Facebook arusuvai fans group

அறுசுவையில் இடம்பெற்றுள்ள குறிப்புகளைப் பார்த்து சமைப்பவர்கள், அதை படம் எடுத்து அவ்வபோது அறுசுவைக்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்புகளில் படங்கள் இல்லாத பட்சத்தில் எங்களுக்கு வரும் படங்களில் நல்ல படங்களை அந்த குறிப்பிற்கு இணைக்கின்றோம். மற்ற படங்களை வேறு எங்கும் வெளியிட இயலவில்லை. ஆரம்ப காலங்களில் உறுப்பினர்கள் செய்துப் பார்த்து படம் எடுத்து அனுப்புவதை அந்தக் குறிப்பிற்கு கீழேயே இணைத்து வந்தோம். அதில் வேறு பல சிக்கல்கள் இருந்ததால், பிறகு அப்படி இணைப்பதை விட்டுவிட்டோம்.

தற்போது சமூக வலைத்தளங்களை இதற்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இது எல்லோருக்கும் எளிதாக இருப்பதோடு, நிறைய நேயர்களைச் சென்றடைய வசதியாகவும் இருக்கும். ஏற்கனவே Facebook ல் இருந்த ARUSUVAI என்ற க்ரூப் ஒன்றை இதற்கு பயன்படுத்தவுள்ளோம். இது ஒரு closed group. நேரடியாக இணைவது இயலாது. விருப்பம் உள்ளவர்கள் ரிக்வெஸ்ட் அனுப்பும்போது அவர்களது பெயர்களை அட்மின் பொறுப்பில் உள்ளவர்கள் இணைப்பார்கள்.

இந்த குழுமத்தில் இணைவதன் மூலம், நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் விசயங்களை மற்ற உறுப்பினர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் செய்து பார்க்கும் சமையல் குறிப்புகளை உடனுக்குடன் படங்கள் எடுத்து இணைக்கலாம். சமையல் குறிப்பு மட்டுமில்லாது, கைவினைப் பொருட்களின் படங்களையும் இணைக்கலாம். இதைத் தவிர, உங்களது கதை, கவிதைப் போன்ற படைப்புகள் அறுசுவையில் வெளியாகும்போது அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த இந்த குழுமத்தை பயன்படுத்தலாம். வேறு பலன்களும் நிறைய இருக்கின்றன. உறுப்பினர்கள் கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து, ரிக்வெஸ்ட் அனுப்பி குழுமத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

<a href="https://www.facebook.com/groups/arusuvaifans/" target="_blank" > https://www.facebook.com/groups/arusuvaifans/ </a>

அன்பு தோழிகளே... நேற்று சிலருடைய ஜாய்ன் ரெக்வஸ்ட் ரிஜக்ட் ஆகி இருக்கும். :( அந்த வேலை என்னோடது தான். முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்.

நான் இது போல க்ரூப்புக்கு புதுசு. எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாதுங்க. அண்ணா அட்மின்ன் போட்டு விட்டுட்டாரா, அது பாட்டுக்கு ஜாய்ன் பண்ண சொல்லி வரவும் “என்னடா நாம தான் ஏற்கனவே ஜாய்ன் பண்ணிட்டமே, இது என்ன மறுபடி யாருன்னே தெரியாதவங்க எல்லாம் ஜாய்ன் பண்ண சொல்றாங்க?”னு என்னை ஜாய்ன் பண்ண சொல்லி வந்த ரிக்வஸ்ட்டுன்னு நினைச்சு ஒரு மூன்று ரிஜக்ட் பண்ணேன். அதன் பின் தான் கொஞ்சம் மண்டையில் லைட் எரிஞ்சுது... “ஏன் இது தொடர்ந்து வருது ஒருவேளை யாரும் ஜாய்ன் பண்ண கேட்கறாங்களோ, அட்மின் என்று இருப்பதால் நமக்கு வருதோ?” என்று. கொஞ்சம் தாமதமான அறிவு.

