அது ஏங்க‌ அப்படி ?

மக்களே,

அனைவரும் நலம் தானே. நீண்ட‌ இடைவெளிக்கு பின், மீண்டும் அறுசுவைக்கு... :)

இப்போ கொஞ்ச‌ நாளா என் மனச‌ நெருடற ஒரு விஷயம் தான் இது. அந்த‌ காலத்தில் பெண் குழந்தைகள் வேண்டாம்னு நினச்சவங்க‌ தான் அதிகம்.அப்படிபட்ட‌ ஆளுங்க‌ இப்பவும் இருக்காங்க‌ தான். ஆனா இப்போ அது என்ன‌ ட்ரென்டானு தெரில‌, பையன் வேணாம் பெண் தான் வேணும்னு நினைக்கறாங்க‌. அது நல்ல‌ வரவேற்க‌ வேண்டிய‌ விஷயம் தான். ஆனா அதுக்கு சொல்லும் காரணங்கள் தான் எனக்கு சரியா படல‌.. என்ன குழந்தைன்னு நாமளா முடிவு செய்ய முடியும் ?.

ஒரு பையன், ஒரு பெண் பிள்ளை இருக்கும் வீட்டுல‌ பெரியவங்க‌ பையன் முன்னாடியே பெண் பிள்ளையை தூக்கி வெச்சு பேசறது இப்போ அதிகமா நடக்குது. ஏன் பேரன் பேத்தி எடுத்த‌ பெரியவங்க‌ தான் இதை அதிகம் செய்யறாங்க‌. பெண் பிள்ளைனா பிரச்சனை இல்ல‌, பையன‌ பெத்தா தான் பதட்டமா இருக்கு, கல்யாணத்துக்கு அப்றம் அவன் மாறிட்டானு சொல்ற‌ பெரியவங்க‌ தான் அதிகம்.

அந்த‌ பையன் கல்யாணத்துக்கு முன்னமே கொஞ்சம் மூடியா எதையும் ஷேர் செய்யாத‌ குணத்துடன் இருந்து இருக்கலாம். அப்ப‌ எல்லாம் என்ன‌ காரணம் என‌ பெத்தவங்க‌ பார்க்காம‌ கல்யாணத்துக்கு அப்றம் அதே குணத்துடன் இருக்கும் மகனிடம் நீ எதையும் இப்போ சொல்றது இல்லனு,புதுசா பையன் மாறிட்ட மாதிரி பிரச்சனை பண்றது, பெண் பிள்ளையை கம்பேர் செய்வதுனு எல்லாம் நடக்குது..

பொண்ணுங்க‌ அப்படிதான். அம்மா அப்பாவிடம் கல்யாணத்துக்கு அப்றமும் நல்லா, இன்னும் அதிகமாவே பேசும்.வெளிநாடுனா சொல்லவே வேணாம். அம்மாவும் பொண்ணும் மணிக்கணக்கா பேசுவாங்க‌. அதையே மகனிடமும் எதிர்பாத்தால்? பொண்ணு இன்னிக்கு மண் சட்டியில் பூத்த‌ பூவில் இருந்து காலையில் கடைக்காரனிடம் போட்ட‌ சண்டை வரை எல்லாத்தையும் பெத்தவங்ககிட்ட‌ சொல்லும். அதே தன் மகள் இத்தனை விஷயத்தையும் அவளுடைய மாமியிடம் சொல்றாளானு யோசிக்க‌ மாட்டாங்க‌ இந்த‌ பெத்தவங்க‌. மகனும், மருமகளும் எதையும் சொல்றதுல்ல‌ என்ற‌ பிரச்சனையும், உன் தங்கச்சிய‌ பாரு இல்ல‌ அக்காவ‌ பாரு டெய்லி கால் பண்ணி எல்லாம் பேசுறானு புரியாம‌ கம்பேர் பண்ணுவாங்க‌. பசங்க‌ குணம், இருக்கும் வேலை டென்சன்,பிள்ளைகள் படிப்பு, செலவு, அப்பா அம்மா உடல், அது இதுனு இருக்கும் பிஸில‌ சொல்ல‌ வேண்டிய‌ முக்கியமான‌ விஷயத்தையும் சொல்ல‌ மறக்க‌றாங்க . இதை பெத்தவங்க‌ புரிஞ்சிக்கறது இல்ல‌.

