நெஞ்சு வலி அவசரம்

தோழிகளே, அவசரம்
எனக்கு 25 வயது ஆகிறது,

என்னவென்று தெரியவில்ல‌ அடிக்கடி நெஞ்சு நடுவில் ஏதோ
அடைப்பது போல் பாரமாகவும் , வலியாகவும் இருக்கிறது அது எதனால்?

நெஞ்சு குழியின் நடுவில் இன்று கொஞ்சம் அதிகமாகவே வலிக்கிறது, என்ன‌ வைத்தியம் செய்யலாம் ஏன் இவ்வாறு இருக்கிறது ஆலோசனை கூறுங்கள் ...

காரணம் எது என்று தெரியாமல்... இதற்கெல்லாம் கை மருந்து செய்யும் காலம் இது அல்ல. இங்கு வந்து கேட்கும் அளவு யோசனையாக இருக்கிறது என்றால் ஒரு தடவை உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. அவர் எதுவும் இல்லை என்றால் பிறகு வீட்டு வைத்தியம் பார்க்கலாம்.

ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடுறீங்களா?

சில உணவுகள் சிலருக்கு இப்படியான சங்கடங்களை உண்டுபண்ணும். கவனித்துப் பார்த்துத் தவிர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

சரியா சாப்பிடறீங்களா? சிலருக்கு அல்சர் பிரச்சனை இருந்தால்/தொடங்கினால் இப்படி இருக்கும். நெஞ்சு குழி வலிக்கும். முதுகும் சில‌ சமாம் பாரமாவது போல் இருக்கும். மருத்துவரை பார்ப்பதே நல்லது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களோட‌ ஆலோசனைக்கு ரொம்ப‌ நன்றி.

ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடுறீங்களா?‍ இல்லை, பசிக்கும் போது சாப்பிடுவேன் அவ்ளோதான் நைட் 11 மணிக்கு சாப்பிடுவேன்,
மருத்துவரிடம் சென்றேன் அவர்கள் ஏதோ 2 கலரில் மாத்திரை கொடுத்தார்கள் அன்று மட்டும் சரியானது, ஆனா மற்படியும் அதே பெயின் இருக்கதான் செய்கிறது, டாக்டரிடம் கேட்டதற்கு நெஞ்சுகுழி வலித்தால் கேஸ் பிராப்ளம்னு சொன்னாங்க‌,

ஒவ்வொருத்தர் ஒண்ணு ஓன்ணு சொல்றாங்க‌ எனக்கு வலி குறைஞ்ச‌ பாடு இல்ல‌, வேற‌ டாக்டர்கிட்ட‌ தான் காட்டபும் போல‌,

இப்போ நல்லாவே நெஞ்சுகுழி இன்னும் அதிகமா வலிக்குது, ஏதோ அடைச்சது போல‌ பாரமா இருக்கு..... ஏன்னு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க‌.

பதில்லுக்கு ரொம்ப‌ நன்றி.

நீங்க‌ சொன்னதா கூட‌ இருக்கலாம்ன்மு சொன்னாங்க‌,
சாப்பிடறதுனால் நமக்கு ரொம்ப‌ தூரம்,
ஆனா முன்ன‌ விட இப்போ ஒழுங்கா சாப்பிடறேனு நினைக்கிறேன்.
அல்சர் ஏற்கனவே டாப்லெட் சாப்பிட்டு சரியாச்சு,
அல்சர்னா வயிறு தானே வலிக்கும் நெஞ்சு கூடவா வலிக்கும்.

அப்படி இருந்தா என்ன‌ டீரிட்மென்ட் எடுக்கலாம்ப்பா சொல்லுங்க‌, வீட்ல‌ கைவத்தியம் செய்யலாமா,

ஒரு மாசம் கழிச்சு வந்து பதில் போட்டு இருக்கிறீங்க. இன்னமும் அதே கேள்வி.

//இல்லை, பசிக்கும் போது சாப்பிடுவேன்// முதலில் வேளாவேளைக்கு சாப்பிடப் பாருங்கள். //நைட் 11 மணிக்கு சாப்பிடுவேன்,// தூங்குவது எத்தனைக்கு! இது உங்கள் பிரச்சினைக்கான அடுத்த காரணம். இந்த இரண்டையும் நீங்கள் சரியாகச் செய்யாத வரை மருந்து மாத்திரைகளாற் பலனிராது.

//ஏதோ 2 கலரில் மாத்திரை// ;) ஏனோதானோவென்று மருந்து எடுக்கப் போக வேண்டாம். எதைச் செய்தாலும் முழுமனதாகச் செய்ய வேண்டும். எப்படி! //அன்று மட்டும் சரியானது,// ஒரு நாளைக்கான மாத்திரை என்று கொடுக்க மாட்டார்களே! மூன்று நாட்களுக்காவது கொடுத்திருப்பார்களே! ஒரு நாள்தான் மாத்திரை எடுத்தீர்களா? //நெஞ்சுகுழி வலித்தால் கேஸ் பிராப்ளம்// காஸ் ஒழுங்காக சாப்பிடாமலிருந்தாலும் வரும், ஆகாததைச் சாப்பிட்டாலும் வரும். பயப்படுவது மாதிரிக் கூட வலிக்கலாம்.