இன்று இங்கே அண்ணா போஸ்ட் பார்க்கவும், சந்தேகம் அதிகமானது. அண்ணாவை கேட்ட பின் தான் தெளிவாச்சுது. அதனால் நேற்று என்னால் ரிஜக்ட் செய்யப்பட்ட ரெவஸ்ட்டுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அண்ணாகிட்ட பேசிய பின் இங்கே வந்து இதை தெளிவுபடுத்தும் வரை இதே யோசனை... கோபப்படுவாங்களோ, தப்பா நினைப்பாங்களோன்னு. :( வனி பாவம்... அவளுக்கு இந்த க்ரூப் பற்றி எல்லாம் ஐடியா இல்லை. இனி தெரிஞ்சுக்கறேன் நிச்சயம்.

என்னை நம்பி ஒரு பொறுப்பை தந்த அண்ணாக்கும் சங்கடமா இருந்திருக்கும்... சாரி அண்ணா. அறியாமல் செய்த தவறு... தப்பா நினைக்காம மன்னிச்சுடுங்க ஃப்ரெண்ட்ஸ். ப்ளீஸ்... அவசியம் மீண்டும் ரிக்வஸ்ட் அனுப்பி ஜாய்ன் பண்ணிக்கங்க க்ரூப்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கைவினைப் பொருட்களின் படங்களையும் இணைக்கலாம்.// இதுதான் என்னை அதிகம் கவர்ந்து இருக்கு. :-) நல்ல யோசனை. பார்க்கலாம், யார் யார் எல்லாம் என் கைவினைகளை முயற்சி செய்து பார்க்கிறார்கள் என்று. ;) நான் முயற்சி செய்த கைவினை படங்கள் சில எங்கோ இருக்க வேண்டும். தேடிப் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையில் இது... இந்த இழையை மேலே கொண்டு வருவதற்கான பதிவு. :)

‍- இமா க்றிஸ்

நான் ஏற்கனவே அறுசுவை பேஸ்புக் ல் இணைந்து உள்ளேன், ஆனால் அதில் நான் சேர் செய்யும் அனைத்து பதிவுகளும் அறுசுவை பேஸ்புக்கில் பதிவாகிறது,

அதில் அடிக்கடி அறுசுவைக்கு சம்பந்தமில்லாத‌ பதிவுகள் அனுப்பவேண்டாம் என்று அட்மின் அனுப்புறாங்க‌ ,அது எனக்கு சொல்வது போன்று தோன்றுகிற்து நான் அனுப்பும் பதிவுகள் எதுவும் தவறானது அல்ல‌, இருந்தாலும் அறுசுவைக்கு சம்மந்தம் இல்லாத‌ பதிவுகளை நான் மற்ற‌ நண்பர்களுக்கு அனுப்பவதாக‌ இருந்தால், அது அறுசுவை பேஸ்புக்கில் இடம் பெறாமல் எப்படி தவிற்பது,

இல்லைனா அறுசுவைக்கா புதிய‌ ஐடி உருவாக்க‌ வேண்டுமா, புதிய‌ ஐடி சுதர்ஷா கிரியேட் செய்து இருக்கேன் யாருக்கும் எந்த‌ ரிக்வஸ்டும் கொடுக்கல‌ நீங்க‌ பதில் அனுப்பிய பிறகே கொடுக்கனும்

எல்லாம் நன்மைக்கே

அறுசுவைக்கென தனி ஐடி தேவையில்லை.. அறுசுவை பேஸ்புக் // எதை சொல்றீங்க?? பேஸ்புக் குரூப்பையா?? அல்லது பேஜையா??
நீங்கள் அறுசுவை பக்கத்தில் ஷேர் செய்தால் தான் அங்கே காட்டும்.. உங்கள் சொந்த பக்கத்தில் தானே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்..
ARUSUVAI இது தான் அறுசுவையின் Closed group.. இதை தான் சொல்றீங்ககளா??