அந்த‌ பையனும் இப்போ ஒரு அப்பா ஸ்தானத்தில் இருக்கானு யோசிக்காம‌ அவன் முன்னாடியோ இல்ல‌ தன் மருமகள் முன்னாடியோ பையனே ஆகாது, பொண்ணு தான் பெஸ்ட் என‌ பேசுவது எவ்ளோ தவறு?. வாரிசுன்னு சொல்லிக்க,வீடு கட்டி கொடுக்க‌, மச்சான் சீர்களை மகளுக்கு சரியாக‌ செய்ய‌, அம்மா அப்பாவை பாத்துக்க‌, தாய் மாமனா துணையா நிற்க‌ எல்லாம் மகன் தேவை. பூரிச்சும் போவாங்க‌.. ஆனா அதிகம் பேசலை மற்றும் மருமக‌ வந்துட்டா என்ற‌ சொற்ப‌ காரணங்களுக்காக‌ மகனை விட்டு கொடுத்து பேசவும் தயாரா இருப்பாங்க‌..பல ஆண்கள் மனதில் இருக்கும் பாசத்தை வெளிக்காட்ட தெரியாம தான் இருக்காங்க.என்ன செய்ய..பெத்தவங்க காட்ட சொல்லி எதிர்ப்பார்ப்பது தப்பு இல்ல, ஆனா எக்ஸ்ப்ரசிவான குணம் உள்ள பெண் பிள்ளையோடு ஒப்பிடுவது தான் தப்பு.

மாடு குரைக்காது, நாய் முட்டாது.. இது போல‌ பெண் பிள்ளைக்கு இருக்கும் குணம் ஆண் பிள்ளைக்கு இருக்காது.அதை புரிஞ்சிட்டாலே போதுமே. அதே தன் மகள் அவள் புகுந்த‌ வீட்டில் எப்படி இருக்கா என‌ ஆராய்ந்து பார்த்தாலே எல்லாம் புரியும்.

இது கல்யாணம் ஆனவங்க‌ கதி. கல்யாணம் ஆகாம‌ பேச்சுலரா வாரம் முழுக்க‌ ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வாரம் ஒரு முறை வீட்டுக்கு செல்லும் மகனிடமும் மல்லுக்கு நிற்க‌ வேண்டியது இந்த‌ பெற்றோர்கள்.இது மாதிரியான‌ சம்பவங்களை இப்போ அடிக்கடி எல்லா வீடுகளிலும் நான் பாத்துட்டு இருக்கேன். அதுல இன்னும் வருத்தபட வேண்டிய விஷயம் என்னனா பொறுப்பான நல்ல பிள்ளைக்கு தான் இந்த சோதனை இன்னும் அதிகம்.சொல் பேச்சு கேட்க்காத ஊதாரி பிள்ளைனா இவன் எப்பவும் அப்டி தான் என அலுத்துக்கிட்டு அந்த பையனிடம் பாசத்தை கொட்டுவாங்க.நானும் பெண் தான், என்னை மெச்சும் போது சந்தோசமே பட்றேன், அதே சமயம் ஆண்களின் மனதையும் புரிய‌ முடிகிறது. பல‌ வீடுகளில் ஆண்கள் பெத்தவங்களுக்கு புரியவைக்க‌ தெம்பு இல்லாம‌ அமைதியா விட்டுட்டு போயிடறாங்க‌. அதுக்கு என்ன‌ பேரு தெரியுங்களா? தப்புனு அவனுக்கே புரியுது அதான் அமைதியா போறான் என‌ சொல்வது. மகள் மாதிரி மருமக ஆக முடியாது.அம்மாவின் இடத்தை என்ன செஞ்சாலும் மாமி பிடிக்க முடியாது.மாமிக்கும்,மருமகளுக்கும் ஒரு ஸ்பேஸ் இருக்கு. உண்மையா சொல்ல போனா அது இருக்கணும்.அதை எல்லாரும் புரிஞ்சிக்கணும்.எல்லா மகன் மருமகளும் சரியாவே நடந்துக்கறாங்கனும் நான் சொல்லல.

