எளியவகை சட்னிகள்!!

அனைவருக்கும் வணக்கம் :)

கீழ்க்கண்ட குறிப்புகள் மிகவும் துரிதமாக செய்யக்கூடியவை. அதற்காக சுவையில் குறை இருக்கும் என நினையாதீர்கள். சுவையிலும் குறையாமல், நேரமும் எடுக்காமல் செய்யக்கூடிய இச்சட்னி வகைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் :)

தேங்காய் சட்னி:

தேவையான பொருட்கள்:

தேங்காய் 1மூடி
மல்லி தழை 1கைப்பிடி அளவு
பொட்டுக்கடலை 4டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு 3பல்
வற மிளகாய் 2
கறிவேப்பிலை 2 இணுக்கு
சின்ன வெங்காயம் 2

செய்முறை:

இவை அனைத்தயும் பச்சையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு கடுகு,உளுந்து, 1 இணுக்கு கறிவேப்பிலை தாளிதம் செய்து கொள்ளவேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வேர்க்கடலை சட்னி : (1)

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை1கப்

தேங்காய்சிறுதுண்டு (விரும்பினால்)

புளிசிறுநெல்லிக்காய் அளவு

வறமிளகாய்4

உப்புதேவையான அளவு

கறிவேப்பிலை4 இணுக்கு

செய்முறை:

வறுத்த வேர்க்கடலை கல் இல்லாமல் இருக்கிறதா என பார்த்துக்கொளவும். விருப்பமிருந்தால் தோலுடன் போடலாம்.
இல்லையேல் தோலை அகற்றிவிடவும்.

மிக்ஸிஜாரில் மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் போட்டு
அரைத்து எடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை சட்னி ஒருநிமிடத்தில் ரெடி.

சூடான சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வேர்க்கடலை சட்னி: (2)

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை 1கப் (வறுத்து தோல்நீக்கியது)
புளி கோலிக்குண்டு அளவு
சி. வெங்காயம் 100 கிராம்
வ. மிளகாய் 3
தேங்காய் 1/4 கப்
தனியா 1/4 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை 2 இணுக்கு
கடலைபருப்பு, உளுந்துபருப்பு 1டேபிள்ஸ்பூன்(தலா)
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு,உளுந்து பருப்பு போட்டு சிவந்தவுடன் சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்பு வறமிளகாய், கறிவேப்பிலை, மல்லி,சீரகம் போட்டு வதக்கவும்.
ஆறிய பின்பு, தேங்காய், புளி, வறுத்த வேர்க்க்டலை சேர்த்து அரைக்கவும்.
வேர்க்கடலை சட்னி ரெடி.

