தேதி: September 25, 2014
துணி
எம்ப்ராய்டரி ஃப்ரேம்
எம்ப்ராய்டரி நூல்
ஊசி
துணியை ஃப்ரேமில் பொருத்திக் கொள்ளவும். ஊசியில் நூல் கோர்த்து ஊசியை துணியின் அடிவழியாக விட்டு துணியின் மேற்புறமாக இழுக்கவும். மேலே இழுத்த ஊசியை படத்தில் உள்ளது போல் சற்று இடைவெளிவிட்டு துணியில் குற்றவும்.

பிறகு ஊசியை சிறிதளவு துணியில் நுழைத்து துணியின் மேல் புறத்தில் இவ்வாறு வைக்கவும்.

படத்தில் உள்ளது போல் ஊசியில் நூலைச் சுற்றிவிட்டு, ஊசியை இழுக்கவும். (நூல் சுற்றி ஊசியை இழுத்த பிறகு அந்த இடத்தில் சிறு வளைவு போல் சுருண்டு இருக்கும்).

மீண்டும் சற்று இடைவெளிவிட்டு, ஊசியைக் குற்றி மேற்சொன்ன முறையில் தைக்கவும்.

தொடர்ந்து இதே போல் தைத்து முடிக்கவும். இந்த வகைத் தையலை குழந்தைகளின் ஆடைகளில் பார்டர் போல தைக்கலாம்.

Comments
தையல்
உபயோகமான தையற் குறிப்பு. குறித்து வைக்கிறேன்.
- இமா க்றிஸ்
ஸ்க்ரோல் ஸ்டிச் (Scroll Stitch)
டீம் நல்ல குறிப்பு :) கொஞ்சம் பழகுற வரைக்கும் கஷ்டமா இருக்கும் நு நினைக்கிறேன் :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்