தான் செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டுவது, நல்லபடி வளர்ப்பது பெத்தவங்க கடமை, அதை பிள்ளையிடம் சொல்லி காட்டலாமா? பிள்ளையும் அதே போல சொல்லி காட்டினால் என்ன ஆகும்? குடும்பமா இல்லை கார்ப்பரேட்டா ?

இன்னும் சொல்ல போனா பெரியவங்க குழந்தைகளா மாறிட்டு வராங்க என ஒரு காரணம் சொல்லிக் கொள்வது. உண்மைதான். ஆனா வயதை காரணமா வெச்சுகிட்டு எல்லாத்தையும் டேக் இட் ஃபார் க்ரெண்டட் என எடுத்துக்கறது சரி இல்ல.. வயதான அப்பாக்கு ட்ரேண்டி பைக்கை சொல்லி கொடுப்பது, படியில் கையை பிடித்துக் கொண்டு ஏற்றுவது,வெய்ட்டை தூக்கி வைப்பது போன்ற பல ஃபிசிகல் ஆக்டிவிட்டியை மகன் செய்து கொடுக்கும் போது குழந்தை போல சந்தோசப்படும் பெரியவங்க, அதே பையன், அங்க நீங்க அப்படி பேசி இருக்க கூடாது, இந்த விதத்தில் இதை சொல்லுங்க போன்று , மெண்டலி தன் பெத்தவங்களை ஷேப் செய்ய நினைக்கும் போது மட்டும் எனக்கே சொல்லி தரான் என கோவபடுவதில் அர்த்தம் இல்ல.

என்னடா பெரியவங்களுக்கு எதிரா பேசறேன்னு நினைக்க வேணாம்.வயதை காரணம் காட்டி பல வீடுகளில் அலுச்சாட்டியம் செய்பவர்களை மட்டுமே சொல்கிறேன்.இவர்களை பார்த்தால் வயதான பின் என் பிள்ளைகளிடம் முடிந்த வரை எப்படி எல்லாம் நடந்துக் கொள்ள கூடாது என புரிகிறது.

இந்த‌ அறுசுவையில் பெரியவங்களும் இருக்காங்க‌, பெரியவங்களா ஆக போறவங்களும் இருக்காங்க‌.. இப்போ பெரியவங்களா இருக்கவங்க‌ கொஞ்சம் இந்த‌ விஷயத்தை யோசித்து பாருங்க‌லாமே ... ஆண் பிள்ளையை வெச்சு இருப்பவங்க‌ எதிர்காலத்துல‌ இப்படி நடந்துக்காம‌ இருக்க‌ முயற்சி செய்யலாமே . ஆண் பிள்ளைக்கும் , பெண் பிள்ளைக்கும் குணத்திலும் , செய்கையிலும் பல‌ வித்தியாசம் இருக்குனு புரிஞ்சு நடந்தாலே பிரச்சனை எதுவும் வராது.சொல்ல நினைச்சதை எவ்ளோ தெளிவா சொன்னேன்னு தெரியல.. :)

5
Average: 5 (5 votes)

Comments

எனக்குப் புதுசா இருக்கு இந்த டாபிக். போஸ்ட் படிச்சாச்சு. இனி... இங்க வர கமண்ட் எல்லாம் படிக்கக் காத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அருமையா சொல்லியிருக்கீங்க ரம்யா...பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்.அதே நேரம் நாங்க செய்றது மட்டும்தான் சரின்னு அவங்க சொல்றத எல்லா சமயத்லயும் ஒத்துக்கமுடியாது.

குழந்தையில் ஆண், பெண் பாகுபாடு எதற்கு?
முதலில் அவர்களை ஒப்பீடு செய்வதே தவறு.
சில‌ குழந்தைகளுக்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது.
அதை பெரியவங்க‌ தான் புரிஞ்சுக்கனும்.
பையன் தான் பெஸ்ட், என்றோ அல்லது பொண்ணு தான் பெஸ்ட் என்றோ பெரியவங்க‌ சொல்லும் போது முதல்ல‌ என்ன‌ நடக்கும் தெரியுமா?
அந்த‌ அண்ணன் தங்கையிடம் ஒரு வேற்றுமையை தங்களை அறியாமல் இவர்களே உருவாக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை.
அது போல‌, மகளையும் மருமகளையும் ஒப்பிடக் கூடாதுன்னு தான் சொல்லுவேன்.
ரெண்டு பொண் குழந்தைகள் இருந்தால், அவங்க‌ ரெண்டு பேரும் வெவ்வேறு குணாதிசயங்களோடு இருப்பது போல‌ தான் இதுவும். ஏற்றுக் கொள்ள‌ வேணும்.

