ஃபெல்ட் பர்ஸ்

தேதி: September 29, 2014

5
Average: 5 (4 votes)

 

ஃபெல்ட் துணி - விரும்பிய நிறம்
லைனிங் துணி
கத்தரிக்கோல்
ஸ்கெட்ச்
எம்ப்ராய்டரி நூல்
ஊசி
வெல்க்ரோ
சம்கி
க்ளூ

 

ஃபெல்ட் துணியில் பின்பக்கத்தில் 15 செ.மீ அகலமும், 17 செ.மீ உயரமும் கொண்ட ஒரு சதுர வடிவம் வரையவும். படத்தில் காட்டியுள்ளது போல் 17 செ.மீ உயரத்தை 7 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ என மூன்றாகப் பிரித்து கோடுகள் வரைந்து கொள்ளவும். அதன் மேல் ஒரு அரை வட்டம் வரைந்து துணியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய ஃபெல்ட் துணியின் அளவிற்கு லைனிங் துணியையும் நறுக்கி எடுத்து வைக்கவும். பிறகு மீதமுள்ள ஃபெல்ட் துணியில் 7 செ.மீ உயரமும், 3 செ.மீ அகலமும் கொண்ட அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கிக் கொள்ளவும்.
அவற்றில் ஒரு துண்டை எடுத்து, நறுக்கிய பெரிய ஃபெல்ட் துணியில் நடுவில் 3 செ.மீ அளவில் கோடு வரைந்துள்ள பக்கத்தில் வைத்து ரன்னிங் தையல் போல் போட்டு முடிச்சுப் போடவும்.
அதன் இருபுற ஓரங்களிலும் பெரிய துணியின் 7 செ.மீ அளவுள்ள பக்கங்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து ரன்னிங் தையல் போலத் தைக்கவும்.
பெரிய துணியின் மற்றொரு பக்கத்திலும் இதே போல் சிறிய துணியை வைத்துத் தைத்துக் கொள்ளவும். இப்போது பர்ஸின் அடிப்பக்கம் தயார்.
ஃபெல்ட் துணியின் உள்பக்கம் வெளிப்பக்கமாக இருப்பது போலவே வைத்துக் கொண்டு, அரை வட்டத் துணியின் ஒரத்தில் லைனிங் துணியை வைத்து அரை வட்டத்தை மட்டும் முதலில் தைக்கவும்.
லைனிங் துணியை அரை வட்டப் பகுதியில் வைத்துத் தைக்கும் போது, அதன் உட்புறம் இவ்வாறு இருக்கும்.
அடுத்து லைனிங் துணியை பர்ஸின் வலது பக்க ஓரத்துடன் சேர்த்துத் தைக்கவும்.
இடது பக்கம் லைனிங்கைச் சேர்த்து தைப்பதற்கு முன்பாக பர்ஸின் வாய்பகுதி ஒரங்களைச் சரி செய்து வைத்துத் தைக்கவும். பிறகு பர்ஸின் இடது பக்கத்தில் லைனிங்கைச் சேர்த்துத் தைகக்வும்.
தைத்து முடித்ததும் லைனிங் பர்ஸின் உள்பக்கமாக இருக்கும்படி பர்ஸைப் பிரட்டிக் கொள்ளவும்.
அரை வட்டப் பகுதியின் ஓரங்களில் படத்தில் உள்ளது போல் தைத்துக் கொள்ளவும். பர்ஸின் உள்ளே வெல்க்ரோ வைத்து தைக்கவும். படத்தில் உள்ளது போல் நான்கு இதழ் கொண்ட பூக்கள் போல் தைத்துக் கொண்டு அதன் இடையில் சம்கி ஒட்டி அலங்கரிக்கவும்.
ஃபெல்ட் துணியில் செய்த பர்ஸ் ரெடி. தையல் மிஷினில் தைத்தால் அரை மணி நேரத்தில் முடித்துவிடலாம். கைகளால் தைப்பதற்கு அதிக நேரம் ஆகும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு டீம்.
கலர், பூக்கள் எல்லாமே பொருத்தமாக அமைந்து இருக்கிறது.

‍- இமா க்றிஸ்