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//அதில் நான் சேர் செய்யும் அனைத்து பதிவுகளும் அறுசுவை பேஸ்புக்கில் பதிவாகிறது,// அறுசுவை ஃபான்ஸ் க்ரூப் - க்ளோஸ்ட் க்ரூப். நீங்கள் ARUSUVAI Fans பக்கம் சென்று பதிவிட்டால் தவிர அங்கு உங்கள் பெயரில் இடுகைகள் எதுவும் ஷேர் ஆகக் கூடாது. //அனைத்து பதிவுகளும் அறுசுவை பேஸ்புக்கில் பதிவாகிறது,// என் கண்ணில் படவில்லையே!!

//அதில் அடிக்கடி அறுசுவைக்கு சம்பந்தமில்லாத‌ பதிவுகள் அனுப்பவேண்டாம் என்று அட்மின் அனுப்புறாங்க‌// :-) அடிக்கடி இல்லையே! ஒரே ஒரு போஸ்ட் பின் பண்ணி இருக்கு. அது எப்பவுமே முகப்பில் தான் இருக்கும்.

//அது எனக்கு சொல்வது போன்று தோன்றுகிற்து// :-) அது, இங்குள்ள மன்ற விதிமுறைகள் போல ஒரு போஸ்ட். தனிப்பட எடுக்க வேண்டாமே நீங்கள்.

//நான் அனுப்பும் பதிவுகள் எதுவும் தவறானது அல்ல‌,// இது பற்றி - ஸ்பாம்ஸ்... என் பெயரில் கூட வரலாம். :-) தவிர்க்க இயலாத விடயம் அது. அப்படி ஒரு போஸ்ட் வந்தால்... பார்ப்பவர்களுக்கு நானே பதிவிட்டது போல தான் தெரியும். ;(

//அறுசுவைக்கு சம்மந்தம் இல்லாத‌ பதிவுகளை நான் மற்ற‌ நண்பர்களுக்கு அனுப்பவதாக‌ இருந்தால், அது அறுசுவை பேஸ்புக்கில் இடம் பெறாமல் எப்படி தவிற்பது,// நீங்கள் உங்கள் தனிப்பட்ட கணக்கிலுள்ள சுவரில் வெளியிடும் பதிவுகள் அறுசுவை விசிறிகள் பக்கம் வராது.

//அறுசுவைக்கா புதிய‌ ஐடி உருவாக்க‌ வேண்டுமா,// தேவையில்லை. ஏற்கனவே உள்ள ஐடீயிலேயே தான் எல்லோரும் இணைந்திருக்கிறோம்.

‍- இமா க்றிஸ்

அறுசுவை பேஸ்புக் ஐடி சொல்றீங்களா நான் சரியா என்று பார்த்துகறேன்

எல்லாம் நன்மைக்கே

https://www.facebook.com/groups/arusuvaifans/

என்ன கேட்கிறீங்க? யாரைக் கேட்கிறீங்க? புரியல. :-) என் ஐடீ - Imma Chris இதை வைச்சு என்ன பார்க்கப் போறீங்கன்னு புரியலயே!

‍- இமா க்றிஸ்

உங்க ஐடி கொடுத்தற்கு நன்றி மா, ஆனால்' நான் நம்ம‌ அறுசுவை பேஸ்புக் இணைவதற்கான‌ ஐடி கேட்டேன், நான் இணைந்து இறுப்பது அறுசுவை குக்கிங் என்று உள்ளது, இது சரிதானா

எல்லாம் நன்மைக்கே

//அறுசுவை குக்கிங்// அதற்கும் இந்த அறுசுவை இணையத் தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. :-)

//நம்ம‌ அறுசுவை பேஸ்புக் இணைவதற்கான‌ ஐடி// https://www.facebook.com/groups/arusuvaifans/ தட்டுங்கள். ரிக்வெஸ்ட் கொடுங்க. பிறகு அட்மின் யாராவது சேர்த்து விடுவாங்க. நீங்க சரியான அறுசுவை க்ரூப்ல இல்லை என்பதை முன்பே அவதானித்தேன். :-)

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா, ரெக்யூஸ்ட் கொடுத்து உள்ளேன் sutharsha vt முடிந்தால் குரூப்பில் இணைத்து விடுங்கள்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்