//ஆனா இப்போ அது என்ன‌ ட்ரென்டானு தெரில‌, பையன் வேணாம் பெண் தான் வேணும்னு நினைக்கறாங்க‌. அது நல்ல‌ வரவேற்க‌ வேண்டிய‌ விஷயம் தான்//

இல்லை ரம்யா. இதை நான் வரவேற்க மாட்டேன். . ரெண்டுமே நம்ம‌ குழந்தை தான். ரெண்டும் வேணும். விதவிதமா ஆடை அணிகலன்களைப் பார்க்கும் போது மனசு பெண் குழந்தைக்கு ஆசைப்படும். அதோடு சேர்ந்து விளையாட‌ சப்போர்ட்டா ஒரு ஆண் குழந்தையும் வேணும்.
எல்லாத்துக்கும் மேலே நாம‌ ஒப்பிடாம‌ இருந்தால் அவங்க‌ ரெண்டு பேரும் ஒற்றுமையா இருப்பாங்க‌.

//கல்யாணத்துக்கு அப்புறம் அவன் மாறிட்டானு சொல்ற‌ பெரியவங்க‌ தான் அதிகம்.//
ம் நிறைய‌ பேரு இப்படி சொல்லிட்டு தான் இருக்காங்க‌.
அவன் தன் மனைவியையும் விட்டுத் தர‌ இயலாது இல்லியா? இதை பெரியவங்க‌ புரிஞ்சுக்கனும். கணவன், மனைவிக்கு இடையிலே வேரு யாரும் புகுந்து செல்ல‌ அனுமதியில்லை.
இதுக்கு மேலே சொல்ல‌ முடியலை ரம்யா.:)

ரம்யா அக்கா நலமா..? க்யூட் குட்டிஸ் ரெண்டும் சமத்தா இருக்காங்களா ..?

சேம் கம்பேரடிவ் ஸ்டேஸ்ட்மெண்ட்ஸ் நானும் தினம் பக்கத்து வீடுங்கள் ல‌ நிறைய கேட்டுக்கிட்டே தான் இருக்கு....

இவங்கலாம் இப்படிதான் நு அவ்வளவு ஈஸியா விட்டுடவும் முடியுறதில்லை... அப்ப‌டி விட்டா அதுக்கும் ஒரு குறை நு... குறை கண்டுப்பிடிக்குறதுக்காகவே பேசுற பண்ணுற‌ எல்லாத்தையும் நோட் பண்றவங்க கிட்ட‌ இருந்து எப்படி தப்பிக்க‌ :(

ரொம்பவே சிரமம் தான் :( ஒரு 10 நிமிஷம் வந்து அவங்க‌ வீட்டு கதையை நம்மக்கிட்ட‌ சொல்லிட்டு போறத‌ கேக்குற நமக்கே இவ்வளவு கஷ்டம் நா அந்த‌ வீட்லயே எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொருத்துக்கிட்டு இருக்குறவங்க‌ நிலை தான் ரொம்பவே கஷ்டம் .. நீங்க‌ சொன்ன‌ மாதிரி அவங்களே யோசிச்சு மாறுனா தான் அக்கா உண்டு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

போஸ்ட் எனக்கு புதுசு ;) ஆண் பிள்ளை வேணும் என்பவர்களை எனக்கு தெரியும்... எந்த பிள்ளையா இருந்தாலும் ஓக்கேன்னு சொல்றவங்களையும் தெரியும்... இது புதுசா இருக்கே பெண் பிள்ளை கேட்பது. எங்க வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுமே வேறு வேறு மாதிரி... அப்பறம் ஆணும் பெண்ணும் இருந்தா வித்தியாசம் இருக்க தானே செய்யும். ம்ம்... என்னமோ பெரியாங்க நீங்க சொன்னா கேட்டுக்குறேன் இந்த சின்ன பிள்ளை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா என்னை தெரியுதா..எப்டி இருக்கீங்க..