இந்த முறையும் சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். நெய் சேர்த்தால் சுவைகூடும்.
~~~~~~~<><><><>~~~~~~~

அரைத்து சுவைத்து எப்படி இருந்ததென்று கூறுங்கள். நன்றி! வணக்கம் _()_ :)

Average: 5 (3 votes)

Comments

எல்லாமே சட்டுனு செய்யற‌ சட்னி.
வேர்க்கடலை சட்னி செய்ததில்லை
கட்டாயம் செய்துட்டு சொல்றேன் அருள்.
தினமும் காலையும் மாலையும் தேவைப்படும் ஒன்று இது.
யூஸ்ஃபுல் டிப்ஸ்:)

குயிக் அன்ட் சூப்பர் சட்னிஸ் :) மை வஃபேவரிட் வேர்க்கடலை (1) சட்டினி சூப்பர் அக்கா :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சட்னி மூன்றுமே நல்லா இருக்கும் என்று தெரியுது அருள். முதலாவது படம் சூப்பர்.

ஒரு குட்டி டவுட்டு... நாங்க செத்தல் மிளகாய் என்போம். அதனால் சரியாகத் தெரியவில்லை. அது வறமிளகாயா வரமிளகாயா! பெயர்க் காரணம் யாருக்காவது தெரியுமா? திட்டாதீங்க யாரும். சும்மா ஒரு ஆர்வக் கோளாறுதான். :-)

‍- இமா க்றிஸ்

மூன்று சட்னிஉம் சூப்பர் அருள், வேர்க்கடலை (2) எப்போது நான் செய்வது, முதல் வகை இனி முயற்சி செய்கிறேன்.. வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//ஒரு குட்டி டவுட்டு..// டீச்சருக்கே டவுட்டா..;).
நாங்க செத்தல் மிளகாய் என்போம். அதனால் சரியாகத் தெரியவில்லை. அது வறமிளகாயா வரமிளகாயா!// சந்தேகமில்லாமல் வரமிளகாய் தான் இமாம்மா..:)
பெயர்க் காரணம் யாருக்காவது தெரியுமா? திட்டாதீங்க யாரும். சும்மா ஒரு ஆர்வக் கோளாறுதான். // குட் கொஸ்டீன் ஆனா நேக்கும் பதில் தெரியலையே..;)
நீங்க கேட்காத டவுட்டுக்கு நான் பதில் சொல்லட்டா..;), இந்த மிளகாயை கேரளாவில் கப்பல்மிளகாய் என்போம், அந்த காலத்தில் இந்த மிளகாயை கப்பல் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார்களாம் அதனால் கப்பல் மிளகாய் என்று பெயர் வந்ததாம்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கப்பல் வாழைப்பழம் தெரியும். கப்பல் மிளகாய்... தகவல் புதுசா இருக்கு. நன்றி சுமி. :-)

‍- இமா க்றிஸ்

வர மிளகாய் - வரண்ட மிளகாய்... ஈரத்தன்மை இல்லாத மிளகாய். காய்ந்த மிளகாய் என்றும் சொல்வோம். மிளகாய் வற்றல் என்றும் சொல்வோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மிக்க நன்றி :) வரக்கு பதிலா வற தான் வரும்னு நினைக்கிறேன்.
வறண்ட மிளகாய் என்ற அர்த்தத்தில் வறமிளகாய் என்று எழுதியுள்ளேன்.
எனக்கென்னவோ இந்த 'ற' தான் சரினு தோணுது. இப்ப ஒரு நிலம் காஞ்சுபோய் கிடக்குனு வெய்ங்க, என்ன சொல்வோம், வறண்டு கெடக்கு அப்படினுதானே! வர என்னும் சொல்லுக்கு வரம் என்ற பதம் அல்லவா வரும்.
ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சொல்லி இருக்கேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வெகு விரைவில் செய்துடலாம். 3 வது சட்னிக்கு மட்டும் சின்னவெங்காயம் உரிக்க நேரம் பிடிக்கும். மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி, கல்யாணப்பொண்ணே மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//முதலாவது படம் சூப்பர். // எம்பிக்குதித்தேன் வானம் இடித்தது :)))

வறமிளகாய்தான் கரீட்டு :)

//திட்டாதீங்க யாரும். சும்மா ஒரு ஆர்வக் கோளாறுதான். :-)// சேச்சே... குட்டி டவுட்டுனு சொல்லிட்டு பெரிசா யோசிக்கவெக்கிறீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்கிறீங்க..:)) வறண்ட நிலம், வறதேங்கா, வறமல்லி, வறண்டகிணறு..........
மிக்க நன்றி இமா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி ரொம்ப நாளைக்கு அப்புரம் உங்க பதிவு கண்டு மகிழ்கிறேன், மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கப்பல் வாழைப்பழம், கப்பல் மிளகாய் இரண்டுமே எனக்கு தெரியாது :( மலையோரத்தில் இருக்கிறதால தெரிலனு நினைக்கிறேன் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அதிகம் நான் செய்யும் சட்னி இவை. ஆனால் வேர்கடலையில் இரண்டாம் வகை
