வெண்டைக்காய் மோர் குழம்பு

தேதி: September 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

மோர் - இரண்டேகால் கப்
வெண்டைக்காய் - 7
பச்சை மிளகாய் - 6
பொட்டுக்கடலை - ஒன்றரை மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்டைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மூடி வைத்திருந்து, வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மஞ்சள் தூள், உப்பு, தனியா, பொட்டுக்கடலை, சீரகம் ஆகியவற்றைப் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் அரைத்த விழுதைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2 நிமிடங்கள் கழித்து வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு, கறிவேப்பிலையைத் தூவி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பொங்கி வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
இந்த மோர் குழம்பு செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அம்மா உங்க குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கும் இதைசெய்து பார்த்திட்டு சொல்கிறேன்

ரெசிபி சூப்பர்ம்மா :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நான் கொஞ்சம் வேற‌ மாறி செய்வேன். இது ஈஸியா நல்லா இருக்கு. பார்க்கவே அருமையா இருக்கு. நீங்க‌ செஞ்சா டேஸ்ட் சொல்லவா வேணும். சூப்பரா இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

பார்க்க அருமையாக உள்ளது. தயிரை அப்படியே வைத்தால் திரியாத சொல்லுங்க அம்மா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!