இம்ஸ்...

இது புதுசு இல்ல இம்ஸ் .. பல வீடுகளில் நடப்பதை கண் கூடா நான் பார்க்கிறேன் .இதை யாரும் இது வரை பேசாமல் அல்லது இதை பற்றி பதிவிடும் எண்ணம் இல்லாமல் வேணும்னா இருந்து இருக்கலாம். :(

பரிமளா
அப்படி ஒத்துக்காத பெரியவங்க தன் மகன் தன் நல்லதுக்கு தான் சொல்லுவான் என புரிந்துக் கொண்டால் நல்லது

நிகிலா
சரியா சொன்னிங்க..
//இல்லை ரம்யா. இதை நான் வரவேற்க மாட்டேன். . ரெண்டுமே நம்ம‌ குழந்தை தான்.// இல்லை நிகிலா ..அட்லீஸ்ட் இந்த மன மாற்றமாவது இந்த சமூகத்தில் வந்து இருப்பது கண்டிப்பா வரவேற்க வேண்டிய ஒன்னு தான். எத்தனை மோசமாக இருந்தது இல்லையா.ஆனா உல்டாவா ஆகி இருப்பது தான் கவலை.எதுனாலும் ஒகே என பலர் சொல்வது நல்லது. ஆனா இது தான் வேணும் என நினைப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்.இரண்டுமே ஒன்று தான் அதற்குள்ள வேறுபாடு இப்படி தான் என புரிந்து ஏற்றுக் கொள்ளும் காலம்மும் இனி வரும்.

கனி
என்னை சுற்றி இருக்கும் பலரும் இதை என்னிடம் புலம்பும் போது தான் இது என்ன இப்படி இருக்கு என எனக்கு தோன்ற ஆரம்பித்தது.. பேச்சுலரா இருக்கும் என் அண்ணா உட்பட :)

வனி
//ஆணும் பெண்ணும் இருந்தா வித்தியாசம் இருக்க தானே செய்யும்.//
இந்த குணாதிசிய விஷயத்தை சில பெரியவங்க புரிஞ்சு தன் மகனை, மகளுடன் கம்பேர் செய்து கடுப்பாக்காமல் இருந்தாலே போதும்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இக்காலத்தில் பெண் பிள்ளைக்குத்தான் பெத்தவர்களிடம் பாசம் அதிகம் என சொல்லிக் கொண்டாலும், ஆண் பிள்ளை வேண்டாம் என அத்தனை எளிதில் யாரும் எண்ணுவதாக எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் ஆண் மகனின் திருமணத்தின் போது பெண்ணைப் பெற்றவர்கள் கையைக் கட்டிக் கொண்டு அவர்கள் முன் நிற்ப்பதில் ஏனோ ஆணைப் பெற்றவர்களுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சி.
நீங்கள் குறிப்பிடு விடயம் ஆண் - பெண்ணைப் பெற்றவர்கள் மட்டுமே செய்யும் தவறல்ல. பெண் பிள்ளைகளை மட்டுமே கொண்டவர்களும் பிள்ளைகளுக்குள்ளே வேறு பிரித்து பேசுவதும், நடத்துவதும் நடை முறையில் தான் உள்ளது.

\\பொறுப்பான நல்ல பிள்ளைக்கு தான் இந்த சோதனை இன்னும் அதிகம்.சொல் பேச்சு கேட்க்காத ஊதாரி பிள்ளைனா இவன் எப்பவும் அப்டி தான் என அலுத்துக்கிட்டு அந்த பையனிடம் பாசத்தை கொட்டுவாங்க//
நூறு சதம் உண்மை. என் கண் ஊடாக பார்த்துக் கொண்டுதான் உள்ளேன்.