இன்று இரவு செய்துபார்க்கிறேன். நன்றி அருள்.

ஓ அப்படியா.. இரண்டாம்வகை எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க ரேணு, மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

chancea இல்ல‌. சூப்பர் சட்னி. ரொம்ப‌ ரொம்ப‌ தேங்க்ஸ். என் வீட்டில் வயதானவர் தேங்காய் வேணாம்னு சொல்வார். இந்த‌ சட்னி எனக்கு தான் ரொம்ப‌ யூஸ்ஃபுல்லா இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

Arul useful recipes.. 3rd chutney ithuvarai seithathillai. Seythu parthu solren.

Kalai

சட்னி எல்லாம் சூப்பர் அருள். எங்க வீட்ல இட்லி, தோசையெல்லாம் எப்போதாவது தான் செய்வோம். தேங்காய் சட்னி செய்வதில்லை. உங்க குயிக் சட்னியெல்லாம் பார்க்க சாப்பிடணும் போல இருக்கு. அடுத்து யாராவது விருந்தினர் வரும் போது செய்துட வேண்டியதுதான்.

அம்மா நலமா இருக்காங்களா?

சந்தோஷமா இருக்கு... நிறையப் பேரைக் குழப்பி இருக்கேன். ;))) கேள்வியும் நானே பதிலும் நானே!! ;)))

சுமி சொன்னாங்க... //சந்தேகமில்லாமல் வரமிளகாய் தான்// என்று. ;))
வனி //வர மிளகாய் - வரண்ட மிளகாய்// என்று அர்த்தம் சொன்னாங்க. நன்றி வனி.
வனிக்குப் பதிலா அருள் சொன்னாங்க.... //வரக்கு பதிலா வற தான் வரும்// என்று. ஆனால்... //இப்ப ஒரு நிலம் காஞ்சுபோய் கிடக்குனு வெய்ங்க, என்ன சொல்வோம், வறண்டு கெடக்கு அப்படினுதானே! // இல்லையே! ;)) இமா பக்கம் "வரண்டு கிடக்குது," என்றுதானே சொல்லுவோம். ;D
//வர என்னும் சொல்லுக்கு வரம் என்ற பதம் அல்லவா வரும்.// ஒரு சொல்லுக்குப் பல அர்த்தம் இருக்கலாம். 'வர' தனித்து ஒரு சொல் அல்ல. சொல்லின் பகுதி மட்டுமே. வரதட்சணை எனும் போது வரன்; வரப்பிரசாதம் எனும் போது வரம். 'வர' தனியே வர மாட்டுது போல.

//வறமிளகாய்தான் கரீட்டு :)// இல்லை என்று என் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன அருள். ;D 'சட்' என்று பதிலளி தட்டிராதீங்க. பொறுமை! பொறுமை! மீதியையும் படிச்சுட்டு பதில் தட்டலாம். ;)

//அங்கதான் நீங்க நிக்கிறீங்க..// அவ்வ்! என்ன பண்ண! யாராச்சும் ஒரு நாற்காலி கொடுத்தால் உட்கார்ந்துருவேன். ;) டவுட்டு சும்மா ஈஸியா வருதே எனக்கு. ஹ்ம்! எனக்குத் தெரிந்த வரை, வ..ர..ண்ட நிலத்தில் கிணறு வ..ர..ண்டு இருக்கும். ;) //வறதேங்கா// கேட்டதில்லை. கொப்பரை என்று தெரியும். //வறமல்லி,// இதுவும் கேட்டறியேன். கொத்துமல்லி என்று புரிகிறது.

இப்போ அருளின் பதில் பார்த்து, லிஃப்கோவின் 'ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்' அகராதியைப் புரட்டி 'drought' என்று தேடினால்.. அருள் சொன்னது போல வ..ற..ட்சி என்கிறது. மனசு சமாதானமாகவில்லை. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தேடினால்.. ஹாஹாஹா!! 'வறட்சி' எனும் சொல்லுக்கு விளக்கம்... 'வரட்சி' என்னும் சொல்லில் ஆரம்பித்துப் பன்னிரண்டு வரிகள் எழுதி இருக்கிறார்கள். முதல் ஒன்பது வரிகளும் வ..ர..ண்டு போயிருக்க, கடைசி மூன்று வரிகள் வ..ற..ண்டு இருக்கின்றன. ;)

ஆகவே... இரண்டுமே சரி என்று தெரிகிறது. புதிதாக ஒன்று கற்றிருக்கிறேன். நன்றி அருள்.

நறநறவென்று பல்லைக் கடிக்காமல் பொறுமையாகப் பதில் சொன்ன அனைத்துத் தோழமைகளுக்கும் இமாவின் அன்பு நன்றிகள். _()_ :-)

‍- இமா க்றிஸ்

பாலநாயகி மிக்க நன்றி :) எனக்கு ரொம்பவே பிடிக்கும் இந்த சட்னி வகைகள், செய்து பாருங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கலை மூணாவது ரெசிப்பி நான் அடிக்கடி அரைப்பேன். புளி, சின்னவெங்காய டேஸ்ட்டுடன் நல்லா இருக்கும். நிச்சயம் சொல்லுங்கள், மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாணி//எங்க வீட்ல இட்லி, தோசையெல்லாம் எப்போதாவது தான் செய்வோம்.// எங்க வீட்ல இட்லி தோசை இல்லாத நாட்கள் மிக அபூர்வம் :)) தேங்காய் சட்னில, பச்சை வெங்காயம் 2 மட்டுமே சேர்த்தால் போதும். செய்து பார்த்து சொல்லுங்க வாணி :)

