அறுசுவை தளம் கிடைக்காத காரணம்

அறுசுவை சர்வர் இடம்பெற்றுள்ள நிறுவனத்தில் உண்டான நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக, கடந்த 24 மணி நேரம் நமது அறுசுவை தளம் இயங்காத நிலை உருவாயிற்று. நெட்வொர்க் முழுமையாக பணியாற்றவில்லை என்பதால், அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பிரச்சனையை விரைவில் சரி செய்ய வலியுறுத்தியதைத் தவிர, வேறு எதுவும் எங்கள் பக்கமிருந்து செய்ய இயலாத நிலையில் இருந்தோம். அவர்களிடம் சர்வர் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான தளங்களும் இயங்கவில்லை. பிரச்சனையின் தீவிரம் காரணமாக இதனைச் சரிசெய்ய ஒரு நாள் கால அவகாசம் எடுத்துள்ளார்கள். இனி இதுப்போன்ற பிரச்சனைகள் வராது என்ற உறுதியையும் அளித்துள்ளார்கள். நம்புவோமாக..

இதனால் அறுசுவை நேயர்களுக்கு உண்டான சிரமத்திற்கு மிகுந்த வருத்தம் தெரிவிக்கின்றோம்.

//அறுசுவை நேயர்களுக்கு உண்டான சிரமத்திற்கு// ம்... கொஞ்ச நஞ்ச சிரமமா இது! கீபோர்ட்டை குத்து குத்து என்று குத்தி, அது உடையாத குறைதான். ;) பிறகு.... நானாவே 'இப்படித்தான் இருக்கும்,' என்று எதையோ நினைச்சு சமாதானமாகிப் போனேன்.

‍- இமா க்றிஸ்

நான்கூட இவ்ளோ நேரம் internet connection சரியா இருக்கான்னு check பண்ணிட்டு இருந்தேன். இப்பதானே தெரியுது..

nan yen computer rompa thittivitten

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்