\\மகள் மாதிரி மருமக ஆக முடியாது// என் அனுபவத்தில் மகள் ஆன மருமகள் உண்டு. ஆனால் அவள் தலை மேலும் மிளகாய் அரைத்தார் அவள் மதர் இன் லா. பின் அவளாய் உணர்ந்து நீங்கள் சொன்னது போன்ற ஸ்பேசை உண்டாக்கிக் கொண்டாள்.
\\வயதான அப்பாக்கு ட்ரேண்டி பைக்கை சொல்லி கொடுப்பது, படியில் கையை பிடித்துக் கொண்டு ஏற்றுவது,வெய்ட்டை தூக்கி வைப்பது போன்ற பல ஃபிசிகல் ஆக்டிவிட்டியை மகன் செய்து கொடுக்கும் போது குழந்தை போல சந்தோசப்படும் பெரியவங்க, அதே பையன், அங்க நீங்க அப்படி பேசி இருக்க கூடாது, இந்த விதத்தில் இதை சொல்லுங்க போன்று , மெண்டலி தன் பெத்தவங்களை ஷேப் செய்ய நினைக்கும் போது மட்டும் எனக்கே சொல்லி தரான் என கோவபடுவதில் அர்த்தம் இல்ல.\\ இதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம். எந்த பெற்றோரும் தம் காலத்துக்குப் பின் தம் பிள்ளைகள் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ வேண்டுமென நினைப்பதுண்டு. ஆனால் அத்தகையவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறே நீங்கள் மேற்கூறியவைகள் தான், இப்படியிருந்தால் பிள்ளைகளுக்குள் ஒரு வெறுப்புணர்ச்சியே உண்டாகும். இதற்க்கு வித்திடுபவர்கள் பெற்றோரே.
நிச்சயம் நம் பெரியவர்கள் மாறுவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நாமாவது இதை பாடமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இது "வாழையடி வாழையாக" அல்லது "தொற்று நோய்" போன்று நம் இந்திய சுமுதாயத்தை சீர் குலைத்து விடும். என் வாழ்வில் எனது இரண்டாவது குழந்தை பிறந்தது முதலே இதைப் பற்றி சிந்திக்க தொடங்கி விட்டேன். ஒரு நாளும் என் குழந்தைகளை வேறு பிரித்து பார்ப்பதை நினைக்க கூட முடிவதில்லை.

//ஆண் மகனின் திருமணத்தின் போது பெண்ணைப் பெற்றவர்கள் கையைக் கட்டிக் கொண்டு அவர்கள் முன் நிற்ப்பதில் ஏனோ ஆணைப் பெற்றவர்களுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சி.// முற்றிலும் உண்மை. ஆண் மகன் எதற்கெல்லாம் தேவை என நான் கொடுத்த‌ லிஸ்டில் இதையும் சேர்க்க‌ வேண்டும்.

//எந்த பெற்றோரும் தம் காலத்துக்குப் பின் தம் பிள்ளைகள் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ வேண்டுமென நினைப்பதுண்டு.//

உண்மை தான். என் உறவினரிலேயே.. திருமணம் செய்து கொண்ட‌ பெண் பிள்ளையிடம் பொறுப்பான‌ வெலையில் உள்ள‌ தன் மகனை சொற்ப‌ காரணங்களுக்காக‌ குறை சொல்வது.அவரும் அக்கா என்ற‌ முறையில் தன் தம்பியை அழைத்து அட்வைஸ் மழை பொழிவது. இதை கேட்டு கேட்டு அந்த‌ பையன் அக்கா ஃபோன் என்றாலே அவாய்ட் பண்ணும் நிலையை அவனின் பெற்றோர்கள் உருவாக்கிவிட்டனர். உடன்பிறப்புக்கள் ஒற்றுமையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ எல்லா பெற்றவர்களும் கண்டிப்பாக‌ நினைப்பார்கள். நல்லது தான். ஆனால் அதை அதன் போக்கிலே விடாமல், இருவரையும் கடைசி வரை ஒற்றுமையாக‌ இருக்க‌ வைக்கும் பேர்வழி என‌ இழுத்து பிடிப்பார்கள்.. அப்போது தான் அங்கே விரிசல் ஆக‌ தொடங்குகிறது. இயல்பாக‌ விட்டாலே அந்த‌ உற‌வு அழகானதாய் இருக்கும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

More than your comment for this post, I enjoyed your footer.

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

I was so frustrated, but now, after reading your footer I am relaxed. Yes, my Mother-in-Law is with me, treating me good in front of my husband and treats me very bad when he is out. My hubby knows it but says "namma yedir paarthathu thaane. But she is my mom. I want to take care of my mom" Just controlling myself.

Your footer gave me really mental rela]]]]ief.
thank you.