//ஒவ்வொருத்தர் ஒண்ணு ஓன்ணு சொல்றாங்க‌ // யாரு சொன்னாங்க! ஒழுங்காக சாப்பிடுங்க. ஆரம்பத்திற்குக் கூடவே மாத்திரையையும் எடுப்பதுதான் சரி. மெதுவாக சரியாகும். அதன் பின்னால்... மாத்திரையை மட்டும் விட்டுவிடலாம். அதுவும் டாக்டர், 'மாத்திரை இனி வேண்டாம்.' என்று சொன்னால் மட்டும். :-) அது போலவே தான் சாப்பாட்டுப் பழக்கமும். டாக்டராக இனி 'ஒழுங்கா சாப்பிடத் தேவையில்லை,' என்று சொன்னால் தவிர ஒழுங்காக நல்லபடி சாப்பிட வேண்டும். அல்லாவிட்டால் திரும்ப வரும். //எனக்கு வலி குறைஞ்ச‌ பாடு இல்ல‌,// & // வேற‌ டாக்டர்கிட்ட‌ தான் காட்டபும் போல‌,// :-) எந்த டாக்டர்ட்ட காட்டினாலும் உங்க சாப்பாட்டையும் மருந்தையும் நீங்கதான் சாப்பிட வேணும். அதை ஒழுங்காகச் சாப்பிட வேணும். உங்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது. உடம்பு, நீங்க பட்டினி போடுறீங்க என்று சொல்லாம சொல்லிக் காட்டுது. சின்னப் பொண்ணா இருக்கிறீங்க, இப்பவே கவனியுங்க.

//ஏன்னு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க‌.// சாப்பிட்டுட்டு வாங்க முதல்ல. :-)
//முன்ன‌ விட இப்போ ஒழுங்கா சாப்பிடறேனு நினைக்கிறேன்.// நினைக்கக் கூடாது, நிச்சயம் தெரிய வேணும். :-)

//அல்சர் ஏற்கனவே டாப்லெட் சாப்பிட்டு சரியாச்சு,// ஆகிச்சு, பிறகும் எப்போ வயிற்றைப் பட்டினி போட்டாலும் திரும்ப எட்டிப் பார்க்கும்.
//அல்சர்னா வயிறு தானே வலிக்கும் நெஞ்சு கூடவா வலிக்கும்.// நெஞ்சும் வலிக்கலாம். இரண்டும் அருகருகேதான் இருக்கு.

//அப்படி இருந்தா என்ன‌ டீரிட்மென்ட் எடுக்கலாம்ப்பா சொல்லுங்க‌, வீட்ல‌ கைவத்தியம் செய்யலாமா,// செய்யலாம். ஒழுங்கா சாப்பிடுறதுதான் கைவைத்தியம். மீதி எல்லாம் பிறகுதான். ஒரு வாரம் ஒழுங்காகச் சாப்பிடுங்க. பிறகும் இப்படியே இருந்தால் டாக்டர்ட்ட போய்ருறது பெட்டர்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ ரொம்ப‌ நன்றி உங்கள் பதிலுக்கு,
நெட் கார்டு ஆகி விட்டது அதான் உடன் பதில் இல்லை,
நீங்கள் சொல்வதை முயற்சி செய்கிறேன்,

11 மணிக்கு சாப்பிடுவேன், தூங்குவது எத்தனைக்கு ? 11.15 க்கு ,
மாத்திரை 3 வேளைக்கு கொடுத்தாங்க‌, அப்போ தேவலாம் ஆனா அடுத்த‌ நாளே வலி ஸ்டார்ட் ஆச்சு,
நீங்க‌ சொல்வது சாப்பாடு பழக்கத்தை ஒழுங்கு பண்ணனும், உங்க‌ அறிவுரைக்கு நன்றி. அல்சர்னால‌ நெஞ்சு வலிக்கும் இப்போது தெரிந்துகொண்டேன்,
இப்போ ஒரு தோழிக்கு பேசினேன் அவங்களும் புண்ணா இருக்கும் அதான் வலிக்குது சொன்னாங்க‌,
எனக்கு இப்போ தான் நியாபகம் வருது, போன‌ மாசம் ரொம்ப‌ வேகமா எல்லாரும் போட்டி போட்டு விளையாட்டா சாப்பிடும் போது சூடான இட்லி அப்படியே உள்ள‌ போயிருச்சு தாங்க‌ முடியாத‌ வலி ,வயிறுக்குள்ள‌ போயி சுட்டது, அதோட‌ பாதிப்பா தான் இருக்கும்னு நினைக்கிறேன், 2 டேஸ் சாப்பிடும் போது வலிச்சது இதை சொல்லி டாக்டரிடம் மருந்து வாங்கி சாப்பிடறேன்,

அன்ட் மறுபடியும் உங்க‌ அக்கறைக்கு ரொம்ப‌ நன்றிங்க‌.

மேலும் சில பதிவுகள்