அம்மா நல்லா இருக்காங்க வாணி, மிக்க நன்றி :)உங்களோட மெயில் ஐடி வேணுமே!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//சந்தோஷமா இருக்கு... நிறையப் பேரைக் குழப்பி இருக்கேன். ;))) // ஹங்ங்க்க்க்க்க்
ஆனா நாங்க குழம்பலியே... எப்பூடி :)))

// 'வர' தனியே வர மாட்டுது போல.// ஆமால்ல, வரவேண்டும், வரம்வேண்டும், தனியே 'வர'வரவே மாட்டேங்குது.. ( ஆஹா ஆப்டுக்கிச்சு) இங்கோரிடத்தில் சொற்பிழை கண்டேன்..தாயே!! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அன்னையே :)))

//இப்ப ஒரு நிலம் காஞ்சுபோய் கிடக்குனு வெய்ங்க, என்ன சொல்வோம், வறண்டு கெடக்கு அப்படினுதானே! // இல்லையே! ;))// வறட்சி நிவாரணப்பணிதானே தவிர, வரட்சி நிவராணப்பணி கிடையாது. இவற்றையெல்லாம் யோசித்து பார்த்து வறமிளகாய் என்று எழுதினேன். (என்னமா ஒரு பில்டப்பூ)

//ஆகவே... இரண்டுமே சரி என்று தெரிகிறது. புதிதாக ஒன்று கற்றிருக்கிறேன். நன்றி அருள். நறநறவென்று பல்லைக் கடிக்காமல் பொறுமையாகப் பதில் சொன்ன அனைத்துத் தோழமைகளுக்கும் இமாவின் அன்பு நன்றிகள். _()_ :-)// சின்ன விசயத்தை மிகவும் சுவாரசியமானதாக்கியமைக்கு உங்களுக்குத்தான் நன்றிகள் இமா _()_ :) இது போன்ற சுவாரசியங்களை அடிக்கடி கொண்டுவாருங்கள் இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//வரட்சி நிவராணப்பணி கிடையாது.// நிச்சயமாகக் கிடையாது அருள். நீங்க சொல்வது சரிதான், அது வரட்சி நி..வ..ரா..ணப்பணி கிடையாது - வரட்சி நி..வா..ர..ணப் பணி. :-)

வரட்சி, வறட்சி இரண்டுமே சரிதான் அருள். நீங்களே கூகுள் செய்து பாருங்க. ஒரு இடத்தில் 'ர' போட்டிருந்தால் இன்னொன்றில் 'ற' போட்டிருப்பார்கள். 'வரட்சி' தப்பு என்று எங்கும் சொல்லவில்லை.

//இங்கோரிடத்தில் சொற்பிழை கண்டேன்..தாயே!! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அன்னையே// ;)) என் கமண்ட், உங்க கமண்ட் எல்லாமே நாலு தடவை படிச்சுப் பார்த்தாச்சு. என்ன சொல்ல வரீங்க என்று புரியவே இல்லை. ஆகவே.... இமா இந்தத் தலைப்பிலிருந்து வாபஸ்ஸ்ஸ். :-) அருள் நிம்மதியாக இருக்கும்படி வரம் தந்தேன். இனி இந்தப் பக்கம்... வரமாட்டேன். ;) அடுத்த இடுகையில் சந்திப்போம். :-)

‍- இமா க்றிஸ்

அன்பு அருள்,

சட்னி எல்லாமே சட்டுன்னு செய்யற‌ மாதிரி இருக்கு. சூப்பர். சூப்பர்.

புக் மார்க் பண்ணி வச்சிக்கிட்டேன். அவசியம் செய்வேன்.

நன்றி, நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

dear frds
yanaku thirumanm agi 10 matham agirathu anal idhu varai kulandhai ilai .yanaku udaluravu mudithavuden athigamaga vellai padukirathu.idhai thaduthu nan karpam thariga yana seiya vendum.yen kanavaruku kulandhai iladhathu periya kuraiyaga ulathu.melum yen udampu heat.nan computer-il than velai seikeren
help me pls

என்னோட மெயில் ஐடி உங்களுக்கு விரைவில் கிடைக்கும் அருள்

superb! it is very useful for me.thank you arutselvi

கிடைத்தது வாணி, மெயில் போட்டிருக்கேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//நிச்சயமாகக் கிடையாது அருள். நீங்க சொல்வது சரிதான், அது வரட்சி நி..வ..ரா..ணப்பணி கிடையாது - வரட்சி நி..வா..ர..ணப் பணி. :-)// இமா, தவறை ஏத்துக்கொண்டேன். ஆனா திரும்ப‌ போய் திருத்தமுடில..:(

// 'வரட்சி' தப்பு என்று எங்கும் சொல்லவில்லை.// தப்பில்லையா? சரி இதோட‌ வற‌(ர‌)ட்சிய‌ இதோட‌ விட்டுடறேன்.

//இனி இந்தப் பக்கம்... வரமாட்டேன். ;) //பயந்துட்டேன்..:(
//அடுத்த இடுகையில் சந்திப்போம். :-)// நிம்மதியாகிட்டேன் :)
மிக்க‌ நன்றி இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.