான் உணர முடிந்தது.
அன்பு!
உலகில் பணமில்லாமல்,
பொறாமையில்லாமல்,
எதையும் எதிர்ப்பார்க்காமல்,
கொடுக்கவும், பெறவும் முடிந்தது.
அதை ஏன்
மறைத்து வைக்க வேண்டும்.
மனதுள் மட்டும் இருந்தால்
யாருக்குப் புரியும்.
நாமெல்லாம் வெறும் மனிதர்கள் தானே!

5
Average: 5 (5 votes)

Comments

Super aarambammam :) vaazthukkal

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையாகப் பொழிய ஆரம்பித்திருக்கும் அனந்த மழையை அன்போடு வரவேற்கிறேன். :-) உங்கள் வலைப்பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள் அனந்தகௌரி.

‍- இமா க்றிஸ்

100% true

be happy

ரொம்ப‌ ரொம்ப‌ அருமையான‌ பதிவு :) என்னோட‌ ஆல் டை ஃபேவரிட் பாட்டு பிக்சர் தூள் :)

// என் நினைவு தெரிந்த நாள் முதல் நான் சாப்பிடும் உணவு முதலாக எல்லாவற்றிலும் முதல் அக்கறை என் அப்பாயிக்குத்தான். சாப்பிட்டேனா, பால் குடித்தேனா என எல்லாவற்றையும் கவனிப்பவர். //

இதே நிலை தான் என் வீட்டிலும் இப்போதும் அப்படித்தான் :)

பல‌ நேரங்கள் ல‌ எங்க‌ ரெண்டு பேருக்கும் பெரிய‌ சண்டை வரும், நான் சின்ன‌ பசங்க‌ கிட்ட‌ சண்டை போடுற‌ மாதிரி அவங்க கிட்ட‌ சண்டை போடுவேன்.

ஆனா பாவம் அம்மா , நான் சண்டை போட்டுடேனு அவங்க‌ சாப்பிடாம‌ இருப்பாங்க‌ :) அவங்க‌ அன்பை பத்தி சொல்ல‌ வார்த்தையே இல்லை எல்லையும் இல்லை :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல பதிவுடன் ரொம்ப நல்ல ஆரம்பம்..
வாழ்த்துக்கள் ங்க.

நட்புடன்
குணா

\\ மனதுள் மட்டும் இருந்தால்
யாருக்குப் புரியும் \\

உண்மையான‌ வார்த்தைகள்

HI

நல்ல‌ பதிவு. எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லயே என்று ஏக்கமாக‌ இருக்கு. : ( நீங்க‌ லக்கி. நான் பாட்டியை ரொம்ப‌ விசாரித்ததாக‌ சொல்லுங்கள். : )
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

வனிதா மேடம், இமா மேடம், சுபா மேடம்,குணா சார் , ஜெயா மேடம், பிரபு, கனிமொழி, தயூ எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
உங்கள் அனைவருடைய இந்த பாராட்டும் என்னை மேலும் சிறப்பாக தொடரத்தூண்டுகிறது.

தயூ கண்டிப்பாக என் பாட்டியிடம் சொல்லிவிடுகிறேன்.
இதையெல்லாம் கேட்டால் ரொம்ப சந்தோசப்படுவார்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

முதல்ல‌ அனந்த‌ மழை பேரு சூப்பர். இடைவிடாத‌ மழையாக‌ பொழிய‌ வாழ்த்துக்கள்.
எங்க‌ வீட்டிலும் நானும் என் தங்கையும் பாட்டியிடம் தான் வளர்ந்தோம்.
பாட்டியை அம்மா என்றே அழைப்போம்.
அவர் மடியில் படுத்து தினமும் இரவில் கதை கேட்போம். ராமாயணம், மகாபாரதக் கதைகளை அச்சுப் பிசகாமல் சொல்லுவார்.
சுவையாக‌ சமைப்பார். தினுசாக‌ தலை கட்டி விடுவார்.
"நிகிலா நேற்றிரவு பாடம் படித்தாள்" என்று ஒவ்வொரு எழுத்தாக‌, முத்தாக‌ எழுதி நோட்டில் கையெழுத்திட்டுத் தருவார்.
அம்மா என்றால் எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவதும் அவர் தான்.
என்னை உங்கள் பதிவு எங்கோ அழைத்துச் சென்று விட்டது.:)

;0

சாரலாக‌ நனைக்க‌ துவங்கியுள்ள
அனந்தமழை...

சறுகான‌ நினைவுகளை
ஆனந்தமாக‌ நனைத்து
உயிர்கொடுக்கின்றன‌...

துவங்கிய‌ வலைப்பதிவு
இனிதே நெடுந்தொலைவு செல்ல‌...
வாழ்த்துக்கள்...

அனந்த மழை பொழியட்டும் :) அன்பு நிறைந்த அசத்தல் ஆரம்பம், தொடருங்கள் அனந்தகௌரி, வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Renuka madam, arul madam thank you very much for your support.

No pains,No gains

ANANTHAGOWRI.G

அன்பு ஆனந்த‌ கௌரி,

முதல் பதிவை அன்புடன் ஆனந்தமாக‌ ஆரம்பிச்சிருக்கீங்க‌. வாழ்த்துக்கள்.

உங்க‌ தலைப்பை, பாடலாக‌ நிறைய‌ தடவை கேட்டிருந்தாலும், நீங்க‌ சொல்லியிருக்கும் விதத்தில், மனசில் நின்று விட்டது.

அருமை, தொடருங்கள் உங்கள் அழகான‌ பதிவுகளை.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி சீதா மேடம்.

அறுசுவை தோழிகள் எல்லோரும் தான் என்னுடைய Inspiration. எல்லா பெருமையும் உங்கள் எல்லொருக்கும் தான் சேரும்.

No pains,No gains

ANANTHAGOWRI.G