""""" வாரிசுன்னு சொல்லிக்க,வீடு கட்டி கொடுக்க‌, மச்சான் சீர்களை மகளுக்கு சரியாக‌ செய்ய‌, அம்மா அப்பாவை பாத்துக்க‌, தாய் மாமனா துணையா நிற்க‌ எல்லாம் மகன் தேவை. பூரிச்சும் போவாங்க‌.. ஆனா அதிகம் பேசலை மற்றும் மருமக‌ வந்துட்டா என்ற‌ சொற்ப‌ காரணங்களுக்காக‌ மகனை விட்டு கொடுத்து பேசவும் தயாரா இருப்பாங்க‌..பல ஆண்கள் மனதில் இருக்கும் பாசத்தை வெளிக்காட்ட தெரியாம தான் இருக்காங்க.என்ன செய்ய..பெத்தவங்க காட்ட சொல்லி எதிர்ப்பார்ப்பது தப்பு இல்ல, ஆனா எக்ஸ்ப்ரசிவான குணம் உள்ள பெண் பிள்ளையோடு ஒப்பிடுவது தான் தப்பு. """

"""""தான் செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டுவது, நல்லபடி வளர்ப்பது பெத்தவங்க கடமை, அதை பிள்ளையிடம் சொல்லி காட்டலாமா? பிள்ளையும் அதே போல சொல்லி காட்டினால் என்ன ஆகும்? குடும்பமா இல்லை கார்ப்பரேட்டா ?""""""

"""ஆனா வயதை காரணமா வெச்சுகிட்டு எல்லாத்தையும் டேக் இட் ஃபார் க்ரெண்டட் என எடுத்துக்கறது சரி இல்ல.. """"

"""""""""" ஆண் பிள்ளையை வெச்சு இருப்பவங்க‌ எதிர்காலத்துல‌ இப்படி நடந்துக்காம‌ இருக்க‌ முயற்சி செய்யலாமே """"""""

என் தம்பிக்கு பெண் பார்க்கிறார்கள். என் மாமியாரிடம் இருந்து எப்படி...... என் அம்மா தன் மருமகளிடம் எப்படி நடக்கக்கூடாது என்று குறிப்பெடுத்துகொண்டு இருக்கிறேன்.

நான் யோசித்ததை எல்லாம் எழுதி இருக்கிறீர்கள்.

இரண்டு, மூன்று முறை படிக்க வைத்த பதிவு..
நிறைய கருத்துக்கள். ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கீங்க :-)
ரொம்ப நன்றிங்க.

நட்புடன்
குணா

அன்பு ரம்யா,

நீண்ட‌ இடைவெளிக்குப் பிறகு, உங்க‌ பதிவைப் பார்த்து மகிழ்ச்சி.

நலம்தானே, குட்டீஸ் எப்படி இருக்காங்க‌?

நிறைய‌ பேர் வீட்டில் நடக்கிறதை எழுதியிருக்கீங்க‌.

தாமரை இலைத் தண்ணீர் மாதிரி, பட்டும் படாமலும் இருக்க‌, பெரியவங்க‌ பழகிக் கொள்ளணும்.

அதே போல‌, பெண்ணுக்கும் பையனுக்கும் மனசு வேற்றுமை வந்தால், நம்ம‌ காலத்துக்கு அப்புறம் அவங்க‌ ஒட்டாம‌ போயிடுவாங்களேங்கற‌ நிஜம் நிறைய‌ பேருக்குத் தெரியறதில்லை.

சரியாகணும் எல்லாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அப்ப்படிங்களா? மிக்க‌ நன்றி.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எப்படி இருக்கிங்க‌. ஒரு முறை கால் பண்ணினேன். நீங்க‌ அட்டன்ட் செய்யல‌.. குழந்தைகள் நலம்.. :) நாங்களும் நல்லா இருக்கோம்.

தாமரை இலை தண்ணீர் போல‌ பெரியவங்க‌ இருக்க‌ தேவையில்லைங்க‌ சீதாலஷ்மி.அவங்க‌ இல்லாம‌ நாம‌ இல்ல‌.. ஆனா பெற்ற‌ மக்களிடம் பாகுபாடு பார்க்காமல் , தன் பிள்ளைகளின் பாசத்தை புரிந்துக் கொண்டால் போதும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)