குடைமிளகாய் கார்விங் - 2

தேதி: September 22, 2014

5
Average: 5 (4 votes)

 

குடைமிளகாய் - சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
கேரட், முள்ளங்கி
பேபி கார்ன்
கீரைத் தண்டு
கூர்மையான கம்பி
கத்தரிக்கோல்
கத்தி
டூத் பிக்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
படத்தில் உள்ளது போல் மஞ்சள் நிற குடைமிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய பிறகு அதன் ஒரு பகுதி இவ்வாறு சிறிய பூ போல இருக்கும். மற்றொரு பகுதி பவுல் போல இருக்கும்.
சற்று நீளமான, மெல்லிய கேரட்டைத் தேர்ந்தெடுத்து தோல் சீவி, அதன் முனையில் டூத் பிக்கை லேசாக வெளியில் தெரியும்படி சொருகவும்.
பூ வடிவில் உள்ள குடைமிளகாயை கேரட்டின் முனையில் தெரியும் டூத் பிக்கில் சொருகிவிடவும்.
பவுல் போல இருக்கும் குடைமிளகாயின் மற்றொரு பாகத்தை எடுத்து, அதனுள்ளே கேரட்டை வைத்து அலங்கரிக்கவும்.
குடைமிளகாய் காம்பை கத்தரிக்கோலால் நறுக்கிவிட்டு, அதன் மேல் பகுதியை கத்தியால் இவ்வாறு சீவி எடுக்கவும். அதன் அடிப்பகுதி பவுல் போல இருக்கும். (மேல் பகுதியைத் தனியாக எடுத்து வைக்கவும்).
பவுல் போல இருக்கும் பகுதியை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள குடைமிளகாயில் கம்பியால் இலை வடிவத்தை வரைந்து ஓரங்களை கத்தியால் சீவிவிடவும்.
அதன் அடிப்பகுதியில் ஒரு டூத் பிக்கை சொருகிவிடவும்.
அதன் உட்புறம் தெரியும் டூத் பிக்கின் முனையில் பேபி கார்னைச் சொருகவும்.
அடிப்பகுதியில் தெரியும் டூத் பிக்கில் கீரையின் தண்டுப் பகுதியைச் சொருகி வைக்கவும். விரும்பிய நிற குடைமிளகாய்களில் இது போல் பூக்கள் செய்து கொள்ளவும்.
மேலே செய்த பூவைப் போல் சற்று வித்தியாசமாகச் செய்த பூ இது. இலை வடிவ இதழ் ஒன்றில், அதன் உட்புறமாக டூத் பிக்கை சொருகி, வெளிப்புறத்தில் பேபி கார்னைச் சொருகவும். உள்பக்கத்தில் தெரியும் டூத் பிக்கில் கீரைத் தண்டைச் சொருகிவிடவும்.
பிறகு தனியாக எடுத்து வைத்துள்ள குடைமிளகாயின் மேல் பகுதியின் ஓரங்களில் கத்தியால் பூ வடிவில் வளைவு, வளைவாக வரைந்து வரைந்த பகுதியை மட்டும் கத்தியால் மெதுவாக பெயர்த்து எடுக்கவும். அதன் அடிப்பகுதியில் டூத் பிக்கைச் சொருகவும். டூத் பிக் லேசாக மேல் பகுதியில் தெரிவது போல் இருக்க வேண்டும். முள்ளங்கியை தோல் சீவி சிறு வட்டமாக நறுக்கி மேலே தெரியும் டூத் பிக்கில் சொருகவும்.
குடைமிளகாயில் செய்த பூக்கள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்......வார்த்தையே இல்லை.....அமர்க்களமாக இருக்கு....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சோ ப்ரிட்டி அன்ட் சூப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

போகே மாதிரியே இருக்கு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சிம்ப்ளி சுப்பர்ப்! அந்தூரியம்... ஐடியா அருமையா இருக்கு. ட்ரை பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்

சூப்பரா இருக்கு
அந்தூரியம்?? அப்படின்னா ???

ஒரு வகைப் பூ
அன்புடன்
சுபா

be happy

நன்றி தோழி. என்ன‌ பூ என்று கூகுள் பண்ணப் பார்க்கப் போறேன். கேள்விப்பட்டதில்லை:)

கடைசிப் படத்திற்கு முதலில் உள்ள பூவை முயற்சி செய்து பார்த்தேன். அழகாக வந்தது. முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

நிகிலாவின் கேள்வியை இப்போதுதான் பார்த்தேன். அதற்குள் உங்களுக்குப் பதில் கிடைத்து விட்டது. :-)

‍- இமா க்றிஸ்

சிவப்பு நிறத்தில் ஒன்று செய்தேன் இன்று. சூப்பர். இயற்கையில் ஒரு அந்தூரியம் எப்படி இருக்குமோ அப்படியே வந்தது. இதையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்